வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் வாழ்க்கைப் பாடங்கள் கற்றுத் தரும் 12 கோடீஸ்வரர்கள்!
உலகின் மிகவும் வெற்றிகரமான மனிதர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய காலத்தால் அழியாத 12 பாடங்களை நாம் இங்கே பார்க்கலாம்.
பெரும் பணத்துக்கும் புகழுக்கும் பேர் போன பில்லியனர்கள் தங்களது மனநிலை, விடாமுயற்சி மற்றும் தொலைநோக்கு பார்வைகளுக்காகவும் பேசப்படுகிறார்கள். ஆனால், அவர்களது செல்வம் என்பது வெறும் பணம் தொடர்புடையது மட்டும் அல்ல. புதுமையான முடிவுகள் முதல் இடைவிடாத விடாமுயற்சி வரை அவர்களிடம் மற்றவர்கள் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு.
உலகின் மிகவும் வெற்றிகரமான மனிதர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய காலத்தால் அழியாத 12 பாடங்களை நாம் இங்கே பார்க்கலாம்:

1. பில் கேட்ஸ்: மூளையே முதலீடு
வாழ்நாள் முழுவதும் கற்றலின் முக்கியத்துவத்தை பில் கேட்ஸ் வலியுறுத்தி வருகிறார். அவரை பொறுத்தவரை, அறிவு என்பதே எல்லையற்ற வருமானத்துடன் கூடிய பெரும் முதலீடாகும். தனது பிரபலமான ‘சிந்தனை வாரங்களில்’ தனது வாசிப்புப் பழக்கம் மூலம் பிறருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். திறமைகள் விரைவாக ஒளிமங்கிப் போகும் நவீன உலகில், ஆர்வத்துடனும் தகவமைப்புத் தன்மையுடனும் இருப்பது அவசியம்.
புத்தகங்கள் அல்லது வழிகாட்டிகள் மூலம் கற்றலுக்கான நேரத்தை ஒதுக்குங்கள். உங்கள் மூளைதான் உங்கள் மிகவும் மதிப்புமிக்க சொத்து.
2) வாரன் பஃபெட்: நீண்ட கால வளர்ச்சிக்கு மதிப்பு கொடுத்தல்
பிரபல அமெரிக்க தொழிலதிபரும், முதலீட்டாளருமான வாரன் பஃபெட் விரைவான வெற்றிகளை விட நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் தனது செல்வத்தை பெருக்கிக் கொண்டார். அவரது பொறுமை, மதிப்பைப் புரிந்துகொள்வது மற்றும் திடீர் முடிவுகளை எதிர்ப்பது ஆகியவையே அவரது முதலீட்டுத் தத்துவம்.
வாழ்க்கையிலும் வணிகத்திலும், நீண்டகால வெகுமதிகளைத் தரும் உத்திகளில் கவனம் செலுத்துங்கள். அதற்கு மிகுந்த பொறுமை மற்றும் ஒழுங்குமுறை தேவை.
3) எலான் மஸ்க்: ரிஸ்க் எடுத்தல்
டெஸ்லா முதல் ஸ்பேஸ்-எக்ஸ் வரை எலான் மஸ்க்கின் முயற்சிகள், துணிச்சலான, கணக்கிடப்பட்ட ரிஸ்க்கை எடுக்க அவர் தயாராக இருப்பதையே காட்டுகின்றன. மஸ்க் எல்லைகளைத் தாண்டுவதில் எப்போதும் பின்வாங்குவதில்லை. ஆனால், எப்போதும் தனது முடிவுகளை கவனமாக திட்டமிடல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் அவர் எடுக்கிறார்.
ஆபத்து குறித்து அஞ்சாதீர்கள். ஆனால், உங்கள் முடிவுகள் ஆராய்ச்சி மற்றும் கவனமாக சிந்திக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
4) மார்க் ஜுக்கர்பெர்க்: முக்கிய நோக்கத்தில் கவனம் செலுத்துதல்
ஃபேஸ்புக்கில் (தற்போது மெட்டா) மார்க் ஜுக்கர்பெர்க்கின் வெற்றிக்கு, மனிதர்களை இணைப்பதில் அவர் காட்டிய அசைக்க முடியாத கவனம் மட்டுமே காரணம். இந்த முக்கிய நோக்கத்திற்கு உண்மையாக இருப்பதன் மூலம், ஜுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கை ஒரு உலகளாவிய அமைப்பாக மாற்றினார்.
உங்கள் முதன்மை இலக்கை அடையாளம் கண்டு, கவனச்சிதறல்களை எதிர்க்கவும். உங்கள் நோக்கத்துடன் இணைந்திருப்பதே அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
5) ரிச்சர்ட் பிரான்சன்: புதுமைகளைத் ஏற்றுக் கொள்ளுதல்
ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் குழுமம் புதிய யோசனைகளைத் தழுவுவதிலும் கற்பிதங்களை உடைப்பதிலும் செழித்து வளர்கிறது. இசை முதல் விமான நிறுவனங்கள் வரை, பிரான்சனின் முயற்சிகள் தைரியத்துடன் கூடிய புதுமைகளை கொண்டிருக்கின்றன.
உங்கள் கம்ஃபர்ட் எல்லைக்குள் இருந்து வெளியேறி புதுமைகளைப் படைக்க அஞ்சாதீர்கள். துணிச்சலான யோசனைகள் பெரும்பாலும் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்.

6) ஜெஃப் பெசோஸ்: வாடிக்கையாளர் மதிப்பை பெறுதல்
வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் ஜெஃப் பெசோஸ் சில்லறை விற்பனையில் புரட்சியை ஏற்படுத்தினார். விரைவான விநியோகத்திலிருந்து இணையற்ற வசதிகள் வரை, அமேசானின் வெற்றி அதன் வாடிக்கையாளர் மைய அணுகுமுறையில் வேரூன்றியுள்ளது.
உங்கள் வாடிக்கையாளர் யார் என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டு அவர்களின் எதிர்பார்ப்புகளை தொடர்ந்து பூர்த்தி செய்யுங்கள்.
7) மைக்கேல் ப்ளூம்பெர்க்: சொத்துக்களை பன்முகப்படுதுதல்
மைக்கேல் ப்ளூம்பெர்க்கின் சாம்ராஜ்யம் ஊடகம், நிதி என பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை ரிஸ்க்கை குறைப்பது மட்டுமல்லாமல் பல வளர்ச்சி வாய்ப்புகளையும் திறக்கிறது.
முதலீடுகளாக இருந்தாலும் சரி அல்லது திறன்களாக இருந்தாலும் சரி, உங்கள் முயற்சிகளைப் பன்முகப்படுத்துங்கள்.
8) கார்லோஸ் ஸ்லிம்: உத்தி ரீதியான கூட்டாண்மைகளை உருவாக்குதல்
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கார்லோஸ் ஸ்லிம், தனது வெற்றியின் பெரும்பகுதிக்கு வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குவதே காரணம் என்று கூறுகிறார். மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவது பகிரப்பட்ட வளங்கள், நிபுணத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை வழங்குகிறது.
பரஸ்பர இலக்குகளை அடைய உதவும் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குங்கள்.
9) லாரி எலிசன்: தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளுதல்
ஆரக்கிள் நிறுவனத்தில் இணை நிறுவனர் என்ற முறையில், லாரி எலிசன் முன்னோக்கி இருப்பதன் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறார். நிறுவனங்களும் தனிநபர்களும் தொடர்ந்து இயங்குவதற்கு, புதுமைகளை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார்.
கடந்த கால சாதனைகளிலேயே தேங்கி விடவேண்டாம். போட்டியில் தொடர வேண்டும் எனில் தொடர்ந்து உங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
10) ஸ்டீவ் ஜாப்ஸ்: வடிவமைப்பு சிந்தனை முக்கியம்
ஸ்டீவ் ஜாப்ஸ், செயல்பாட்டுக்கு மட்டுமல்ல, அழகியல் ரீதியாகவும் மகிழ்ச்சி அளிக்கும் தயாரிப்புகளை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டிருந்தார். வடிவமைப்பு மற்றும் பயனர் அனுபவத்தில் அவர் கவனம் செலுத்தியது ஆப்பிளை உலகளாவிய அடையாளமாக மாற்றியது.
துல்லியமான விஷயங்களில் கூட கவனம் செலுத்துங்கள். மேலும், உங்கள் வேலை செயல்பாடு மற்றும் நேர்த்தியின் சமநிலையைக் கொண்டிருப்பதையும் உறுதிசெய்யவும்.

11) செர்ஜி பிரின்: ஆர்வமும் தொடர்ந்து கற்றலும்
கூகிளின் இணை நிறுவனரான, செர்ஜி பிரின் ஆர்வத்தின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அவரது அணுகுமுறை என்பது புதிய யோசனைகளைக் கற்றுக்கொள்றவதற்கான இடைவிடாத ஆர்வத்திலிருந்தே உருவாகிறது.
ஆர்வத்தையும் புதிய அனுபவங்களுக்கான வெளிப்படைத்தன்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
12) சார்லி முங்கர்: விமர்சன ரீதியாக சிந்தித்தல்
வாரன் பஃபெட்டின் வலது கரமாக திகழும் சார்லி முங்கர், விமர்சன சிந்தனை மற்றும் பகுத்தறிவுடன் முடிவெடுப்பதை வலியுறுத்துகிறார். அவரது பன்முகத்தன்மை கொண்ட அணுகுமுறை பல்வேறு கண்ணோட்டங்களில் இருந்து பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்ய அவருக்கு உதவுகிறது.
முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆழமாக சிந்திக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நன்கு சிந்தித்து செயல்படுங்கள்.

Edited by Induja Raghunathan