Stock News: இந்திய பங்குச் சந்தையில் ஏறுமுகம் - பாசிட்டிவ் போக்கு தொடருமா?
ஆசிய பங்குச் சந்தைகளின் ஏற்றத்தின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் ஏறுமுகம் கண்டுள்ளது. சென்செக்ஸ் 300+ புள்ளிகள் உயர்ந்துள்ளது. இந்த பாசிட்டிவ் போக்கு தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆசிய பங்குச் சந்தைகளின் ஏற்றத்தின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் ஏறுமுகம் கண்டுள்ளது. சென்செக்ஸ் 300+ புள்ளிகள் உயர்ந்துள்ளது. இந்த பாசிட்டிவ் போக்கு தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 10) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 324.67 புள்ளிகள் உயர்ந்து 74,657.25 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 98.45 புள்ளிகள் உயர்ந்து 22,650.95 ஆக இருந்தது.
வாரத்தின் முதல் நாளிலேயே வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவி வருவது முதலீட்டாளர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 317.95 புள்ளிகள் (0.43%) உயர்ந்து 74,650.52 ஆகவும், நிஃப்டி 89.60 புள்ளிகள் (0.40%) உயர்ந்து 22,642.10 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் உயர்வுடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ மற்றும் சியோலில் உயர்வும், ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் இறக்கமும் நிலவுகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைந்து வந்தாலும் கூட, ஆசிய பங்குச் சந்தைகளின் சாதகப் போக்குகள், உள்ளூர் முதலீட்டாளர்கள் ஆர்வம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவுகிறது. இந்தப் போக்கு தொடருமா என்பது கேள்விக்குறியே என்றாலும் கூட, பெரிய அளவில் வீழ்ச்சி நிலவ வாய்ப்பில்லை என்று பங்குச் சந்தை வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்றம் காணும் பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா மோட்டார்ஸ்
நெஸ்லே இந்தியா
ஆக்சிஸ் பேங்க்
டாடா ஸ்டீல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
எஸ்பிஐ
மாருதி சுசுகி
பாரதி ஏர்டெல்
ஏசியன் பெயின்ட்ஸ்
ஐடிசி
டாடா கம்பெனி
ஐசிஐசிஐ பேங்க்
இன்ஃபோசிஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
டாடா மோட்டார்ஸ்
டெக் மஹிந்திரா
டிசிஎஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
எம் அண்ட் எம்
விப்ரோ
டைட்டன் கம்பெனி
எல் அண்ட் டி
இண்டஸ்இண்ட் பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 பைசா குறைந்து ரூ.87.25 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan