TN Budget 2025: தமிழக பட்ஜெட்டில் தொழில் துறையில் ஒதுக்கீடுகள் என்னென்ன?
தமிழ்நாடு பட்ஜெட்டில், சென்னை அருகே 2,000 ஏக்கரில் பரப்பில் நவீன நகரம், 10 புதிய ஐடிஐகள், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் தொழில் பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் தொழில் துறைக்காக வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு பட்ஜெட்டில், சென்னை அருகே 2,000 ஏக்கரில் பரப்பில் நவீன நகரம், 10 புதிய ஐடிஐகள், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் தொழில் பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் தொழில் துறைக்காக வெளியாகியுள்ளன.

டெலிவரி ஊழியர்களுக்கு மின் ஸ்கூட்டர் வாங்க மானியம், குழு காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு பட்ஜெட்டில் தொழில்துறை மற்றும் தொழிலாளர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
- சென்னை அருகே, ஐடி பூங்கா, நிதி நுட்ப மையங்கள், ஆய்வு மையங்கள் மற்றும் குடியிருப்புகள் கொண்ட 2,000 ஏக்கரில் நவீன நகரம். விரைவு பேரூந்துகள், மெட்ரோ மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்ட இணைப்பு வசதிகள்.
- ரூ.151 கோடியில் 10 புதிய ஐடிஐ-கள். ஆண்டுதோறும் 1,308 மாணவர்களுக்கு பயிற்சி. ஆண்டுக்கு 1,370 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கட்டிட தொழிலாளர்கள் பிள்ளைகளுக்காக 7 ஐடிஐகள்.
- 20,000 டெலிவரி ஊழியர்களுக்கு மின் ஸ்கூட்டர்கள் வாங்க ரூ.20,000 மானியம். 1.5 லட்சம் டெலிவரி தொழிலாளர்களுக்கு குழு காப்பீடு. சென்னை மற்றும் கோவையில் புதிய தொழிலாளர் லாஞ்சகள்.
- ரூ.500 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் மிஷின். கோவையில் செமிகண்டக்டர் பூங்கா. (சூளூர் மற்றும் பல்லடத்தில் தலா ரூ.100 கோடி முதலீடு).
- 80 சதவீத பெண்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க தோல் அல்லாத காலணி மையம். மதுரை, கடலூரில் 20,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய காலணி பூங்காக்கள்.
- திருச்சி, தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டையில் தொழில் பூங்காக்கள்.
- பவுண்டரி துறையை ஊக்குவிக்க கோவை பம்ப் தொழில் சிறப்பாக்க மையங்கள்
- ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்,. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்க ரூ.2,938 கோடி.
- சென்னை ஓஎம்.ஆர் போல, ஓசூர், குலோபல் கேபபிலிட்டி மையங்கள் ஆய்வு மையங்கள், ஐடி துறைக்கான மையமாக உருவாவது.
- பயோடெக் மற்றும் அறிவியல் உற்பத்திக்கான முழு உள்கட்டமைப்பு வசதி கொண்ட பயோசயின்ஸ் பார்க் சென்னை அருகே அமையும்.
- தமிழ்நாடு கடல்சார் தொழில்நுட்ப போக்குவரத்து உற்பத்தி கொள்கை 2025 கப்பல் வடிவமைப்பு, பேப்ரிகேஷன், இஞ்சின் தயாரிப்பில் முதலீட்டை ஊக்குவிக்கும். கடலூர், தூத்துக்குடியில் 30,000 வேலைவாய்ப்புகள்.
Edited by Induja Raghunathan