Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'அமெரிக்க வரியால் இந்திய ஏற்றுமதி 5.76 பில்லியன் டாலர் குறையலாம்' - ஆய்வு அமைப்பு கணிப்பு!

மருந்தகம், செமிகண்டக்டர் மற்றும் ஒரு சில எரிசக்தி பொருட்கள் தவிர இந்திய பொருட்கள் மீது 26 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க விதித்துள்ளது.

'அமெரிக்க வரியால் இந்திய ஏற்றுமதி 5.76 பில்லியன் டாலர் குறையலாம்' - ஆய்வு அமைப்பு கணிப்பு!

Monday April 07, 2025 , 3 min Read

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக, கடல்சார் பொருட்கள், மின்சார மற்றும் மின்னணு பொருட்கள் உள்ளிட்டவற்றில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி இந்த ஆண்டு 5.76 பில்லியன் டாலர் குறைய வாய்ப்பு இருப்பதாக ஜிடிஆர்.ஐ அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.

இருப்பினும், குறிப்பிட்ட பிரிவுகளில் இந்தியாவின் சாதகமான நிலை இந்த இழப்பின் ஒரு பகுதியை ஈடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி, செராமிக் பொருட்கள், செயற்கை ரசாயனம், மருந்தக துறை ஆகியவை ஓரளவு பலன் பெறலாம்.

Tarriffs

மருந்தகம், செமிகண்டக்டர் மற்றும் ஒரு சில எரிசக்தி பொருட்கள் தவிர இந்திய பொருட்கள் மீது 26 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க விதித்துள்ளது. ஏப்ரல் 5 முதல் அடிப்படை 10 சதவீத வரியும் உள்ளது.

"விரிவான வர்த்தக தரவுகள் மற்றும் வரி விதிப்பு பட்டியல் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2025ல் இந்தியா 6.41 சதவீத ஏற்றுமதி அல்லது 5.76 பில்லியன் டாலர் மதிப்பு ஏற்றுமதியை இழக்கலாம்," என உலக வர்த்தக ஆய்வு மையம் (GTRI) தெரிவித்துள்ளது.

2024ல் இந்தியா 89.81 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது. பல முக்கிய பொருட்கள் பிரிவில் சரிவு உண்டாகலாம் என தெரிவிக்கட்டுள்ளது.

மீன் மற்றும் கடல் பொருட்கள் ஏற்றுமதி 20/2 சதவீதம் குறையலாம். இரும்பு பொருட்கள் 18%, வைரம் மற்றும் தங்க நகைகள் 15.3%, வாகனங்கள், உதிரிபாகங்கள் 12.1%, தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு பொருட்கள் 12% குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக், பெட்ரோலியம் பொருட்கள், இயற்கை ரசாயனம், இயந்திரங்கள் ஆகியவையும் பாதிக்கப்படும். துறை சார்ந்த ஏற்றுமதி, வரி மாற்றம், சீனா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகள் போட்டித்தன்மை உள்ளிட்டவற்றை இந்த மையம் ஆய்வு செய்தது.

பெட்ரோலியம் பொருட்கள், சோலார் பேனல்கள், மருந்தக பொருட்கள், தாமிரம் ஆகியவை நாடு சார்ந்த வரியில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதிக மதிப்பு வாய்ந்த இந்த பொருட்கள், இந்திய ஏற்றுமதியில் 22.7% அல்லது 20.4 பில்லியன் டாலராக உள்ளது. இவை மிகவும் ஆதரிக்கப்படும் நாடு அந்தஸ்தை தொடர்ந்து பெறும்.

எஃகு, அலுமினியம், ஆட்டோமொபைல், ஆட்டோ பாகங்கள் 25 சதவீத வரி பெறும். இவை இந்திய ஏற்றுமதியில் 2.2 பில்லியன் டாலராக உள்ளது. இவற்றுக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது.

"எஞ்சியுள்ள பிரிவு பொருட்களில் தான் அதிக பாதிப்பு இருக்கும். இந்த பொருட்கள் மொத்த வர்த்தகத்தின் 74.8 சதவீதம் அல்லது 67.2 பில்லியன் டாலராக அமைகிறது. இவற்றுக்கு 26 சதவீத வரி பொருந்தும். சிறப்பு அந்தஸ்து வரி பொருந்தும் என்றாலும், இந்த கூடுதல் வரி விதிப்பு பல வகை தொழில்களில் பாதிப்பை உண்டாக்கும்,” என அமைப்பின் நிறுவனர் அஜய் ஸ்ரீவத்ஸ்வா கூறியுள்லார்.

2024ல் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஸ்டார்ட் போன் மற்றும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 14.4 பில்லியன் டாலராக இருந்தது. இந்த பிரிவின் உலக ஷிப்மண்டில் 35.8 சதவீதமாக அமைந்தது.

இந்த பொருட்கள் மீதான சராசரி வரி 0.4 சதவீதமாக மட்டும் இருந்த நிலையில், தற்போது அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது, இந்திய ஏற்றுமதியின் போட்டித்தன்மை குறித்த கவலையை ஏற்படுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, சீனா, மெக்சிகோ, வியட்னாமுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது பெரிய மின்னணு மற்றும் ஸ்மார்ட்போன் சப்ளையராக இருக்கிறது. இந்தியாவின் பங்கு 6.68%.

"மின்னணு மற்றும் ஸ்மார்ட்போன் மீதான வரிவிதிப்பால் இந்திய ஏற்றுமது 12 சதவீதம் அல்லது 1.78 பில்லியன் டாலர் குறையும் என கணக்கிட்டுள்ளோம். இயந்திரங்கள் மற்றும் இயந்திர பொருட்கள் ஏற்றுமதி 2 சதவீதம் அல்லது 142.1 மில்லியன் டாலர் குறையும்," என அஜய் ஸ்ரீவத்ஸ்வா கூறியுள்ளார்.

இந்த பொருட்களில் இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டு 7.1 பில்லியன் டாலராக இருந்தது. புதிய வரிகளால் இந்திய கடல் உணவு ஏற்றுமதி அதிகம் பாதிக்கப்படலாம். கடந்த ஆண்டு அமெரிக்கா 2 பில்லியன் டாலர் மதிப்பிலான கடல் உணவை இறக்குமதி செய்தது. இந்த பிரிவில் இந்தியாவின் உலக ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்காக இது அமைகிறது.

"இதற்கு முன் வரி இல்லாத இந்த பொருட்கள் இப்போது 26 சதவீத வரி கொண்டுள்ளன. கனடா மற்றும் சிலிக்கு அடுத்தபடியாக இந்தியா அமெரிக்காவுக்கான மூன்றாவது பெரிய கடல் உணவு ஏற்றுமதியாளராக விளங்குகிறது."

கனடா; பொருட்கள் வரி ஒப்பந்தம் கீழ் வரி இல்லாதவை என்பதால் இந்திய ஏற்றுமதி 20 சதவீதம் குறையும், என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்க நகைகள், மற்றும் வைரங்கள் பொருத்தவரை, இந்தியாவின் குறைந்த மதிப்பு கூட்டல் மற்றும் அதிக வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி 15 சதவீதம் அல்லது 1.82 பில்லியன் டாலர் குறையலாம்.

கடந்த ஆண்டு இந்தியா 11.9 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வைரங்களை ஏற்றுமதி செய்தது. இந்த பிரிவில் இந்திய ஏற்றுமதியில் அமெரிக்கா 40 சதவீதமாக விளங்குகிறது. இந்த துறைக்கு 2.1 சதவீத வரி பொருந்தும்.

அதே போல, வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் பிரிவில் 12.1 சதவீதம் அல்லது 339.4 மில்லியன் டாலர் சரிவு உண்டாகலாம்.

கடந்த ஆண்டு இந்தியா 2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான வாகனங்கள் மற்றும் உதிர்பாகங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது. இந்த பிரிவில் இந்திய ஏற்றுமதியில் அமெரிக்கா 12.7 சதவீதமாக உள்ளது. இப்பிரிவில் தற்போது வரி 1 சதவீதம் மட்டுமே.

இந்த ஆய்வு அறிக்கை விரிவான தரவுகள் சார்ந்தவை என்றாலும் பல்வேறு வரம்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, பரிவர்த்தனை விகிதங்கள், சர்வதேச தேவை, சப்ளை செயின், அமெரிக்க வரி விகிதங்கள் மாறாமல் இருக்கும் என கருதப்பட்டுள்ளன. இது நிஜ உலகில் மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஏற்றுமதி எந்த அளவு வேகமாக இதற்கு ஏற்ப மாறும் என்று அல்லது இதற்கு ஏற்ற விலை உத்திகள் போன்றவற்றை கருத்தில் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி- பிடிஐ


Edited by Induja Raghunathan