டெபிட் கார்டு இல்லாமலே ஏடிஎம்-இல் இனி பணம் எடுக்கலாம்: எப்படினு தெரிஞ்சுக்கங்க...
வருகிறது புதிய வசதி!
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து டெபிட் கார்டு இல்லாமல் சில நொடிகளில் இனி எளிதாக பணம் எடுக்க முடியும். ஏடிஎம் இயந்திரங்கள் தயாரிக்கும் என்.சி.ஆர் கார்ப்பரேஷன் இதற்கான அப்டேஷன்களை நாடு முழுவதும் செய்யத் தொடங்கியுள்ளது. அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?
முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்!
எப்படி இது செயல்படுகிறது?
இந்த வசதியை UPI ஆப் அவசியம். அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல்களில் BHIM, Paytm, GPay போன்ற எந்தவொரு UPI ஆப் வைத்திருந்தால் மட்டுமே இந்த புதிய வசதி மூலம் பணம் எடுக்க முடியும்.
இந்த ஆப் வைத்திருப்பவர்கள் ஏடிஎம் திரையில் தெரியும் QR குறியீடை ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேனிங் முடிந்ததும், நீங்கள் எடுக்க வேண்டிய (Wihdraw) பணம் எவ்வளவு என்ற விவரத்தை வழக்கம்போல் உள்ளிட வேண்டும், பின்னர் Continue பட்டனை அழுத்த வேண்டி இருக்க வேண்டும்.
இதன்பின் உங்களுக்கு மட்டுமே தெரிந்த 4 இலக்க அல்லது 6 இலக்க UPI பின் நம்பரை சரியாக ஏடிஎம் இயந்திரத்தில் உள்ளிட்டால் பணத்தை ஏடிஎம்மில் இருந்து உடனே பெற முடியும்.
பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பாகவும் மாற்ற, QR குறியீடு தொடர்ந்து மாற்றப்படும். தற்போது இந்த முறையை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.5000 வரை எடுக்க முடியும்.
முதல்கட்டமாக தற்போது சிட்டி யூனியன் வங்கி இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியை நிறுவ சிட்டி யூனியன் வங்கி என்.சி.ஆருடன் கைகோர்த்துள்ளது. கியூஆர் குறியீடு அடிப்படையிலான இயங்கக்கூடிய அட்டை இல்லாத பணத்தைத் திரும்பப் பெறும் வசதியை அனுமதிக்கும் வகையில் சிட்டி யூனியன் வங்கி ஏற்கனவே 1,500 ஏடிஎம்களை மேம்படுத்தியுள்ளது.
"ஐ.சி.சி.டபிள்யூ தீர்வை வழங்க நாங்கள் என்.சி.ஆருடன் கூட்டு சேர்ந்துள்ளோம், இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த தலைமுறை தீர்வை வழங்க உதவும், இது எங்கள் ஏடிஎம்களில் யுபிஐ கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி அட்டை-குறைந்த பணத்தை திரும்பப் பெற அனுமதிக்கும்," என்று சிட்டி யூனியனின் நிர்வாக இயக்குனர் என் காமகோடி தெரிவித்துள்ளார்.