Stock News: பங்குச் சந்தை சரிவு - சென்செக்ஸ் 170 புள்ளிகள் பின்னடைவு; பார்தி ஏர்டெல் பங்குகள் உயர்வு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 90.30 புள்ளிகள் குறைந்து 80,866.03 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டிகுறியீடு சுமார் 46.35 புள்ளிகள் குறைந்து 24,421.10 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையான இன்று (05-12-2024) சரிவுத் தொடக்கம் கண்டுள்ளன. சென்செக்ஸ் தொடக்க நிலவரங்களின் படி, சுமார் 170 புள்ளிகள் சரிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 50 புள்ளிகள் சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:22 மணி நிலவரப்படி, 90.30 புள்ளிகள் குறைந்து 80,866.03 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டிகுறியீடு சுமார் 46.35 புள்ளிகள் குறைந்து 24,421.10 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 136 புள்ளிகள் சரிய நிப்டி ஐடி குறியீடு 263 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 86 புள்ளிகளும் அதிகரித்துள்ளன. ஸ்ரீராம் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ் பங்குகள் லாபம் அடைந்துள்ளன.
காரணம்:
உலகப் பங்குச் சந்தைகளின் பாசிட்டிவ் ட்ரெண்ட்டினால் முதலீட்டாளர்களின் பங்குச் சந்தை முதலீடு ஆர்வம் அதிகரித்துள்ளது. இன்று சரிவுடன் தொடங்கினாலும் உலக பங்குச் சந்தை நிலவரம் காரணமாக உயர்வுப் பாதைக்குத் திரும்பலாம்.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
பார்தி ஏர்டெல்
டிசிஎஸ்
டெக் மகீந்திரா
இன்போசிஸ்
விப்ரோ
இறக்கம் கண்ட பங்குகள்:
பஜாஜ் ஆட்டோ
என்.டி.பி.சி
ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு லேசாக ஏற்றம் கண்டு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.72 ஆக உள்ளது.