ஏர்டெலை தொடர்ந்து ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்க SpaceX உடன் ரிலையன்ஸ் ஜியோ கூட்டு!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவில் ஸ்டார்லிங்கின் அதிவேக இணைய வசதி வழங்குவதற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, ஸ்டார்லிங்கின் அதிவேக இணைய வசதி வழங்குவதற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இதே போன்ற ஒப்பந்தத்தை ஸ்பேஸ்ப் எக்ஸுடன் ஏர்டெல் செய்து கொண்டுள்ள அறிவிப்பு வெளியான மறுநாள் இந்த செய்தி வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் செயற்கைகோள் இணையவசதி தீவிரமவாதற்கான அடையாளமாக அமைகிறது.

ஏர்டெல் கூட்டு போலவே, ஜியோ நிறுவனத்துடன் கூட்டும், இந்தியாவில் செயற்கைகோள் இணைய சேவை வழங்குவதற்கான அனுமதியை ஸ்பேஸ்க் எக்ஸ் இந்திய அரசிடம் இருந்து பெறுவதை சார்ந்துள்ளது.
ஜியோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இடையிலான ஒப்பந்தம், ஸ்டார்லிங்க், ஜியோவின் சேவைகளை மேம்படுத்தவும், அதே நேரத்தில் ஸ்டார்லிங்க் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க ஜியோ உள்கட்டமைப்பை பயன்படுத்திக்கொள்ளவும் உதவும், என கருதப்படுகிறது.
ஸ்டார்லிங்க் சேவைகள் தனது விற்பனை மையங்கள், இணையதளம் மூலம் கிடைக்கும், என ஜியோ தெரிவித்துள்ளது. இதற்கான, விரிவான இன்ஸ்டலேஷன், ஆக்டிவேஷன், நுகர்வோர் ஆதரவு அளிக்கப்படும்.
ஸ்பேஸ்ப் எக்ஸ் உடனான கூட்டு, இந்தியா முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்களுக்கான இணைய வசதியை விரிவாக்க உதவும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. ஜியோ பைபர் சேவையுடன், ஸ்டார்லிங்க் சேவையும் செயல்படும் என்றும், தொலைவான பகுதிகளில் உள்ளவர்களுக்கு இணைய வசதி அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
“ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவுக்கு கொண்டு வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைவது, அனைவருக்கும் சீரான அதிவேக இணைய வசதி அளிக்கும் எங்கள் ஈடுபாட்டை வலுவாக்குகிறது,” என ரிலையன்ஸ் ஜியோ குழும சி.இ.ஓ.மேத்யூ ஓமென் தெரிவித்தார்.
“ஜியோ அகண்ட அலை வரிசை தொகுப்பில் ஸ்டார்லிங்கை இணைப்பதன் மூலம், எங்கள் வீச்சை அதிகமாக்கி, ஏஐ ஆற்றல் கொண்ட யுகத்தில், நாடு முழுவதும் உள்ள சமூகங்கள், வர்த்தகங்கள் பயன்பெறும் வகையில் அதிவேக இணையத்தின் அணுகல் மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறோம்,” என அவர் கூறியுள்ளார்.
பார்தி ஏர்டெல், ஏற்கனவே உள்ள Eutelsat OneWeb உடனான கூட்டு தவிர, ஸ்பேஸ் எக்ஸ் உடனான கூட்டை செவ்வாய்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது,

ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங்க் சேவை, அதிவேகம், குறைவான தாமதம் கொண்ட இணைய வசதியை, உலகம் முழுவதும் குறிப்பாக தொலைவான பகுதிகளில் அளிக்கிறது. பூமியில் இருந்து 500 கிமீயில் அமைந்திருக்கும் செய்ற்கைகோள்கள் தொகுப்பு வசதி மூலம் செயல்படுகிறது.
”ஜியோவுடன் இணைந்து செயல்படுவதிலும்,மக்கள், அமைப்புகள், வர்த்தகங்களுக்கு ஸ்டார்லிங்க் அதிவேக இணைய சேவை வழங்க, அரசின் அனுமதி பெறவும் முயற்சிக்க ஆர்வம் கொண்டிருப்பதாக,” ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் Gwynne Shotwell கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா, தமிழில்: சைபர் சிம்மன்

எலான் மஸ்க் SpaceX உடன் கைக்கோர்த்த ஏர்டெல் - இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை!
Edited by Induja Raghunathan