Gold Rate Chennai: மீண்டும் ஸ்லோவாக உயரும் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு!
நான்கு நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று உயரத் தொடங்கியுள்ளது.
4 நாட்களாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், புதிதாக தங்கம் வாங்குவோருக்கு நல்ல சான்ஸாக இருந்தது. பலரும் பழைய நகைகளை விற்று புதிய நகைகளை வாங்கிச் சென்றுள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்றே உயர்ந்துள்ளது.
சென்னையில் செவ்வாய்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 குறைந்து ரூ.8,185 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 குறைந்து ரூ.65,480 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 குறைந்து ரூ.8,929 ஆகவும், சவரன் விலை ரூ.264 குறைந்து ரூ.71,432 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை நிலவரம்- புதன்கிழமை (26.3.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.8,195 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.65,560 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 அதிகரித்து ரூ.8,940 ஆகவும், சவரன் விலை ரூ.88 உயர்ந்து ரூ.71,520 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை: சென்னையில் இன்று (26.3.2025) 1 கிராம் வெள்ளி விலை 1 ரூபாய் உயர்ந்து ரூ.111 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,11,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர கட்டணத் திட்டங்களில் சில தளர்வுகள் இருக்கும் என்று அறிவித்துள்ளார். எதிர்பார்த்த பாதிப்பை டாரிப் கொடுக்காது என்று சந்தை பங்கேற்பாளர்கள் நிலைகளை சமன் செய்ததால் புதன்கிழமை அமெரிக்க தங்கத்தின் விலைகள் நிலையாக இருந்தன. கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை சென்னை சந்தையில் சற்றே உயர்ந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,195 (ரூ.10 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,560 (ரூ.80 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,940 (ரூ.11 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.71,520 (ரூ.88 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,195 (ரூ.10 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,560 (ரூ.80 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,940 (ரூ.11 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.71,520 (ரூ.88 உயர்வு)