Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: வரலாறு காணாத உச்சம்; பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் விலையில் தங்கம் - ஏன்?

வரலாறு காணாத வகையில், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.68,000-ஐ கடந்துள்ளது. இதற்குக் காரணம் என்ன?

Gold Rate Chennai: வரலாறு காணாத உச்சம்; பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் விலையில் தங்கம் - ஏன்?

Tuesday April 01, 2025 , 2 min Read

வரலாறு காணாத வகையில், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.68,000-ஐ கடந்துள்ளது.

கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.1,200-க்கும் மேலாக விலை அதிகரித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.65 உயர்ந்து ரூ.8,425 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.520 உயர்ந்து ரூ.67,400 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.70 அதிகரித்து ரூ.9,190 ஆகவும், சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.73,520 ஆகவும் இருந்தது. தற்போது வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (1.4.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.85 உயர்ந்து ரூ.8,510 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.680 உயர்ந்து ரூ.68,080 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.93 அதிகரித்து ரூ.9,284 ஆகவும், சவரன் விலை ரூ.744 உயர்ந்து ரூ.74,272 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (1.4.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.114 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,14,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தடுமாற்றத்துடன் காணப்படுகிறது. அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு முறை அமலுக்கு வருவதே முக்கிய காரணம்.

gold rate in chennai

அதாவது, பல்வேறு நாடுகளுக்கு நாளை (ஏப்.2) முதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரி அமலுக்கு வருகிறது. இந்த வர்த்தக வரி யுத்தத்தின் எதிரொலியாக, பங்குச் சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி கண்டு வருகின்றன. பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீது முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து ஆபரணத் தங்கம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,510 (ரூ.85 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.68,080 (ரூ.680 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,284 (ரூ.93 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.74,272 (ரூ.744 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,510 (ரூ.85 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.68,080 (ரூ.680 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,284 (ரூ.93 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.74,272 (ரூ.744 உயர்வு)


Edited by Induja Raghunathan