Gold Rate Chennai: தங்கம் விலையில் தொடரும் வரலாறு காணாத உச்சம் - சவரன் எவ்வளவு தெரியுமா?
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இன்றும் விலை உயர்ந்து சவரன் ரூ.60,440-க்கு விற்கப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொடும் வண்ணம் உள்ளது. இன்றும் விலை உயர்ந்து சவரன் ரூ.60,440-க்கு விற்கப்படுகிறது. இது, பொது மக்களுக்கு அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,525 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.60,200 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.8,209 ஆகவும், சவரன் விலை ரூ.65,672 ஆகவும் மாற்றம் ஏதுமின்றி இருந்தது.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (24.1.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.7,555 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.60,440 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை 33 உயர்ந்து ரூ.8,242 ஆகவும், சவரன் விலை ரூ.262 உயர்ந்து ரூ.65,936 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (24.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.105 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,05,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை உயர்ந்து வருவது, ஆபரணத் தங்கத்தின் விலை குறையாததற்குக் காரணம்.
குறிப்பாக, அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பொருளாதார கொள்கைகள் சார்ந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதனால், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியதும் முக்கியக் காரணம். இந்த விலை உயர்வு போக்கு மேலும் நீடிக்கலாம் என வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,555 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,440 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,242 (ரூ.33 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,936 (ரூ.262 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,555 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,440 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,242 (ரூ.33 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,936 (ரூ.262 உயர்வு)
Edited by Induja Raghunathan