4.5 மில்லியன் டாலர் செலவில் அக்வாகல்சர் ஆய்வில் ஈடுபடும் Aquaconnect!
இந்தியாவின் முன்னணி மற்றும் சென்னையைச் சேர்ந்த ஒருங்கிணைந்த கடல் உணவு நிறுவனம் அக்வாகனெக்ட், அக்வாகல்சர் உயிரியல் ஆய்வில் நுழைவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த கடல் உணவு நிறுவனம் Aquaconnect; அக்வாகல்சர் உயிரியல் ஆய்வில் நுழைவதாக அறிவித்துள்ளது. அக்வாலக்சர் ஃபார்முலேஷன் தொடர்பான புதுமையாக்கத்தை ஊக்குவிக்க நிறுவனம், 4.5 மில்லியன் டாலர் ஒதுக்கீட்டில் அதி நவீன ஆய்வு மற்றும் உற்பத்தி மையத்தை அமைக்க உள்ளது.
ஆழ் உயிர் அறிவியல் சார்ந்த மீன் மற்றும் இறால், பண்ணை நல தீர்வுகளை வழங்குவதில் நிறுவனத்திற்கு உள்ள ஈடுபாட்டை இது உறுதி செய்வதாக இது தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AquaConnect நிறுவனர் ராஜ்மனோகர்
விவசாயிகள், விவசாயத் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோருடன் உள்ள ஆழமான உறவை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் அமைகிறது. நாடு முழுவதும் 850 அக்வா பங்குதாரர்கள் வலைப்பின்னலை கொண்டுள்ளது. இதன் மூலம், 360 கோணம் சார்ந்த கருத்தறியும் வசதியை உருவாக்கி உள்ளது. விவசாயிகள் நேரடி கருத்தறிவதோடு, தரவுகள் டிஜிட்டல்மயமாக்கப்படுகிறது.
“ஒருங்கிணைந்த அக்வாகல்சர் தொழில்நுட்ப மேடை என்ற வகையில் அக்வாகல்சர் பண்ணை உயிரியல் சார்ந்த விரிவாக்கம் எங்களுக்கு இயற்கையானது. அக்வாகல்சர் உயிரியல் ஆய்வின் எல்லைகளை விரிவாக்க 450 மில்லியன் டாலர் நிதி எனும் வலுவான ஆதரவுடன் செயல்படுகிறோம். இந்தியாவின் ஐந்து முன்னணி அக்வாகல்சர் உயிரி நிறுவனமாக விளங்க திட்டமிட்டுள்ளோம்,” என்று அக்வாகனெக்ட் சி.இ.ஓ.ராஜமனோகர் கூறியுள்ளார்.
பொதுவாக, அக்வாகல்சர் உயிரியல் சார்ந்தவை பரந்த தரவுகள் மற்றும் மெதுவான கருத்துறிதலால் பாதிக்கப்படுகின்றது. அக்வாகனெக்டின் தரவுகள் சார்ந்த அணுகுமுறை இந்த இடைவெளியை குறைக்க உதவும், என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் அடுத்த தலைமுறை பார்முலெஷன்களை உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளது. அறிவியல் நோக்கில் மேம்பட்டதோடு, இந்தியாவின் பல்வேறு கடல்சார் சூழலுக்கு ஏற்ற செயல்திறன் வாய்ந்த தீர்வுகளை உருவாக்க உள்ளது.
”தரவுகள் சார்ந்த அணுகுமுறை, அதிநவீன உயிரி நுட்பத்துடன் இணைந்திருப்பதே எங்கள் தனித்தன்மையாகும். எங்களின் 360 கோணத்திலான கருத்தறிதல், தரவு ஆய்வை மேம்படுத்தி வேகமாக பொருட்களை உருவாக்க வழி செய்யும்,” என அக்வாகனெக்ட், லைப் சயின்சஸ் பிரிவு தலைவர் டாக்டர்.சுதீப் சென் கூறியுள்ளார்.
நிறுவனம் கடந்த ஒராண்டுக்கு முன், டாக்டர்.குரோ எனும் பிராண்டை அறிமுகம் செய்தது. தனது பிராடக்ட் தொகுப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதன் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம் குஜராத்தில் அமைந்துள்ளது.
Edited by Induja Raghunathan