Stock News: ஆர்பிஐ ரெப்போ ரேட் குறைப்பு; ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தைகள்!
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 9 புள்ளிகள் உயர்ந்து 78,050 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 8 புள்ளிகள் உயர்ந்து 23,611 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் வெள்ளிக்கிழமையான இன்று (07-02-2025) பெரிய அளவில் மாற்றமின்றி நிதானத்துடன் வர்த்தகம் நடந்து வருகிறது. சென்செக்ஸ் தொடக்க நிலவரங்களின் படி, சுமார் 9 புள்ளிகள் உயர்வுடன் தொடக்கம் கண்டது. நிப்டி 8 புள்ளிகள் உயர்ந்திருந்தது.
இந்திய ஈக்விட்டிகள் வியாழக்கிழமையன்று சரிவுடன் வர்த்தகம் முடிந்தது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடும் வருடாந்திரக் கொள்கை வெளியீடு இன்று வெளியிடப்படுகிறது. 2025 ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான தரவுகளை உள்ளடக்கிய நிதித் துறையின் செயல்திறன் மற்றும் கொள்கைகளை மதிப்பாய்வு செய்யும் இந்த கொள்கை வெளியீட்டினை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் காத்திருந்தனர். இதனால் பங்குச்சந்தைகளும் அதிக ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:33 மணி நிலவரப்படி, 150 புள்ளிகள் சரிந்து 77,906.43 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு புள்ளிகள் 40.15 சரிந்து 23,600 புள்ளிகளாகவும் இருந்தது. நிப்டி பேங்க் குறியீடு இன்று 205.41 புள்ளிகள் சரிய நிப்டி ஐடி குறியீடு 80.5 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 430.19 புள்ளிகளும் சரிவு கண்டன.
காரணம்: இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை வெளியீட்டு வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.

இன்று மெட்டல் மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் முன்னேற்றம் கண்டுள்ளன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
பார்தி ஏர்டெல்
பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ்
அல்ட்ராடெக் சிமெண்ட்
டாடா ஸ்டீல்
இறக்கம் கண்ட பங்குகள்:
பவர் கிரிட்
ஐடிசி
எஸ்பிஐ
ஓஎன்ஜிசி
டிசிஎஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு சிறிதளவு மாற்றம் கண்டிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.87.49 பைசாக்களாக உள்ளது.