Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

தங்க ரப்பர், பால்-தேன் குளியல்: ஒரு வயது மகனுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யும் இங்கிலாந்து தாய்!

இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் ஒருவர், தன்னுடைய ஒரு வயது மகனுக்காக தங்கத்தில் தேன் ரப்பர், பால்,தேன் குளியல், விலையுயர்ந்த ஆடைகள் என லட்சக்கணக்கில் செலவு செய்து வருவது பலரையும் திகைப்படைய வைத்துள்ளது.

தங்க ரப்பர், பால்-தேன் குளியல்: ஒரு வயது மகனுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யும் இங்கிலாந்து தாய்!

Thursday July 07, 2022 , 2 min Read

’காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு’ என்பது போல, ஒவ்வொரு பெற்றோருமே தங்கள் அளவில் தங்கள் குழந்தைகளை இளவரசன், இளவரசி மாதிரி வளர்க்க வேண்டும் என்றுதான் ஆசைப் படுவார்கள். தங்களுக்கு சிறுவயதில் கிடைக்காத பொருட்களை எல்லாம், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து அழகு பார்ப்பார்கள்.

அதற்காக ஏராளமான சிரமங்களை அவர்கள் சந்தித்தாலும், குழந்தைகளை சௌகரியமாக வளர்க்க வேண்டும், அவர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த கேசி அக்ரமும் அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான். ஆனால், அவர் தனது ஒரு வயது மகனுக்காக செலவழிப்பதைப் பார்த்து, இதெல்லாம் டூமச் என இணையத்தில் பார்த்து அசந்து போயுள்ளனர் மக்கள்.

jareem

இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயரில் உள்ள ஷெஃபீல்டு பகுதியில் வசித்து வருகிறார் 32 வயதான கேசி அக்ரம். மாடலான இவருக்கு ஒரு வயதில் ஜரீம் என்ற மகன் இருக்கிறார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவரான கேசி, தனது மகனுக்காக ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். இதற்காக லட்சக்கணக்கில் செலவு ஆன போதும், தனது செலவுகளைக் குறைத்து மகனுக்குத் தேவையானத்தை செய்து தருகிறார்.

வாரத்திற்கு இரண்டு முறை ஜரீமை குளிக்க வைப்பாராம் கேசி. அப்போது, விலையுயர்ந்த எண்ணெய்களைக் கொண்டு ஜரீமிற்கு மசாஜ் செய்து, பிறகு பால் மற்றும் தேனைப் பயன்படுத்தி அவரை குளிக்க வைக்கிறார்.

jareem

கேசிக்கு பிற உலோகங்களை உபயோகித்தால் அலர்ஜியாகி விடுமாம். எனவே, தன் மகனுக்கும் அப்படி ஒரு பிரச்சினை இருக்குமோ என தூய தங்கத்தில் 1000 பவுண்டுகள் மதிப்பில் தேன் ரப்பர் செய்து கொடுத்திருக்கிறார்.

இது தவிர, 750 பவுண்டுகள் மதிப்பில் கழுத்தில் அணியும் வெர்சேஸ் செயின் (Versace chain), 925 பவுண்டுகள் மதிப்பில் வைரம் பதிக்கப்பட்ட பிரேஸ்லெட் என ஜரீமிற்கு எல்லாமே விலையுயர்ந்த பொருட்கள்தான்.

“எனக்கு தூய தங்கத்தை தவிர்த்து பிற அனைத்து உலோகங்களும் அலர்ஜியை உருவாக்கும். அதனால் எனது மகனுக்கும் அப்படி சிக்கல் இருக்கும் என நினைத்தேன். ஆகவே, அவனுக்கு தங்கத்தில் தேன் ரப்பர் வாங்கினேன். எனது மகனுக்கு நான் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் மிகவும் தரமானதாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன்,” என்கிறார் கேசி.
jareem

சலூனில் உயர் பொறுப்பில் இருக்கும் மேனேஜரின் கைகளாலேயே தன் மகனுக்கு 14 நாள்களுக்கு ஒரு முறை ஹேர் கட் செய்கிறார். பிறகு வேறொரு சலூனில் இருந்து ஊழியர்களை வரவழைத்து, இந்த சிறிய வயதிலேயே தன் மகனுக்கு நகங்களைப் பராமரிக்கும் பெடிக்யூர் (pedicure) போன்ற சேவைகளைச் செய்ய வைக்கிறார்.

மகனுக்காக தனது மாடலிங் மற்றும் நடிப்பு பணிகளில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கிறார் கேசி. தன் மகனைப் பார்த்துக் கொள்வதையே முழு நேரப் பணியாகச் செய்து வருகிறார்.

“எனது மகனது செலவுகளுக்கு நான் எவ்வளவு கஷ்டப்படவும் தயாராக இருக்கிறேன். அவனுக்கு வாங்க வேண்டிய பொருட்களுக்கான பணம் என்னிடம் இல்லை என்றால் அவனுடைய தந்தைக்கு போன் செய்வேன். உடனடியாக பணம் கிடைத்துவிடும்," என்கிறார் கேசி.
jareem

கேசியின் கணவர் என்ன பணி செய்கிறார் என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால், மகனுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து வருகிறார் கேசி. தனக்கான உடைகளை தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கடைகளில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளும் கேசி, தன் மகனுக்கு 50 யூரோ மதிப்பில் ஒரு டி-ஷர்ட்டை வாங்குவதாகக் கூறுகிறார்.

வெளிப்புறத் தோற்றத்திற்கே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் கேசி, மகனின் ஆரோக்கிய விசயத்தில் அலட்சியமாக இருப்பாரா? முழுக்க முழுக்க இயற்கையான உணவுகளை மட்டுமே தனது மகனுக்கு சாப்பிடக் கொடுக்கிறாராம்.

“இந்த உலகிலேயே மிகவும் அழகான குட்டிப்பையன் இவன். எனது மகன் விருப்பப்படும் அனைத்தும் அவனுக்கு கிடைக்க வேண்டும். அதுவே எனது வாழ்க்கையின் முக்கியக் கடமையாகக் கருதுகிறேன்," எனப் பொறுப்பான தாயாகக் கூறுகிறார் கேசி.

தன் குழந்தையின் மீது ஏற்பட்ட மிகுந்த அன்பால், ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அக்கறையாகச் செய்யும் கேசியின் செயல்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதனைப் பார்த்து பலர் பலவித விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.