Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை ‘ஷாக்’ - இரண்டே நாளில் ரூ.1,000 உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து மீண்டும் புதிய உச்சம் நோக்கி செல்வது நகை வாங்குவோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,000 அதிகரித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

Gold Rate Chennai: தங்கம் விலை ‘ஷாக்’ - இரண்டே நாளில் ரூ.1,000 உயர்வு!

Wednesday March 05, 2025 , 2 min Read

ஆபரணத் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து மீண்டும் புதிய உச்சம் நோக்கி செல்வது நகை வாங்குவோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,000 அதிகரித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.8,010 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.64,080 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 உயர்ந்து ரூ.8,738 ஆகவும், சவரன் விலை ரூ.608 உயர்ந்து ரூ.69,904 ஆகவும் இருந்தது. இப்போது மேலும் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (5.3.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.55 உயர்ந்து ரூ.8,065 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.440 உயர்ந்து ரூ.64,520 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.60 உயர்ந்து ரூ.8,798 ஆகவும், சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.70,384 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (5.3.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.107 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,07,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தடுமாற்றம் கண்டுள்ளது. அத்துடன், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவையும் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

gold

குறிப்பாக, சர்வதேச அளவில் பங்குச் சந்தை வர்த்தம் பெரும் வீழ்ச்சி கண்டு வருவதால், பாதுகாப்பு கருதி தங்கம் மீதான முதலீடு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. இந்தப் போக்கு தொடரக் கூடும் என்றும் வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,065 (ரூ.55 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,520 (ரூ.440 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,798 (ரூ.60 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.70,384 (ரூ.480 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan