உற்பத்தித் துறையில் 12 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பு வளர்ச்சி: புள்ளியியல் துறை தகவல்!
கடந்த 12 ஆண்டுகளில் உற்பத்தித் தொழில்துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பின் அதிகபட்சம் இதுவே. உணவு பொருட்களை உற்பத்திச் செய்யும் ஆலைகளில் வேலை நியமிப்புகள் பதிவாகியுள்ளன.
2022-23 ஆம் ஆண்டிற்கான தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பை (ஏஎஸ்ஐ) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) திங்கள்கிழமை வெளியிட்டது. 2022-23 ஆம் ஆண்டில் உற்பத்தித் தொழில்களில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 7.5 சதவீதம் அதிகரித்து 1.84 கோடியாக அதிகரித்துள்ளது, இது 2021-22ல் 1.72 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 12 ஆண்டுகளில் உற்பத்தித் தொழில்துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பின் அதிகபட்சம் இதுவே. உணவு பொருட்களை உற்பத்திச் செய்யும் ஆலைகளில் வேலை நியமிப்புகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, ஜவுளித்துறை, மூல உலோகங்கள், தயாரிப்பு ஆடை உற்பத்தித் துறை, மோட்டார் வாகனங்கள் துறை, ட்ரெய்லர்கள் மற்றும் செமி ட்ரெய்லர்கள் உற்பத்தித் துறையில் அதிக வேலை நியமனங்கள் நிகழ்ந்துள்ளன.
கணக்கெடுப்பின்படி, மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 2021-22ல் 2.49 லட்சத்தில் இருந்து 2022-23ல் 2.53 லட்சமாக அதிகரித்துள்ளது, இது கோவிட்-19 தொற்றுநோயினால் ஏற்பட்ட கடும் தொய்வு மற்றும் வீழ்ச்சிக்குப் பிறகான முழு மீட்புக் கட்டத்தைக் குறிக்கும் முதல் ஆண்டாகும்.
முறைசாரா வெகுஜன வேலைத் துறையில் வாய்ப்புகள் சரிவு:
ஒப்பிடுகையில், 2022-23-ல் முறைசாரா துறையில் பணிபுரிந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 16.45 லட்சம் அல்லது சுமார் 1.5 சதவீதம் குறைந்து 10.96 கோடியாக இருந்தது, இது 2015-16ல் 11.13 கோடியாக இருந்தது. இது இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களின் (ASUSE) 2022-23ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புள்ளி விவரங்கள் கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தின் தாக்கம் முழுவதையும் துடைத்தழித்து விட்டது என்று நிதி ஆயோக் சி.இ.ஓ. பிவிஆர் சுப்பிரமணியம் கூறுகிறார்.
"இந்த தரவுகள் காட்டுவது என்னவெனில் நாம் இப்போது கோவிட் அதிர்ச்சியை கடந்துவிட்டோம். உற்பத்தித் துறை இப்போது உயர்வில் உள்ளது என்பது தெளிவு. இந்த புள்ளிவிவரங்கள் எங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.