Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ரூ.20 ஆயிரம் முதலீட்டில் தொடங்கி அதிக லாபம் தரும் 10 சிறு தொழில்கள்!

தொழில்துறையில் நுழைந்து, உச்சம் தொட்டு கோடிகளை சம்பாதித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்ற ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் என்ன தொழில் செய்வது, எப்படி செய்வது, எந்தத் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் என்பன போன்ற யுக்திகளை கண்டறிவதுதான் இதன் வெற்றியின் முதல்படி.

ரூ.20 ஆயிரம் முதலீட்டில் தொடங்கி அதிக லாபம் தரும் 10 சிறு தொழில்கள்!

Friday November 22, 2019 , 5 min Read

தொழில்துறையில் நுழைந்து, உச்சம் தொட்டு கோடிகளை சம்பாதித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்ற ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் என்ன தொழில் செய்வது, எப்படி செய்வது, எந்த தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் என்பன போன்ற யுக்திகளை கண்டறிவதுதான் இதன் வெற்றியின் முதல்படி. இரண்டாவதாக கண்டறிந்த யுக்தியை தன்னம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் செயல்படுத்த பாடுபடவேண்டும். பிறகென்ன தொட்ட தொழிலில் வெற்றி உங்களுக்கே.


மிகக்குறைந்த முதலீட்டில், அதிக லாபம் தரும் தொழிலாக இருக்கவேண்டும் என்பதே அனைவரின் தொழில் திட்டமாக இருக்கும். அத்தகைய திட்டத்துடன் எஸ்எம்பி ஸ்டோரி வழிகாட்டும் இந்த மிகக் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்களையும் ஓர் பார்வை பார்த்துவிட்டு, பின் தொழில்துறையில் குதிக்கலாம். வாங்க நண்பர்களே…


மெழுகுவர்த்தி தயாரிப்பு


வீட்டில் இருந்தே எளிய முறையில் மெழுகுவர்த்தி தயாரிப்புத் தொழிலைத் தொடங்கலாம். பண்டிகைக் காலங்களில் மெழுகுவர்த்திகளுக்கு மிகவும் கிராக்கி ஏற்படும். இவைதவிர வீடுகள், ஹோட்டல்கள், ரெஸ்ட்ராண்ட்கள் போன்றவற்றில் அலங்காரப் பொருளாகவும் கலர்கலரான மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இது எப்போது டிமாண்ட் உள்ள தொழில்.

candle

குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் 30 வரை முதலீடு செய்தாலே போதும். இதற்கென சில அத்தியாவசியமான மூலப் பொருள்களான மெழுகு, மெழுகுவார்ப்பு அச்சு, நூல், அரோமா எண்ணெய் போன்றவையும், மெழுகை உருக்கும் ஓவன், மெழுகை உருக்க பயன்படும் கலன், தெர்மாமீட்டர், எடை இயந்திரம், சுத்தியல் போன்ற சில எளிய கருவிகளும் இருந்தால் போதும் இத்தொழிலில் தடம் பதிக்க.


ஊறுகாய் தயாரிப்பு


இந்தியாவின் பாரம்பரியமான உணவு வகைகளில் ஊறுகாய்க்கு மிக முக்கிய இடமுண்டு. இந்தியாவில் உள்ள வீடுகளில் குறைந்தபட்சம் ஏதேனும் ஓர் ஊறுகாயாவது கட்டாயம் உணவில் பயன்படுத்துவார்கள்.

b2

எனவே சிறுதொழிலாக ஊறுகாய் தயாரிப்பை தொடங்குபவர்களுக்கு இது மிகுந்த பாதுகாப்பாக தொழில் மட்டுமன்றி எளிமையான தொழிலும் கூட. மேலும், ஊறுகாய்க்கு இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் இருந்தாலே போது, ஊறுகாய் தயாரிப்புத் தொழிலில் துணிந்து இறங்கலாம்.


ஊதுபத்தி தயாரிப்பு


அனைத்து மத வழிபாடுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஊதுபத்திகளாகும். இவை இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அதிக கிராக்கியுள்ள பொருளாகும். வீடுகள் மற்றும் கோயில்களில் தெய்வீக நறுமணத்தை பரப்புவதில் முக்கியப் பங்காற்றும் இந்த ஊதுபத்திகள், தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் தியான வகுப்புகளில் மனதை ஓர்நிலைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

b3

மிக எளிய முறையில் வீட்டிலேயே குடிசைத் தொழில் போல இந்த ஊதுபத்தி தயாரிப்புத் தொழிலை மேற்கொள்ளலாம். இதற்குத் தேவையான அடிப்படை மூலப் பொருள்களாக மூங்கில் குச்சிகள், நறுமணத்துக்காக சில பொடிகள் மற்றும் சந்தன, மல்லிகை, ரோஜா போன்ற வாசனை திரவிய எண்ணெய்கள். இவை போதும் நறுமணம் மிகு ஊதுபத்திகளைத் தயாரிக்க.


மொத்தமாக தயாரித்து விற்பனை செய்ய விரும்பினால் இதற்கென்றே தயாரிக்கப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக் ஊதிபத்தி தயாரிப்பு இயந்திரங்கள் ரூ.50 ஆயிரம் முதல் சந்தைகளில் கிடைக்கின்றன.


சட்டை பட்டன்கள் தயாரிப்பு


ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் சட்டை அணிந்து வருகின்றனர். இதனால் கார்மென்ட்ஸ் தயாரிப்புத் தொழிலில் பட்டன்களின் பங்கு மிக முக்கியமானது. சட்டைகளில் மட்டுமன்றி பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆடைகளிலும் பிளாஸ்டிக், இரும்பு பட்டன்கள் அலங்காரத்துக்காக இணைக்கப்படுகின்றன.

b4

இத்தொழிலைத் தொடங்கும் முன் நம் தேவைக்கேற்ற பிளாஸ்டிக் அல்லது இரும்பு பட்டன்களைத் தயாரிக்கலாம். வீட்டிலேயே தொடங்கப்படும் இந்த தொழிலை தொடங்க ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை மட்டுமே முதலீடு தேவைப்படும்.


ஐஸ்கிரீம் கோன்


கோன் ஐஸ் என பிரபலமாக அழைக்கப்படும் ஐஸ்கிரீம் வகையில் ஐஸ்கிரீமை நிரப்ப பயன்படுத்தும் பிஸ்கட் கோன் தயாரிப்பு நல்ல லாபம் அளிக்கும் தொழிலாகும்.

ice

பெருகி வரும் ஐஸ்கிரீம் பார்லர்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் இந்த கோன் ஐஸ்களுக்கான கோன் தயாரிக்க மிகச் சிறிய அளவிலான இடம் இருந்தால்கூட போதும். இதைத் தயாரிப்பதற்கான இயந்திரத்தின் விலை சுமார் ரூ.1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரைதான். இதையே முக்கியத் தொழிலாக மொத்தமாக உற்பத்தி செய்து விற்பனை செய்ய விரும்பினால் முதலீடு சற்று கூடும்.


சாக்லேட் தயாரிப்பு


இனிப்புகளை விரும்பாதவர்கள் உண்டா, சாக்லேட் பிடிக்காத குழந்தைதான் உண்டா. என்னதான் டென்ஷனான மனநிலையில் இருந்தாலும் ஓர் சாக்லேட்டை எடுத்து வாயில் போட்டால் நம் டென்ஷன் பறந்தோடி, சகஜ மனநிலைக்கு வரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், 2015 -2016ஆம் காலகட்டத்தில் சாக்லேட் உற்பத்தி சுமார் 13 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, வீட்டிலேயே சுமார் ரூ.40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் முதலீட்டில் சாக்லேட் தயாரிப்புத் தொழிலில் துணிந்து இறங்கலாம்.

chaco

இதையே நாம் பெரிய அளவில் செய்ய விரும்பினால் சாக்லேட்களை துண்டு துண்டாக வெட்ட பயன்படும் இயந்திரம், சாக்லேட் கலவை மிஷின், உற்பத்தி செய்யும் கலன், பேக்கிங் என சுமார் ரூ.2 முதல் 3 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.


நூடுல்ஸ் தயாரிப்பு தொழில்


நூடுல்ஸ் தற்போது நகர்புரம் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் பிரபலமான உணவாக மாறி வருகிறது. அனைத்து கடைகளிலும் கிடைக்கும் இந்த நூடுல்ஸ் தயாரிப்பு மிக எளிமையானது.


இதற்குத் தேவையான மூலப் பொருள்களான கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, ஸ்டார்ச் மாவு மற்றும் தாவர எண்ணெய் போன்றவற்றை சரியான விகிதத்தில் கலந்து, நூடுல்ஸ் தயாரிப்புக்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் நிரப்பினால் நாம் விரும்பிய வடிவில், சைஸில், கலரில் நூடுல்ஸ் ரெடி. இனி அதனை காய வைத்து, பேக்கிங் செய்து விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டலாம்.

nod

மிகக் குறைந்த அளவிலான நூடுல்ஸ் தயாரிப்பு இயந்திரத்தின் விலை சுமார் ரூ.40 ஆயிரம். மிகத் தரமான அதிகளவில் நூடுல்ஸ் தயாரித்து விற்பனை செய்ய விரும்புபவர்கள் ரூ. 1.5 லட்சத்தில் உள்ள அதிக திறனுடைய இயந்திரத்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.


அப்பளம் தயாரிப்பு தொழில்


நம் தினசரி உணவில் ஊறுகாயைப் போல முக்கிய இடம் பிடிப்பது அப்பளம். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு. திருமணம், விருந்துகள் போன்றவற்றில் உணவுடன் சுவையான அப்பளம் காலங்காலமாக பரிமாறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

papet

அப்பளம் தயாரித்தல் மிகவும் எளிய வீட்டிலேயே செய்யக்கூடிய குடிசைத் தொழிலாகும். இதிலும் உளுந்து அப்பளம், கிழங்கு அப்பளம், அரிசி அப்பளம், கோதுமை அப்பளம் என பல்வேறு வகைகள் உள்ளன. பொதுவாக இது மிகவும் போட்டி நிறைந்த தொழிலாகும். ஆனால் சிறு தொழிலாக செய்பவர்கள் சுமார் ரூ.30 ஆயிரம் முதலீட்டில் எளிய முறையில் வீட்டிலேயே தயாரித்து, பேக்கிங் செய்து அருகில் உள்ள கடைகளில் விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டலாம்.


சணல் மற்றும் காகிதப் பை தயாரிப்பு


பிளாஸ்டிக் ஓழிப்பு நடவடிக்கைகளை நாடு முன்னெடுத்து செல்லும்போது, மக்களும் அதற்கான மாற்று நடைமுறைகளை பின்பற்றத் தொடங்கிவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் கலர்கலரான டிசைன் டிசைனான சணல் மற்றும் காகிதப் பைகள். தற்போது மருத்துக்கடைகள், ஜவுளிக்கடைகள், ஜூவல்லரிஸ் தொடங்கி காய்கனிக் கடை வரை இந்த வகைப் பைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

jude

சணல் பை தயாரிப்பு மிக எளிதான தொழிலாகும். வெறும் 500 சதுர அடி பரப்பளவில் இந்த தொழிலை மேற்கொள்ளலாம். முதலீடு ரூ.50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை போதும். ஆனால் காகிதப் பை தயாரிப்பு கொஞ்சம் காஸ்ட்லியான தொழில்தான். காகிதப் பை தயாரிப்பு இயந்திரத்தின் விலை ரூ. 5 லட்சம் வரை ஆகும். ரூ.3 லட்சத்திலும் காகிதப் பை தயாரிப்பு மெஷின்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் அதிக அளவிலான மனித உழைப்பும் தேவைப்படும்.


காட்டன் பட் தயாரிப்பு


காதுகள் சுத்தம் செய்யும் காட்டன் பட்ஸ் தயாரிப்பு மிகவும் சுலபமான தொழில். வீட்டில் இருந்தே அதற்குத் தேவையான பொருட்களை வரவழைத்து தயார் செய்யலாம். காட்டன் பஞ்சு, குச்சிகள் மற்றும் பேக்கிங் செய்யும் பொருட்கள் இருந்தால் போதும். இதை தயார் செய்ய சிறிய இயந்திரங்கள் உள்ளன.

காட்டன் பட்ஸ்


காட்டன் பட்ஸ் தயாரிக்கும் தொழில் தொடங்க குறைந்தது 20ஆயிரம் ரூபாய் முதல் 40ஆயிரம் ரூபாய் இருந்தால் போதுமானது. இதற்கானத் தேவை இருந்து கொண்டே இருக்கும் என்பதால் சப்ளை செய்து விற்பனை செய்து லாபம் காணலாம்.


என்ன நண்பர்களே, நம்ம சிறுதொழில் வழிகாட்டிய படிச்சதும் என்ன தொழில் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா… அப்புறம் ஏன் வெயிட் பண்றீங்க… தொழிலை ஸ்டார் பண்ணுங்க… லாபத்தை அள்ளுங்க.


ஆங்கிலத்தில்: பலக் அகர்வால், ரிஷப்மன்சூர் | தமிழில் திவ்யாதரன்