ஹோலி பண்டிகைகால டெலிவரிகளுக்கு கூடுதல் கட்டணம்; முதல் முறையாக ஸ்விக்கி அறிமுகம்!
ஸ்விக்கி தனது மேடை கட்டணத்திற்கு இணையாக சர்ஜ் கட்டணத்தை முதல் முறையாக அமல் செய்துள்ளது. இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் இந்த கட்டணம் ரூ.8.90 முதல் ரூ.20 ஆக அமைகிறது.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் இந்த பண்டிகை வாரத்தில் பெறப்படும் ஆர்டர்களுக்கு கூடுதல் கட்டணமாக, பண்டிகை கையாளுதல் கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கட்டணம், குவிக் காமர்ஸ் சேவைகள் விதிக்கும், கையாளுதல் மற்றும் சர்ஜ் கட்டணம் போல அமைந்துள்ளது.
ஸ்விக்கி தனது மேடை கட்டணத்திற்கு இணையாக சர்ஜ் கட்டணத்தை முதல் முறையாக அமல் செய்துள்ளது. இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் இந்த கட்டணம் ரூ.8.90 முதல் ரூ.20 ஆக அமைகிறது.

இது தொடர்பாக ஸ்விக்கி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
கையாளுதல் கட்டணம் ஒரே சீராக இருந்தாலும், தேவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் சேவை மேடைகள் சர்ஜ் கட்டணம் வசூலிக்கின்றன. இந்தியாவிலும், உணவு சேவை மற்றும் குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் மேலும் வருவாய் ஈட்டுவதற்காக கூடுதல் கட்டணங்களை வசூலிக்க முயன்று வருகின்றன.
இன்ஸ்டாமார்ட் அல்லது பிளின்கிட் மேடை கட்டணம் எதுவும் வசலிப்பதில்லை. ஜெப்டோ இத்தகைய கட்டணம் வசூலிக்கிறது.
உணவு சேவை பிரிவில் ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி, டெலிவரி கட்டணம் மற்றும் ரெஸ்டாரண்ட் கமிஷன் தவிர, கூடுதல் கட்டணத்தை ஒவ்வொரு ஆர்டருக்கும் மேடை கட்டணமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த கட்டணம் கட்டாயமானது மற்றும் சலுகை அல்லது ஜொமேட்டோ கோல்ட்/ ஸ்விக்கி ஒன் போன்ற உறுப்பினர் சலுகை திட்டங்களால் பாதிக்கப்படாதது.
மேடை கட்டணம் தவிர, இரு நிறுவனங்களும் டெலிவரி கட்டணம் வசூலிக்கின்றன. தொலைவு, தேவை மற்றும் பார்க்கிங் கட்டணங்கள், உச்ச தேவை ஆகியவை அடிப்படையில் இது அமைகிறது. சில வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட சேவைகளுக்கு வசதி கட்டணத்தை செலுத்த நேரலாம்.
மேடை கட்டணம் சிறிய அளவாக இருந்தாலும், இது நிறுவனங்கள் வருவாய் அதிகரிக்க உதவுகிறது. தினமும் லட்சக்கணக்கில் அமைவதாக கருதப்படுகிறது.
உதாரணமாக, 2023 ஆகஸ்ட் முதல் 2024 மார்ச் வரை, ஜொமேட்டோ ரூ.83 கோடி மேடை கட்டணமாக வசூலித்தது. இது ஆண்டு அடிப்படையில் 27 சதவீத வருவாய் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. 2024 நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ.7,792 கோடியாக இருந்தது.
ஆங்கிலத்தில்: அனுஜ் சுவர்ணா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan