'ஏஐ-க்கு நீங்கள் மாறவில்லை எனில், உங்கள் வரைவு திட்டத்தை தூக்கி எறியவும்' - கிரீஷ் மாத்ரூபூதம்
சென்னையில் நடைபெற்ற SaaSBoomi 2025 நிகழ்ச்சியில், முக்கிய உரை ஆற்றிய Freshworks கிரீஷ் மாத்ரூபூதம், வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்திற்கு ஏற்ப புதிய வரைவு திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும், என அறிவுரைத்தார்.
மென்பொருளை ஒரு சேவையாக அளிக்கும் சாஸ் (SaaS) நிறுவனங்கள், வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்திற்கு ஏற்ப புதிய வரைவு திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும், என ஃபிரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ரூபூதம் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 'சாஸ்பூமி' (SaaSBoomi 2025) நிகழ்ச்சியில் முக்கிய உரை ஆற்றிய கிரீஷ் மாத்ரூபூதம், மனிதர்களுக்கான பணி செயல்முறையை உருவாக்குவதில் கவனம் செலுத்திய பழைய வரைவு திட்டத்தை நிறுவனர்கள் தூக்கியெறிய வேண்டும், என கூறினார்.
“இப்போதுள்ள சாஸ் அமைப்புகளை பார்த்தால் அவை எல்லாம் பழைய உலகிற்கு உருவாக்கப்பட்டவை. எல்லாவற்றையும் மனிதர்கள் கையாளப்போகின்றனர் எனும் அனுமானத்தில் அமைக்கப்பட்டவை. முறைப்படுத்தப்பட்ட தரவுகள் மட்டுமே பொருத்தமாக கருதப்பட்ட உலகிற்கு உருவாக்கப்பட்டவை. ஆனால், இவற்றில் பல மாறி வருகின்றன. ஏஐ ஏஜெண்ட்கள் மற்றும் மனிதர்கள் இணைந்து செயல்படக்கூடிய சூழலுக்கு ஏற்ப உங்களால் புதிய அமைப்பை மறு கற்பனை செய்ய இயல வேண்டும். இது பெரிய வாய்ப்பை அளிக்கிறது,“ என்றும் அவர் கூறினார்.

"மனிதர்களுக்கான பணி செயல்முறையை மட்டும் கருத்தில் கொள்ளும் பழைய வரைவு திட்டத்தை நீங்கள் தொடர்ந்து பின்பற்றினால், அதை தூக்கியெறிந்துவிட்டு, முதல் நாள் நிறுவனம் போல உங்கள் நிறுவனத்தை மறுகற்பனை செய்யத்துவங்க வேண்டும், என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருட்கள் தேசமாக உருவாக வேண்டும் எனும் இந்திய கனவு சாஸ் சேவையால் தீவிரமாகி, இப்போது ஏஐ நுட்பத்தால் வேகமாக வருகிறது, என்றார்.
“இந்தியாவுக்கு ஏஐ இன்னும் பெரிய வாய்ப்பு. இந்தியாவை பொருட்கள் தேசமாக்கும் (product nation) கனவே நம்மை இங்கு ஒன்றாகக் கூட வைத்திருக்கிறது. இது தான் நோக்கம் என்றால், சாஸ் முதல் கிரியாயூக்கி மற்றும் ஏஐ அதன் உந்துசக்தி,” என்றும் தெரிவித்தார்.
ஏஐ உற்சாகம் அளிப்பதாகவும், மிரட்சி தருவதாகவும் விளங்குவதாக தெரிவித்தவர், இது பல்வேறு துறைகளை மாற்றி அமைப்பது போல சாஸ் துறையையும் மாற்றி அமைக்கிறது என்றார்.
ஜெப் பெசோஸ் கூறியதை நான் நினைவுப் படுத்த விரும்புகிறேன்.
‘இன்று தான் உங்கள் நிறுவனத்தின் முதல் நாள். ஏஐ நுட்பத்திற்கு நீங்கள் ஏற்றபடி செயல்படவில்லை எனில், உங்கள் வரைவு திட்டத்தை தூக்கியெறியவும். சேலரி டேமை (மொத்த சந்தைக்கான சேவை) நோக்கி செல்லக்கூடிய வகையில் ஏஜெண்டிக் தீர்வுகளுக்கு மாற முடியும் எனில் உடன் செய்யுங்கள்.”
குறிப்பிட்ட பிரிவுகளுக்கான குறிப்பிட்ட ஏஐ சாஸ் தீர்வுகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு பெரிய வாய்ப்பு இருப்பதாகவும் மாத்ரூபூதம் தெரிவித்தார்.
ஆங்கிலத்தில்: புவனா காமத், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan