ஓபன் ஏஐ சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் நாளை இந்தியா வருகிறார்!
இந்த பயணத்தின் போது அவர், அரசு உயர் அதிகாரிகளை சந்திக்க இருப்பதாகவும், தொழில்துறையினருடன் உரையாடலில் ஈடுபட இருப்பதாகவும் தெரிகிறது.
சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவன சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேன் நாளை (5 ம் தேதி) இந்தியா வருகை தர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயணத்தின் போது அவர், அரசு உயர் அதிகாரிகளை சந்திக்க இருப்பதாகவும், தொழில்துறையினருடன் உரையாடலில் ஈடுபட இருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவதாக அமையும் ஆல்ட்மேனின் இந்திய விஜயம், மேற்கத்திய ஏஐ உலகில் ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு சீன ஸ்டார்ட் அப் நிறுவனம் DeepSeek வடிவில் சவால் எழுந்துள்ள நிலையில் நிகழ உள்ளது. டீப்சீக் நிறுவனம் தனது குறைந்த செலவிலான ஆர்1 சாட்பாட்டால் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆப்பிளின் ஆப்ஸ்டோரில், சாட்ஜிபிடியை பின்னுக்குத்தள்ளி டீப்சீக் இலவசமாக தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் முதலிடம் பெற்றது. ஏஐ ஆய்வில் கோடிக்கணக்கான டாலர்கள் முதலீடு செய்வதை நியாயப்படுத்தி வந்த அமெரிக்க தொழில்நுட்பத் துறை இதை நம்பமுடியாத வியப்புடன் பார்த்தது.
ஏஐ சிப் தயாரிப்பு நிறுவனம் என்விடியா, கடந்த திங்கள்கிழமை 590 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை இழந்தது. வரலாற்றில் ஒரு நிறுவனம் ஒரு நாளில் சந்தித்த மிகப்பெரிய இழப்பாக இது அமைந்தது.
இந்த பயணத்தின் போது, தில்லியில் ஆல்ட்மேன், தொழில்துறையிடன் உரையாடலில் ஈடுபடுவார் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்து முழுமையான விவரம் தெரியவில்லை.
இந்த பயணத்திற்கு முன்னதாக, 2023ல் அமெரிக்காவுக்கு வெளியில் இருந்து சக்திவாய்ந்த ஏஐ மாடல் உருவாகும் வாய்ப்பு பற்றி சந்தேகம் தெரிவிக்கும் ஆல்ட்மேனின் வீடியோ மீண்டும் உலா வரத்துவங்கியுள்ளது.
கடந்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏஐ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த் 500 பில்லியன் டாலர் தனியார் முதலீடு திட்டத்தை அறிவித்தார்.
ஆரக்கிள், சாப்ட்பாங்க், மைக்ரோசாபட் ஆதரவு பெற்ற ஓபன் ஏஐ கூட்டாக உருவாக்கும் புதிய நிறுவனமான ஸ்டார்கேட், அமெரிக்காவில் தரவு மையங்களில் முதலீடு செய்யும். அதி கம்ப்யூட்டர் ஆற்றல் கொண்ட சர்வர் மையங்களையும் அமைக்க உள்ளது.
திங்கள் அன்று, ஜப்பானிய நிறுவனம் சாப்ட்பாங்க் மற்றும் ஓபன் ஏஐ தங்கள் கூட்டை, எஸ்பி ஓபன் ஏஐ ஜப்பான் எனும் 50:50 நிறுவனம் மூலம் வலுவாக்கியுள்ளன. காப்புரிமை மீறல்கள் வழக்கு உள்பட இந்தியாவில் ஓபன் ஏஐ சவால்களை சந்திக்கும் நிலையில் ஆல்ட்மேன் இந்தியா வருகிறார். பொதுவெளி தரவுகளையே பயன்படுத்தி வருவதாகவும், இந்திய நீதிமன்றங்கள் இந்த பிரச்சனையை விசாரிக்க முடியாது, என்றும் ஆல்ட்மேன் கூறிவருகிறார்.
உலக அளவில் தொழில்நுட்ப பரப்பு மேலும் சிக்கலாகவும், துடிப்பாகவும் மாறிவரும் நிலையில் சொந்த ஏஇ மாடம் மூலம் தனது இறையாண்மையை காக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது.
இந்தியா கடந்த வாரம் சாட்ஜிபிடி மற்றும் டீப்சீக் ஆர்1 உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளக்கூடிய சொந்த அடிப்படை மாடலை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தது. 18,693 GPU-க்கள் திறன் கொண்ட பொது கம்ப்யூட்டர் ஆற்றல் வசதியையும் அறிமுகம் செய்தது. ஸ்டார்ட் அப்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஏஐ சேவைகளை உருவாக்க இதை பயன்படுத்தலாம்.
குறைந்த செலவில், பாதுகாப்பான சொந்த ஏஐ மாடலை இந்தியா அறிமுகம் செய்ய இருப்பதாக ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். உலக மாடல்கள் ஒரு மணி நேர பயன்பாட்டிற்கு 2.5 முதல் 3 டாலர் செலவாகும் நிலையில், இந்தியா மாடல் மணிக்கு ரூ.100க்கும் (40 சதவீத மானியம்) குறைவான செலவில் இயங்கும், என்றார்.
உலகத்தரம் வாய்ந்த அடிப்படை மாடலை இந்தியா உருவாக்கும் என்றும், உலகின் சிறந்த மாடல்களுக்கு நிகராக அது இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
செய்தி –பிடிஐ
Edited by Induja Raghunathan