'கோடீஸ்வரர் ஆனபோதும் நான் வாரம் 80 மணி நேரம் கோடிங் செய்து கொண்டிருந்தேன்' - பில்கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், கோடீஸ்வரரான பிறகும் கூட, தோல்வி அச்சத்தால் வாரம் 80 மணிநேரம் கோடிங் செய்யும் வழக்கம் கொண்டிருந்ததாக தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், புகழ்பெற்ற தொழிலதிபருமான பில்கேட்ஸ், செல்வம் குவிந்த நிலையிலும் கூட தனது நிறுவனத்திற்காக வாரம் 80 மணி நேரம் கோடிங் செய்து கொண்டிருந்ததாக நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சிஎன்பிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடிய பில்கேட்ஸ், கோடிஸ்வரராக உருவான பத்தாண்டுகள் வரை வெற்றி பெற்றவராக உணரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பில்கேட்ஸ் 1975ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவினார் கேட்ஸ். 1998ல் நிறுவனத்தை பங்குச்சந்தைக்கு கொண்டு சென்றார். அப்போது அவர் உலகின் இளம் கோடீஸ்வரராக உருவாகி இருந்தார்.
"1998 வரை நாங்கள் வெற்றி பெற்றதாக உறுதியாக சொல்லும் நிலையில் இருந்தோம் என்று கூற மாட்டேன்,” என பில்கேட்ஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இந்த காலம் பற்றி குறிப்பிட்டவர்,
"அந்த தருணத்தில் தான், முதல் முறையாக திரும்பி பார்த்து, நாம் நல்ல நிலையில் இருக்கிறோம், நீதித் துறை தங்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கும் அளவுக்கு போட்டி நிறுவனங்கள் பொறாமை கொண்டிருந்தன என உணர்ந்தேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
1990-களின் பிற்பகுதியில் மைக்ரோசாப்டிற்கு எதிராக தொடரப்பட்ட போட்டி தன்மை தொடர்பான வழக்குகளை அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், தன்னுடைய புதிய நினைவலை புத்தகமான சோர்ஸ் கோடில், தான் வாரத்திற்கு 80 மணி நேரம் கோடிங் செய்யும் வழக்கம் கொண்டிருந்ததாகவும், ஒரு சிறிய தவறு கூட மைக்ரோசாப்டின் முன்னணி நிலையை பாதித்துவிடும் எனும் அச்சம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
அந்த காலத்தில் மைக்ரோசாப்ட், 250 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருந்தது. பில்கேட்ஸ், 58 பில்லியன் டாலர் செல்வம் பெற்றிருந்தார்.
"90'களின் இறுதிகளுக்குப்பிறகே சில தவறுகள் செய்தாலும் பரவாயில்லை எனும் நிலையை பெற்றதாகவும் நிகச்சியில் பேசும்போது கூறினார். அதுவரை ஒரு தவறு எல்லாவற்றையும் முடித்துவிடும் எனும் மனநிலையில் இருந்தேன்,” என்றார்.
இன்று மைக்ரோசாப்ட் 3 லட்சம் கோடி டாலர் மதிப்பு கொண்ட நிறுவனமாக இருக்கிறது.

‘செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்புகளைப் பறிக்கும்; என் வேலையே கூட போய்விடும்’ - பில் கேட்ஸ்
Edited by Induja Raghunathan