Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: நீடிக்காத நிம்மதி... தங்கம் விலை மீண்டும் உயர்வு!

ஆபரணத் தங்கம் விலை நேற்று ஓரளவு குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதியை குலைக்கும் தகவலாக உள்ளது.

Gold Rate Chennai: நீடிக்காத நிம்மதி... தங்கம் விலை மீண்டும் உயர்வு!

Saturday February 22, 2025 , 2 min Read

ஆபரணத் தங்கம் விலை நேற்று ஓரளவு குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதியை குலைக்கும் தகவலாக உள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.45 குறைந்து ரூ.8,025 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.360 குறைந்து ரூ.64,200 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.49 குறைந்து ரூ.8,804 ஆகவும், சவரன் விலை ரூ.392 குறைந்து ரூ.70,040 ஆகவும் இருந்தது. ஆனால், இந்த விலை குறைவு போக்கு நீடிக்கவில்லை.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (22.2.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.8,045 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.64,360 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 உயர்ந்து ரூ.8,777 ஆகவும், சவரன் விலை ரூ.176 உயர்ந்து ரூ.70,216 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (22.2.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.107 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,07,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடரும் அதிரடி நடவடிக்கைகளின் தாக்கத்தால் சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலையற்ற சூழல் நிலவுகிறது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதும் தொடர்வதால் ஆபரணத் தங்கத்தின் விலையும் கூடி வருகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் நிலையின்றி தடுமாறி வருகிறது. இதனால், தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

gold

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,045 (ரூ.20 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,360 (ரூ.160 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,777 (ரூ.22 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.70,216 (ரூ.176 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan