Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஹைதராபாத், மும்பை நகரங்களில் ஊபர் பேருந்து சேவை!

நாட்டின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவிலும் பேருந்து சேவையைத் தொடங்க ஊபர் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தைகளில் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத், மும்பை நகரங்களில் ஊபர் பேருந்து சேவை!

Thursday October 24, 2024 , 1 min Read

கொல்கத்தா மற்றும் டெல்லிக்குப் பிறகு கட்டண வாகன சவாரி நிறுவனமான ஊபர் ஹைதராபாத் மற்றும் மும்பையில் தனது பேருந்து (ஷட்டில்) சேவையைத் தொடங்கத் தயாராக உள்ளது.

நாட்டின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவிலும் பேருந்து சேவையைத் தொடங்க ஊபர் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தைகளில் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊபர் இந்தியா நிறுவனத்தின் தெற்காசியாத் தலைவர் பிரப்ஜீத் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது,

“ஊபர் பேருந்து சேவை ஏற்கெனவே டெல்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ளது. இப்போது மேலும் இரண்டு நகரங்களான ஹைதராபாத் மற்றும் மும்பையில் அறிமுகம் செய்யவிருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக இப்போதைக்கு பெங்களூரு இந்தப் பட்டியலில் இல்லை.

ரெகுலேட்டர்கள் எங்களை அனுமதித்தால் ஊபர் பேருந்தை பெங்களூருக்கு கொண்டு வர முடியும் என்பதை உறுதிப்படுத்துவது எனது ஆர்வமான திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.

Uber Shuttle

இதுபோன்ற ஒரு சேவையைத் தொடங்குவதற்கு, எங்களுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் தேவை. அதை எங்களால் பெற முடியவில்லை. நாங்கள் இதுதொடர்பாக பலருடனும் சுறுசுறுப்பான உரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம், அதற்கான சம்மதம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால், இப்போது எங்களிடம் அந்தத் தெரிவுக்கான வாய்ப்பு இல்லை.

ஊபர் பேருந்து சேவை தொடங்கப்படுவதற்கு பல நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. ஹெப்பல் மற்றும் அவுட்டர் ரிங் ரோடிலிருந்து ஊபர் ஷட்டில் பேருந்துகளை இயக்க முடியும். குளிரூட்டப்பட்ட, முன்பதிவு செய்யப்பட்ட ஷட்டில்களாக இவை இருக்கும். ஒவ்வொரு 2-3 நிமிடங்களுக்கும் உள்ளதால் இருக்கை நிச்சயம் கிடைக்கும். எனவே சிவில் சமூகத்தினரை இதற்கான தேவை இருப்பதை வலியுறுத்துமாறு கோருகிறேன்,” என்றார்.