பெண்களின் கனவுகளுக்கு திருமணம் ஒரு தடையா?
கடந்த சில வருடங்களாக ஷெரில் சண்ட்பெர்க்-ஐ நான் பின்பற்றி வருகிறேன். வணிகத்தில் பெண்களின் பங்கு குறித்த, அவருடைய கருத்துகள் சக்தி வாய்ந்தவை. அதிலும், "ஒரு பெண் அவள் வாழ்க்கையில் எடுக்கும் முக்கிய முடிவு; அவளுக்கு வாழ்க்கை துணை வேண்டுமா? வேண்டுமெனில் அந்த வாழ்க்கைத் துணை யார்? என்பதுதான்" என்று அவர் கூறியது, எனக்கு பிடித்த ஒன்றாகும்.
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, திருமணம் ஆகிவிட்டதெனில், அவரவர் வாழ்க்கைத் துணையின் குணநலன்கள் அவர்களின் நடவடிக்கைகளிலும், வேலை இடத்திலும், இலக்குகளிலும் புலப்படும். உங்கள் வாழ்க்கை துணை உங்களை வீழ்த்தவும் செயலாம்; வெற்றியடையவும் செயலாம். தம்பதியினர்கள் என்றால் கடமைகளை மட்டும் சமமாக பகிர்ந்து கொள்வது அல்ல, தன்னுடைய வாழ்க்கை துணைகளின் நற்குணங்களையும் ஒருவருக்குள் ஒருவர் பின்பற்றி வாழ்க்கை மீது ஒரு நல்ல நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

சென்ற வருடம் தான் எனக்கு என் வாழ்க்கை துணையுடன் திருமணம் ஆனது. அதன்பின், என் வாழ்க்கையே தலைகீழாய் மாறியது. நல்ல மாற்றம் தான். ஒரு மிகபெரிய பிஸ்னஸ் கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்க வேண்டும் எனும் என் கனவு சமீபத்தில் தான் நிறைவேறியது. என்னுடைய இலக்கை அடைய, உலகத்தின் புகழ் பெற்ற பல்கலைகழகத்தில் நான் சேரப் போகிறேன் என்பதை நினைத்தால் உற்சாகமாக இருக்கிறது. ஆனால் அதற்குமுன் என் வாழ்க்கையை சற்று பின்னோக்கி சென்று பார்க்கலாம்.
என் நண்பர்கள் வட்டாரத்திலே எனக்குதான் முதலில் கல்யாணம் ஆனது. மற்றவர்கள் எல்லாம் தனியாக தங்கள் கனவுகளை நோக்கி சென்றிருக்கையில், கல்யாணத்திற்குப் பின் நான் எப்படி என் இலக்குகளைப் பின்பற்றி செல்லப்போகிறேன் என்ற பயம் எனக்குள் இருந்தது. வீட்டுவேலைகள் மற்றும் நிதி தேவை போன்ற கடமைகள், பொறுப்புகளுக்கு திருமணம் வழிவகுக்கும் என்றுதான் நாம் அனைவரும் நினைத்து கொண்டிருக்கிறோம். இந்த எண்ணங்கள் எல்லாம் இந்திய திருமணங்கள் இப்படித்தான் இருக்கும் எனும் கண்ணோட்டத்தாலே எனக்குள் வந்துகொண்டிருந்தது. எதுஎப்படி ஆனாலும் இந்தியாவை பொறுத்தவரையில் திருமணத்திற்கு பின், இது ஆண் வேலைகள்? இதெல்லாம் பெண் செய்யவேண்டிய வேலைகள் என்று பிரித்து கல்யாணத்தின் அர்த்தத்தையே பொய்யாக்கி விடுகின்றனர்.
என் திருமணத்தைப் பற்றி கூறவேண்டுமெனில், என் கணவன் எனக்கு வாழ்க்கை துணையாக அமைந்ததில் நான் அதிர்ஷ்டசாலி. என் திருமணத்தின் போது எனக்கு 24 வயது; அவருக்கோ 30 வயது. என் தந்தையிடம் கூட நான் பார்க்காத இவரது குணநலன்கள் என்னை ஆச்சரியப்படுத்தும். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், நாங்கள் சமமாக இருந்தோம். அவரும் சமையல் செய்வார்; மளிகை கடைக்கு செல்வார். ஆனால் என் வீட்டில் என் தந்தை ஒரு டீ கூட போட்டு நான் பார்த்ததில்லை. என் அம்மாதான் எல்லா வீட்டுவேலைகளையும் செய்து, தன் தொழிலையும் பார்த்துக்கொள்வர்.
திருமணம் ஆகிய இரண்டு மாதத்திற்குபின், ஏதாவது ஒரு பெரிய பிஸ்னஸ் பள்ளியில் எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்ற என் ஆசையை என் கணவரிடம் கூறினேன். நான் ஏற்கனவே 3 வருடங்களாக வேலை பார்த்துதான் வருகிறேன். படிப்பிலேயும் வேலையிலும் எனக்கு நல்ல சான்றுகள் இருக்கிறது.
நான் என் விருப்பத்தை கூறியதும் அவரது கூறிய முதல் வார்த்தைகள் எனக்கு இன்னும் நினைவிருக்கின்றன, "நீ எப்போதும் என்னை பெருமைபட தான் செய்திருக்கிறாய்; இனியும் செய்வாய். கவலை படாதே, இதை செய்து முடிப்போம்." அதை கேட்டதும் நான் என் வாழ்க்கை துணையை சரியாக தான் தேர்ந்தேடுத்திருக்கிறேன் என்று என் கண்களில் நீர் ததும்பின. ஒரு வருடத்திற்கு முன், நான் மேலாண்மை பள்ளியில் சேர்வதற்கான கடைசி வாய்ப்பு எனக்கு வந்தது; நானும் என் வாழ்க்கையின் புது கட்டத்தை தொடங்கினேன்.
என் சேர்க்கைக்கான பேட்டியில் கலந்து கொள்ள, நான் அப்பள்ளி இடத்திற்கு மூச்சிரைக்க ஓடிச் சென்ற தருணம் எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது. என்னை போலே எம்.பி.ஏ. படிக்க ஆசைப்படும் பெண்கள் கூட்டம் அங்கிருந்தது. அனைவரும் திருமணமாகாதவர்கள். திருமணம் செய்துகொண்டு, முழு நேர வேலைக்கும் சென்று, அப்போபோ பகுதி நேர வேலைகளையும் பார்த்துக்கொண்டு, எப்படி நான் இந்த ஜிமேட், அப்பளிகேஷன், இன்டர்வியூ எல்லாம் வென்றேன் என்று என்னை வியப்புடன் பார்த்தனர்.
என் கணவன் துணையின்றி எனக்கு வெற்றி கிடைத்திருக்காது என நான் கருதும் மூன்று முக்கியக் காரணங்கள்,
1. சமமான பொறுப்புகள்- ஒரு குழுவாய் பணிசெய்தோம்
என் கனவுகளை அவர் கனவாக எடுத்துக்கொண்டார். நான் ஜிமேட் தேர்வுக்கான படித்துக்கொண்டிருந்த போதெல்லாம், எந்த வீட்டு வேலையும் செய்யாமல் இருந்திருக்கிறேன். அவர் அவரது 14 மணி நேர வேலையை முடித்து, பின் வீட்டிற்கு வந்து எங்களுக்காக சமையல் செய்வார். உணவு தயாரித்ததும், இருவரும் சாப்பிடும் போது நான் எந்த அளவிற்கு படித்துள்ளேன் என்பதைப் பற்றி எல்லாம் வினவுவார். சில நாட்கள் நான் கட்டுரைகளை வரைவுப்படுத்தி அப்படியே தூங்கிவிடுவேன். ஆனால், அவர் எழுந்து அதையெல்லாம் சரிபார்த்துவிட்டு தூங்குவார். எனக்கென்று ஒரு தொழில்முறை ஆலோசகர் தேவையே இல்லை. நான் முடிவு செய்வதற்கு முன், அவரே என் கட்டுரைகளை கோடி முறைக்கு மேல் சரிபார்த்துவிடுவார்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எதற்கு இதெல்லாம் செய்கிறீர்கள்? என்ற கேள்விகள் எழுந்தபோதெல்லாம், எங்கள் இரு குடும்பத்தார்களிடமும், நான் எம்.பி.ஏ படித்து முடித்து விட்டால் எங்கள் வாழ்க்கை எப்படி மாறி விடும் என்பதை அவர்களுக்கு பொறுமையாக எடுத்துரைத்து புரியவைத்தார்.
2. துணை நின்றார்- என்னை உக்குவித்தார்...
பெரிய பெரிய பிஸ்னஸ் பள்ளிகளில் சேர்வது எல்லாம், மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல. இலக்கை வைத்து, திட்டம் தீட்டி, பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த போராட்டத்தில் என் பயத்தை அவர் விரட்டினார். நான் பல முறை நிராகரிக்கப் பட்டேன். மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். இந்த முயற்சியை விட்டுவிடவும் முன்வந்துள்ளேன். ஆனால், அவர்தான் என்னைவிட என்மேல் நம்பிக்கை வைத்து என்னை ஊக்கப்படுத்தினார்.
3. என் குறைகளை நிறையாக்கினார் - என்னை முழுமைப்படுத்தினார்
தொழிலின் வெற்றிக்கு தேவையான பண்புகள் எனக்கு தெரிந்திருந்தாலும், அவற்றை முறையே வெளிப்படுத்த பலமுறை நான் தவறினேன். என் பயணத்தின் மிக முக்கியமான ஒழுக்கம் மற்றும் பின்னடைவு பண்புகள் என்னிடம் இல்லை. ஆனால், இப்பண்புகள் அவரிடம் இருந்தது; அவர் தனித்தன்மையை அலங்கரித்தது. என்னுடைய அனைத்து செயல்களிலும் அவர் குறைபாடற்று இருந்தார். அதனால், அவரது சிறந்த பண்புகளை நானும் பின்பற்றத் தொடங்கினேன்.
திருமணம் மற்றும் தொழில் வாழ்க்கை, இரண்டும் ஒத்துபோகாது என்று எண்ணும் பெண்கள் அனைவரும் மறுமுறையையும் சிந்தித்துப் பாருங்கள். ஒருநாள் என் வாழ்க்கையில் நான் பெரியயளவில் சாதித்தால், அதற்கு என் கணவர் தான் முழு காரணமாக இருப்பார். எங்கள் திருமண வாழ்க்கையை எங்கள் குழந்தைகளும் உதாரணங்காட்டி வாழ்வார்கள். நல்ல வாழ்க்கை துணை கொண்டு வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்!
கட்டுரையாளர்: ஒஜஸ்வி சோனி | தமிழில்: நந்தினி பிரியா
(பொறுப்புதுறப்பு: இக்கட்டுரையில் கூறப்படுள்ள எண்ணங்களும் உணர்ச்சிகளும் கட்டுரையாளரின் கருத்துகளாகும். யுவர்ஸ்டாரின் கருத்துகள் அல்ல.)