Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Uber-இல் சவாரி செய்வோருக்கு புதிய பாதுகாப்பு அம்சம் : ஆடியோ ரெக்கார்டிங், WRP வசதிகள் அறிமுகம்!

மற்றொரு வசதியான WRP பெண் ஓட்டுநர்களிடமிருந்து மட்டுமே பெண் ரைடர்கள் சவாரிகளைக் கோரும் வசதியாகும். இது இரவு நேரங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Uber-இல் சவாரி செய்வோருக்கு புதிய பாதுகாப்பு அம்சம் : ஆடியோ ரெக்கார்டிங், WRP வசதிகள் அறிமுகம்!

Saturday November 30, 2024 , 1 min Read

சவாரி செய்வோர் மற்றும் ஓட்டுநர் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில், உபர்

தனது பயன்பாட்டில் ஆடியோ பதிவு அம்சம் குறிப்பாக இரவு நேர சவாரிகளின் போது "Women Rider Preference" (WRP) போன்ற புதிய முயற்சிகளை அறிமுகம் செய்துள்ளது.

பயணங்களின் போது வசதி குறைவு அல்லது சங்கடம் ஏற்படும் போதோ அல்லது தங்கள் பாதுகாப்பைப் பற்றிக் கவலை ஏற்பட்டாலோ ரைடர்ஸ் இப்போது ஆடியோவைப் பதிவு செய்யலாம் என்று Uber கூறியுள்ளது.

"ஆடியோ ரெக்கார்டிங்குகள் என்க்ரிப்ட் செய்யப்பட்டு, ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் இருவரும் அணுக முடியாததை உறுதிசெய்து, பாதுகாப்பு அறிக்கையின் ஒரு பகுதியாக சமர்ப்பித்தால் மட்டுமே அணுகப்படும். இந்த அம்சம் இந்தியாவின் ஒரு தரப்பு ஒப்புதல் சட்டத்துடன் இணங்குகிறது மற்றும் ரைடர்ஸ் மற்றும் ஓட்டுநர்கள் இருவருக்கும் நாடு முழுவதும் இந்த வசதி கிடைக்கிறது,” என்று உபெர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
uber

மற்றொரு வசதியான WRP பெண் ஓட்டுநர்களிடமிருந்து மட்டுமே பெண் ரைடர்கள் சவாரிகளைக் கோரும் வசதியாகும். இது இரவு நேரங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், Uber, அதன் இயங்குதளத்தில் பெண் ஓட்டுனர்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. இந்த புதிய வசதி ஏற்கனவே அனைத்து இந்திய நகரங்களிலும் உள்ளது மற்றும் இது இதுவரை 21,000 பயணங்களை எளிதாக்கியுள்ளது என்று உபர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலின சமத்துவம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகப் பணியாற்றும் பெங்களூரைச் சேர்ந்த GO, துர்காவுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக Uber தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பயணத்திலும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் பாதுகாப்பு அம்சங்களைத் தானாகச் செயல்படுத்த, 'Safety Preferences' என்னும் தெரிவை ரைடர்கள் பயன்படுத்தலாம், இது அவர்களின் பாதுகாப்பு அமைப்புகளைத் தனிப்பயனாக்கிக் கொள்ள அனுமதிக்கிறது.