ரூ.30,000 கோடி சாம்ராஜ்ஜியம் - ‘ஃபார்மா குயின்’ லீனா திவாரியின் பின்புலக் கதை!
மருந்து நிறுவன சாம்ராஜ்ஜியத்தின் மூலம் ரூ.30,000 கோடி நிகர மதிப்பு கொண்ட ‘ஃபார்மா குயின்’ லீனா திவாரியின் தொழில் - சேவைப் பின்புலப் பயணம் மலைக்கத்தக்கது.
யுஎஸ்வி (
) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுஎஸ் வைட்டமின்ஸ் மருந்து (USV Private Limited) உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் லீனா திவாரி, இந்திய மருந்து உற்பத்தித் துறையில் குற்ப்பிடத்தகுந்த பெண் தொழிலதிபர் ஆவார்.இன்று 3.7 பில்லியன் டாலர்கள் நிகர மதிப்பு கொண்ட லீனா திவாரி தொழிலதிபராக மட்டுமல்ல, தன் சமுதாயப் பணிகளிலும் சிறந்து விளங்குபவர். மும்பையிலிருந்து உலக அரங்குக்கு அவர் உயர மேற்கொண்ட பயணத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.
லீனா திவாரி மார்ச் 9, 1957-ல் மும்பை புறநகர்ப் பகுதியில் பிறந்தார். மும்பையில் வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற லீனா, பிறகு அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பயின்றார்.
இவரது தாத்தா விதால் பாலகிருஷ்ண காந்தியால் 1961-ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம்தான் ‘யுஎஸ்வி’ ஆகும். இந்த நிறுவனத்தில் தன் எம்பிஏ பட்டத்துடன் நுழைந்த லீனா திவாரி தனது புதிய உத்திகள் மூலம் யுஎஸ்வி நிறுவனத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றார்.
லீனாவின் முன்முயற்சிகள்
தொடக்கத்தில் மருந்துகளை இறக்குமதி செய்து கொண்டிருந்த யுஎஸ்வி, லீனாவின் முன்முயற்சியினால் உற்பத்தியையும் தொடங்கியது. ரெவ்லான் நிறுவனத்துடன் கூட்டாண்மை மேற்கொண்டது. யுஎஸ் வைட்டமின்ஸ் நிறுவனத்தின் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியில் ஜெர்மனி ஜானரிக் மருந்து நிறுவனமான ஜூட்டா பார்மாவை வாங்கியது பெரிய பங்களிப்பை ஏற்படுத்தியது. இது, லீனா திவாரியின் தொலைநோக்கான அயல்நாட்டுச் சந்தை விரிவாக்கத்தை பிரதிபலித்தது.
லீனா திவாரியின் நிகர மதிப்பு, 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் $3.7 பில்லியன் (சுமார் ரூ. 30,000 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் செல்வந்த நபர்களில் ஒருவராக லீனா திகழ்கிறார்.
சமூகத் தொண்டுகள்
லீனா எப்படி தொழிலில் வெற்றி பெற்று நிதியளவில் வலுவடைந்தாரோ, அதேபோல் அவரது சமூகத் தொண்டுகளும் அதற்குச் சம அளவில் வலுவாக அமைந்தது.
ஹுருன் ரிப்போர்ட் இந்தியா அமைப்பின்படி, கொடையாளர் பட்டியலில் 2019-ஆம் ஆண்டுக்கான பெண் கொடையாளர்களில் 3-வது இடத்தைப் பெற்று சமூக சேவையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அவர் ரூ.34 கோடி (சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்) நன்கொடை அளித்தது, சமூக நலனுக்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.
கார்ப்பரேட் பொறுப்புகளையும் தாண்டி அவரது ஆர்வம் பல கிளைகள் பரப்புவதாக அமைந்துள்ளது. லீனா திவாரி இயற்கையின் மீது பேரார்வம் கொண்டவர் என்பதால் எழுத்துப் பணியிலும், நடனத்திலும் கூட தன் கவனத்தைச் செலுத்துபவர். நிறைய வாசிப்பவரும் கூட.
வனவிலங்குகள் மற்றும் வனத்தில் சுற்றித் திரிதலும் லீனாவின் பொழுது போக்குகளில் ஒன்று. இவரது எழுத்துத் திறனுக்குச் சான்றாக தன் தாத்தா மற்றும் யுஎஸ்வி நிறுவனருமான விதால் பாலகிருஷ்ண காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ‘Beyond Pipes & Dreams – The Life of Vithal Balkrishna Gandhi’, என்று நூலாக எழுதியதைக் குறிப்பிடலாம். இது, குடும்பப் பாரம்பரியத்தின் மீதான அவரது விசுவாசத்திற்கு சாட்சி.
பிரசாந்த் திவாரி என்பவரை மணந்தார் லீனா திவார். பிரசாந்த் திவாரி யுஎஸ்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இருவருக்கும் 2 பிள்ளைகள்.
லீனாவின் மனிதாபிமான பங்களிப்புகளில் குறிப்பிடத் தகுந்தது. பின்தங்கிய பெண்களுக்கான டாக்டர் சுசீலா காந்தி மையத்துக்கு கணிசமான நன்கொடைகளை அளித்து இளம் பெண்களை மேம்படுத்தியதைக் குறிப்பிடலாம்.
லீனா திவாரியின் வெற்றி அவரது கார்ப்பரேட் சக்சஸ் என்பதுடன் சமூக நற்பணிகளில் அவரது பங்களிப்பையும் இணைத்து நோக்கத்தக்கது.
இவரது சமூகப் பொறுப்பு உதவும் எண்ணம் கொண்ட பலருக்கும் பெரிய அகத்தூண்டுதலாக இருக்கிறது. நிதியளவில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, சமூக நோக்கத்துடன் நற்பணிகளுக்கும் பங்களிப்பு செய்வதன் இரட்டை வல்லமைக்கு உதாரணம் லீனா திவாரி என்றால் மிகையாகாது.
மூலம்: Nucleus_AI
முதலீடு ரூ.3 லட்சம்; வர்த்தகம் ரூ.50 கோடி - ‘கிச்சடி எக்ஸ்பிரஸ்’ சக்சஸ் ‘மாடல்’ கதை!
Edited by Induja Raghunathan