Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'காயிலாங்கடையிலும் கோடிகளை ஈட்டலாம்' - மின்னணு கழிவுகள் மறுசுழற்சியில் புவியை காத்து வர்த்தகத்திலும் சிறக்கும் இளைஞர்!

பூமியை பாழாக்க வேண்டிய 25,000 டன் மின் கழிவுகளை மறுசுழற்சிசெய்து, ரூ.12 கோடி வருவாய் ஈட்டி, மின்னணுகழிவு மேலாண்மையில் முக்கியப் பங்காற்றி வருகிறார் நந்தன் மால் மற்றும் அவரது ஸ்டார்ட்-அப்.

'காயிலாங்கடையிலும் கோடிகளை ஈட்டலாம்' - மின்னணு கழிவுகள் மறுசுழற்சியில் புவியை காத்து வர்த்தகத்திலும் சிறக்கும் இளைஞர்!

Friday February 21, 2025 , 4 min Read

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நந்தன் மால், பெருகிவரும் மின்னணு கழிவுகளால் ஏற்படும் சூழல் பாதிப்பைச் சமாளிக்க "ஹுல்லாடெக் ரீசைக்கிளிங்" (Hulladek Recycling) எனும் மறுசுழற்சி நிறுவனத்தை அமைத்தபோது, ​​மின் கழிவு மேலாண்மை குறித்து நிறைய சந்தேகங்களும் வெறுப்பும் எழுந்தன. மக்கள் அதை ஒரு முக்கியமான பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கும் ஒரு தீவிர முயற்சியாகப் பார்க்கவில்லை. மாறாக, காயிலாங்கடைக்காரின் பணியை செய்கிறார், என்று கூறினர்.

ஆனால், அவரது நோக்கம் மிகப்பெரிதாக இருந்தது. ஆம், புவியை பாழாக்க வேண்டிய 25,000-டன் மின் கழிவுகளை மறுசுழற்சிசெய்து, மின்னணுகழிவு மேலாண்மையில் முக்கிய பங்காற்றி உள்ளார்.

HULLADEK

மின்னணு குப்பைக்கிடங்காக மாறிவரும் இந்தியா; மாற்றத்தினை ஏற்படுத்தும் மறுசுழற்சி!

2014ம் ஆண்டு, கொல்கத்தாவைத் தளமாக கொண்டு மின்னணுகழிவு (e-waste) மேலாண்மை சேவைகளை வழங்கு ஹுல்லாடெக் எனும் ஸ்டார்ட்அப்பை தொடங்கினார் நந்தன் மால். கல்லூரி நாட்களில் நந்தன் பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள மறுசுழற்சி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்தபோது தான் அவருக்கு கழிவு மேலாண்மை மீதான ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

ஏன், கல்லூரி நாட்களில் கிடைத்த வருமானத்தில்தான் ஹுல்லாடெக் நிறுவனத்தை தொடங்கினார். பின்னர், 2013ம் ஆண்டு ஸ்பெயினின் பில்பாவோவில் உள்ள இன்டுமெட்டல் மறுசுழற்சி நிறுவனத்தில் மின்னணு-கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி பற்றி கற்றுக்கொண்டார். அங்கு அளிக்கப்பட்ட பயிற்சி உலோகங்களைப் பிரித்தெடுப்பது மற்றும் சால்டீங் டெக்னீக் (சால்டீங் டெக்னீக் என்பது பிளாஸ்டிக் மற்றும் உலோகங்களைப் பிரிக்கும் அடர்த்தி பிரிப்பு முறையாகும்) பற்றிய புரிதலை அளித்தது.

ஹுல்லாடெக்; மின்னணு-கழிவுகளை முதன்மையாக கையாளும் அதே வேளையில், பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரிக்கிறது. வீடுகள் மற்றும் நிறுவனங்கள் இரண்டிற்கும் மின்னணு-கழிவு மேலாண்மை சேவைகளை வழங்குகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் 20 மாநிலங்களிலும் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுகிறது.

கொல்கத்தா, ராஞ்சி, டிஸ்பூர், ஜெய்ப்பூர், காந்திநகர், மும்பை, ஜாம்ஷெட்பூர் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளான அசன்சோல், துர்காபூர் மற்றும் சிலிகுரி ஆகிய இடங்களில் மின்னணு, பேட்டரி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீட்டு வாசலுக்கே சென்று சேகரிக்கிறது.

மக்கள் அவர்களது வீட்டு மின் கழிவுகளை நிறுவனத்திடம் வழங்க, அதன் இணையதளத்தில் புக் செய்யலாம். ஹுல்லாடெக் சேகரிக்கும் கழிவுகளில் சுமார் 90% மின்-கழிவுகளாகும். இதில் 20% பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள், மீதமுள்ளவை கணினிகள், மானிட்டர்கள், தொலைபேசிகள் மற்றும் வீட்டு உபகரணங்களாகும். மீதமுள்ள கழிவுகளில் 7% பிளாஸ்டிக் கழிவுகளாகும்.

அஸ்டுட் அனாலிடிகாவின் தரவுகளின்படி, சீனா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு, இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய மின்-கழிவுகளை உருவாக்கும் நாடாகும். ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லியன் முதல் 3.2 மில்லியன் டன் வரை மின் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், 25,000 டன் மின் கழிவுகளை மறுசுழற்சி செய்துள்ளது. 2023ம் ஆண்டில் மட்டும், இந்தியா முழுவதிலிமிருந்து 2,050 டன் மின்-கழிவுகளை சேகரித்தது.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது, ​​மேற்கு வங்கம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 15 டன் கழிவுகளை ஹுல்லாடெக் சேகரித்து. கடந்த 10 ஆண்டுகளில் நெஸ்லே, கேட்பரி, டாடா ஸ்டீல், மொண்டெலெஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், குவாலிட்டி வால்ஸ், கோகோ கோலா, பெப்சி கோ, ரெட் புல், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பிராண்டுகளுடன் இந்த ஸ்டார்ட்அப் பணியாற்றியுள்ளது.

ஹுல்லாடெக் ISO (தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு) மற்றும் OHSAS (தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டுத் தொடர்) ஆகியவற்றால் சான்றளிக்கப்பட்டது. இது தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகளுக்கான சர்வதேச தரமாகும்.

HULLADEK

குப்பைகளாக குவியும் 'பெட்டிக்கடை' கூலர்கள்!

நிறுவனம் கழிவுகளை சேகரிப்பதற்கும், அதனை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளது. சேகரிக்கப்பட்ட கழிவுகள் முதலில் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு பொருள்கள் சேமிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் 20 கிடங்குகளை இயக்குகிறது. அவற்றில் சில நிறுவனத்திற்குச் சொந்தமானவை மற்றும் சில உரிமையாளர்களால் நடத்தப்படுகின்றன.

மறுசுழற்சியின் போது, ​​பிளாஸ்டிக்குகள் துண்டாக்கப்பட்டு, உலோகங்கள் போல் செய்யப்பட்டு, கண்ணாடி சிறிய துண்டுகளாக நசுக்கப்படுகிறது. பின்னர் உலோகங்கள் பார்களாக சுத்திகரிக்கப்பட்டு பின்னர் சந்தையில் விற்கப்படுகின்றன. இந்த உலோகங்கள் உற்பத்தி நிறுவனங்களால் வாங்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு TMT பார் நிறுவனம் எஃகு வாங்கும் அதே வேளையில் ஒரு பேட்டரி நிறுவனம் ஈயத்தை வாங்கும். பிளாஸ்டிக்கிலிருந்து புதிய தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் எந்நிறுவனமும் பிளாஸ்டிக் துகள்களை வாங்குவர், என்று நந்தன் விளக்குகிறார்.

நிறுவனம் சேகரிக்கும் கழிவுகளில் பால், பானங்கள் மற்றும் சிற்றுண்டி போன்ற அழுகக்கூடிய பொருட்களைக் காட்சிப்படுத்தவும் சேமிக்கவும் பயன்படுத்தப்படும் விசிபல் கூலர்கள் தான் அதிகம் என்கிறது. மேலும், மொண்டெலெஸ், ரெட் புல், கோகோ கோலா மற்றும் நெஸ்லே போன்ற பிராண்டுகளிலிருந்து மறுசுழற்சி செய்வதற்காக விசிபல் கூலர்களை சேகரிக்கிறது.

மோர்டோர் இன்டலிஜென்ஸின் கூற்றுப்படி, இந்தியாவில் கழிவு மேலாண்மை சந்தை 2025ம் ஆண்டில் 13.69 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2030ம் ஆண்டில் 18.40 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்-கழிவுகள் இந்த சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும். இந்தியாவில் மின்-கழிவு மேலாண்மை சந்தை 2032ம் ஆண்டில் 5,198.52 மில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2023 ஆம் ஆண்டில் 1,660.46 மில்லியன் டாலராக இருந்தது என்று அஸ்டுட் அனலிட்டிகாவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

HULLADEK

ஹுல்லாடெக் அதன் சொந்த மறுசுழற்சி அலகுகளை நிறுவுவதன் மூலம் கழிவு மேலாண்மை சந்தையில் உள்ள வாய்ப்புகளைப் கையகப்படுத்திக் கொள்ளமுடியுமென நம்புகிறது. 2025ம் நிதியாண்டின் இறுதிக்குள் ஜெய்ப்பூர் மற்றும் குவஹாத்தியில் மின்னணு கழிவுகளுக்கான மறுசுழற்சி ஆலைகளையும், அடுத்த மூன்று ஆண்டுகளில் பேட்டரி கழிவுகளுக்கான 5 மறுசுழற்சி அலகுகளையும் அமைக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், மக்கள் அவர்களது மின் கழிவுகளை நிறுவனத்திடம் ஒப்படைக்க பிக்-அப்களை திட்டமிடுவதற்கும் அதன் கார்பன் தடத்தை கணக்கிடுவதற்கும் ஒரு செயலியை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளது.

இந்த ஸ்டார்ட்அப் 2024ம் நிதியாண்டில் ரூ.12 கோடி வருவாயை ஈட்டியது மற்றும் 2025ம் நிதியாண்டில் ரூ.18.65 கோடி வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது. 2030ம் நிதியாண்டில் ரூ.100 கோடியை எட்டும் இலக்கிலும், இந்தியாவில் மின் கழிவுகளை குறைக்கும் நோக்கிலும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.