1,50,000 சதுர அடி, 6 மில்லியன் டாலர் முதலீட்டில் சென்னையில் ஜிசிசி மையத்தை தொடங்கிய அமெரிக்க நிறுவனம்!
வெப்பமாக்கல், காற்றோட்ட வசதி, ஏசி மற்றும் குளிரூட்ட வசதி (HVACR) ஆகிய தீர்வுகள் வழங்குவதில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் Lennox, சென்னையில் தனது குளோபல் கேபபிலிட்டி மையத்தை 6 மில்லியன் டாலர் முதலீட்டில் விரிவாக்கம் செய்துள்ளது.
வெப்பமாக்கல், காற்றோட்ட வசதி, ஏசி மற்றும் குளிரூட்ட வசதி (HVACR) ஆகிய தீர்வுகள் வழங்குவதில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் 'லென்னாக்ஸ்' (Lennox) சென்னையில் தனது குளோபல் கேபபிலிட்டி மையத்தை 6 மில்லியன் டாலர் முதலீட்டில் விரிவாக்கம் செய்துள்ளது.
இந்த மையம், 150,000 சதுர அடி பரப்பு கொண்டதாக விளங்கும். இதன் விளைவாக பணியாளர்கள் எண்ணிக்கை 900ல் இருந்து 1500 ஆக உயரும்.
சென்னையின் விரிவாக்கப்பட்ட மையம், நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு உதவும் வகையிலான அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது. இந்த புதிய அலுவலகம், நவீன கூட்டு முயற்சி வொர்க்ஸ்டேஷன், ஐடி லேப், ஜிம் வசதி, தனிப்பட்ட வசதி, ரிசார்ஜ் அறைகள், பயிற்சி அறைகள் உள்ளிட்ட வசதிகள் கொண்டுள்ளது.

சென்னை மையம், 2020ல் அமைக்கப்பட்டது, நிறுவனத்தின் ஐடி மற்றும் பொறியியல் பிரிவின் முக்கிய மையமாக உருவாகியுள்ளது. தொழில்நுட்பம் தவிர, நிதி, மார்க்கெட்டிங், சட்டம், வாடிக்கையாளர் அனுபவம் உள்ளிட்ட பிரிவுகளையும் கையாளும் திறன் பெற்றதாக வளர்ந்துள்ளது.
"எங்கள் சரவ்தேச செயல்பாடுகளின் முக்கிய மையமாக சென்னை விளங்குகிறது. இந்தியாவில் 14 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளோம். புதுமையாக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம், நீடித்த வளர்ச்சியில் உறுதி கொண்டுள்ளோம். சென்னையின் திறமையான பணியாளர்கள் மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் எங்கள் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கிறது," என நிறுவன செயல் துணை தலைவர் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி பிரகாஷ் பெடாபுடி தெரிவித்தார்.

லென்னாக்சின் இந்த விரிவாக்கம் அதன் சர்வதேச செயல்பாடுகள் மற்றும் அனத்து முக்கிய அம்சங்களையும் வலுவாக்குகிறது. தமிழ்நாட்டின் வர்த்தகத்திற்கு ஆதரவான அரசு கொள்கைக்கும் ஏற்றதாக அமைகிறது.
Edited by Induja Raghunathan