பணமோசடி வழக்கில் ரூ.1,646 கோடி மதிப்பு கிரிப்டோ கரன்சியை பறிமுதல் செய்தது அமலாக்கப் பிரிவு!
அமலாக்கப்பிரிவின் தொழில்நுட்பத் திறன் வாய்ந்த வல்லுனர்கள் பல்வேறு கிரிட்போ வாலெட்கள் மூலம் நடைபெற்ற பரிவர்த்தனைகளை பின் தொடர்ந்து, இந்த மோசடியை இயக்குபவர்களை கண்டறிந்துள்ளனர்.
அமலாக்கப்பிரிவு நடத்திய மிகப்பெரிய பணமோசடி விசாரணையில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ.1,646 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான டெபாசிட்தாரர்கள் முதலீடு எனும் பெயரில் ஏமாற்றப்பட்ட பணமோசடி திட்டம் தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அமலாக்க இயக்குனகரத்தின் அகமதாபாத் அலுவலக பிரிவு, ரூ.13.50 லட்ச ரொக்கம், சொகுசு வாகனம், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியது. பிட்கனெக்ட் லெண்டிங் திட்டம் எனும் மோசடி முதலீடு திட்டம் வாயிலாக கிரிப்டோ கரன்சிகள் விற்கப்பட்டது தொடர்பான மோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அண்மையில் இந்த புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.

2016 நவம்பர் முதல் 2018 ஜனவரி வரை, நடைபெற்ற மோசடி தொடர்பாக சூரத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
அமலாக்க பிரிவின் தொழில்நுட்ப திறன் வாய்ந்த வல்லுனர்கள் பல்வேறு கிரிட்போ வாலெட்கள் மூலம் நடைபெற்ற பரிவர்த்தனைகளை பின் தொடர்ந்து, இவற்றை இயக்குபவர்களை கண்டறிந்துள்ளனர். இந்த பரிவர்த்தனைகள் பெரும்பாலும் டார்க்வெப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என தெரிகிறது.
புலனாய்வு அதிகாரிகள் பல்வேறு வாலெட்களை கண்கணித்து, கிரிப்டோ கரென்சிகள் உள்ள வாலெட்களை கண்டறிந்தனர்.
இந்த சோதனையில் ரூ.1,646 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சிகள் கைப்பற்றப்பட்டு, சிறப்பு கிரிப்டோ வாலெட்டிற்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய அளவில் கிர்ப்டோ கரன்சிகல் பறிமுதலாக இது அமைகிறது.
நிறுவனமாக நிறுவப்படாத ஒரு அமைப்பின் நிறுவனர், வலைப்பின்னல் தொடர்புகளை ஏற்படுத்தி கமிஷன் மூலம் இயக்கியது விசாரணையில், தெரிய வந்துள்ளது.
முதலீட்டாளர்களை, ரொக்கம் மற்றும் பிட்காயின் வடிவில் முதலீடு செய்ய வைக்க, பிட்கனெட் திட்டம், தானியங்கி வர்த்தக பாட் ஒன்றை உருவாக்கி, மாதம் 40 சதவீதம் பலன் அளிக்கும் வகையில் டிரேடிங் செய்ய வழி செய்வோம், என ஆசை காண்பிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
பிடிகனெட்க் இணையதளத்தில் கற்பனையான லாபத்தை தெரிவித்துள்ளனர். இது நாள் ஒன்றுக்கு ஒரு சதவீதம் அல்லது ஆண்டு அடிப்படையில் 3,700 சதவீதமாக அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த நிதி, பாட் மூலம் டிரேடிங் செய்ய பயன்படுத்தப்படாமல், நிறுவனர்களால் சொந்த நலனுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர்களின் டிஜிட்டல் வாலெட்டிற்கு இவை மாற்றப்பட்டன.
இதற்கு முன் கடந்த காலங்களில் ரூ.489 கோடி மதிப்பிலான கிரிப்டோ சொத்துகள் முடக்கப்படுள்ளன. இந்த திட்டத்தில் வெளிநாட்டவர்களும் முதலீடு செய்ததாகவும், முக்கிய குற்றவாளி அமெரிக்க புலனாய்வு துறையால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி: பிடிஐ

திருடப்பட்ட கிரிப்டோக்களில் 3 மில்லியன் USDT மதிப்பிலான தொகுப்பை முடக்கியது WazirX நிறுவனம்!
Edited by Induja Raghunathan