Stock News: சென்செக்ஸ் 3000+ புள்ளிகள் சரிவு - இந்திய பங்குச் சந்தையில் ‘பூகம்பம்’ ஏன்?
இந்திய பங்குச் சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ் 3,000+ புள்ளிகள் சரிந்தன. காரணம் என்ன?
அமெரிக்க அதிபர் தொடங்கி வைத்துள்ள வரிவிதிப்பு யுத்தத்தின் தாக்கம், அதன் தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல் காரணமாக, இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் பூகம்பமே வெடித்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ் 3,000+ புள்ளிகள் சரிந்து தள்ளாட்டம் கண்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஏப்.7) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 3,939.68 புள்ளிகள் சரிந்து 71,425.01 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 1,160.8 புள்ளிகள் சரிந்து 21,743.65 ஆக இருந்தது.
இந்திய பங்குச் சந்தையில் வரலாறு காணாத இந்த வீழ்ச்சி தொடர்வது முதலீட்டாளர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஒரே நாளில் பல லட்சம் கோடி ரூபாய் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து நிறுவனப் பங்குகளுமே சரிந்தன.
இன்று முற்பகல் 10.45 மணியளவில் சென்செக்ஸ் 2,755.40 புள்ளிகள் (3.66%) சரிந்து 72,609.29 ஆகவும், நிஃப்டி 889.90 புள்ளிகள் (3.89%) சரிந்து 22,014.55 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை தொடங்கி ஆசிய பங்குச் சந்தைகளான சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் என அனைத்துப் பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளன. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் தொடங்கி வைத்த வரிவிதிப்பு போரின் பாதிப்பு இப்போதும் உச்சம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் எதிரொலியால், உலக அளவில் ‘ரெசஷன்’ எனும் பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல் அதிகமாகி இருப்பதால் பங்குச் சந்தை வர்த்தகம் படுபாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகள் ஒன்றுவிடாமல் அனைத்தும் கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று ஒரே நாளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்றம் காணும் பங்குகள்:
எதுவுமே இல்லை
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
நெஸ்லே இந்தியா
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
பாரதி ஏர்டெல்
ஐசிஐசிஐ பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா மோட்டார்ஸ்
விப்ரோ
இன்போசிஸ்
டிசிஎஸ்
டெக் மஹிந்திரா
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ்
என்டிபிசி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
டைட்டன் கம்பெனி
இண்டஸ்இண்ட் பேங்க்
எல் அண்ட் டி
ஆக்சிஸ் பேங்க்
மாருதி சுசுகி
மற்றும் அனைத்தும்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா குறைந்து ரூ.85.63 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan