CargoFL, பயோ வேதா ஆகிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் Peacful Progress நிதி முதலீடு!
பீஸ்புல் பிராக்ரஸ் பண்ட், ஏஇ நுட்பம் சார்ந்த புதுமையான லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் நிர்வாக நிறுவனம் CargoFL –ல் முதலீடு செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
பீஸ்புல் பிராக்ரஸ் பண்ட், ஏஇ நுட்பம் சார்ந்த புதுமையான லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் நிர்வாக நிறுவனம் கார்கோஎப்.எல்-இல் (CargoFL) முதலீடு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், குருகிராமைச் சேர்ந்த புதுமையான வேளாண் நுட்ப நிறுவனம் பயோவேதா (Bioveda) அக்ரோ வென்சர்சிலும் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பீஸ்புல் பிராக்ரஸ் பண்ட் (Peaceful Progress Fund ), தொழில்நுட்பம் சார்ந்த, நுகர்வோர் பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து பிரிவுகளில் ஆரம்ப நிலை வர்த்தகங்களில் இணை முதலீடு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிதி, தற்போது, கார்கோஎப்.எல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. (தொகை குறிப்பிடப்படவில்லை). 2017ம் ஆண்டு தொழில்நுட்ப வல்லுனர் தீபேஷ் குருபாத் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வல்லுனர் வாசிம் கான் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்நிறுவனம், ஏஇ நுட்பம் சார்ந்த புதுமையான லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை சையின் நிர்வாக சேவை அளிக்கிறது.
இதன் கிளவுட் சார்ந்த ERP மேடை, லாஜிஸ்டிக்ஸ் செயல்முறையை மிகவும் ஏற்றதாக மாற்றும் திறன் கொண்டுள்ளது. வழிகள் சீராக்கம், நிகழ்நேர பின் தொடரல், சரக்கு நிர்வாகம், பில்லிங் உள்ளிட்டவை இதில் அடங்கும். சொந்தமாக உருவாக்கப்பட்ட ஏஐ நுட்பம் கொண்டு இந்த சேவை தரவுகள் அலசல், தானியங்கி செயல்கள், நிகழ்நேர கூட்டு முயற்சி உள்ளிட்டவற்றை சாத்தியமாக்கி சப்ளை சையினை மேம்படுத்துகிறது. இதன் மூலம் செலவை குறைத்து செயல்திறனை மேம்படுத்துகிறது.
இந்நிறுவனத்தில், யுவர்நெஸ்ட் வென்சர் கேபிடல், ரியல்டைம், (RTAF), மற்றும் SanchiConnect இணைந்து முதலீடு செய்வதாக பீஸ்புல் பிராக்ரஸ் பண்ட் தெரிவித்துள்ளது.
புதுமையாக்கத்தை ஊக்குவித்து, அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள ஸ்டார்ட் அப்களை ஆதரிக்க உறுதி கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கார்கோ எப்.எல் நிறுவனர்கள் மற்றும் குழுவுக்கும் இது தொடர்பான அறிக்கையில் நிதியின் பொது பார்ட்னர் சந்திரசேகர் குப்பேரி தெரிவித்துள்ளார்.

பயோ வேதா
இதே போல், குருகிராமைச் சேர்ந்த புதுமையான வேளாண் நுட்ப நிறுவனம் பயோவேதா அக்ரோ வென்சர்சிலும் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2022ம் ஆண்டு மஹுவா ஹஸ்ரா மற்றும் கவுசிக் தேஷ்பாண்டே ஆகியோரால் நிறுவப்பட்ட பயோ வேதா, இந்திய விவசாயிகளுக்கு ஏற்ற கிராமப்புறம் சார்ந்த தீர்வுகளை அளித்து, வேளாண் நுட்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிறுவனம் விவசாயிகள் இடுபொருட்கள் வாங்கவும், விளை பொருட்களை விற்பதற்கும் உதவும் சந்தைக்கு அணுகல் வசதியை அளிக்கிறது. இதன் "Chaukhat Se – Chaukhat Tak" மாதிரி விவசாயிகளுக்கு முழுமையான ஆதரவை அளிக்கிறது.
மேலும், கிசான் மித்ராக்கள் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் மூலம் விவசாயிகள் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கிறது. கிராமப்புறங்களில் விரைவு காமர்ஸ் சேவைகளையும் வழங்கி வருகிறது. தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மூலம் விவசாயத்தில் நீடித்தத் தன்மை உண்டாக வழிசெய்கிறது.
ஜிந்தகி லைவ் ஏஞ்சல் பண்ட், போல்ஸ்டார்ட், ரோஹன் பஜாஜ் சிண்டிகேட்- Invstt trust ஆகியவற்றுடன் இணைந்து முதலீடு செய்வதில் பெருமிதம் கொள்வதாக நிதி தெரிவித்துள்ளது.
Edited by Induja Raghunathan