சிறிய அளவிலான யூபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்!
இந்த திட்டத்தின் படி, சிறு வணிகர்களுக்கு செய்யப்படும் 2,000 ரூபாய் வரையான பரிவர்த்தனைகள் ஒவ்வொன்றுக்கும் 0.15 சதவீத தொகை திரும்பி அளிக்கப்படும். எனினும், பெரிய வணிகர்கள் இந்த திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள்.
சிறு வணிகர்கள் மத்தியில் சிறிய அளவிலான யூபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, ரூ.1,500 கோடி அளவிலான சலுகை திட்டத்திறகு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் படி, சிறு வணிகர்களுக்கு செய்யப்படும் 2,000 ரூபாய் வரையான பரிவர்த்தனைகளுக்கு 0.15 சதவீத தொகை திரும்பி அளிக்கப்படும். எனினும், பெரிய வணிகர்கள் இந்த திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள்.
இந்த நிதியாண்டில் 20,000 கோடி அளவிலான யூபிஐ பரிவர்த்தனை இலக்கை அடைய இந்த சலுகை திட்டம் உதவும் என அரசு நம்புகிறது.

ஏற்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தொடர்புடைய வங்கிகளில் இருந்து முன்னதாக அளிக்கப்படும் 80 சதவீத திரும்பி செலுத்தும் தொகையை இது உள்ளடக்கியது. எஞ்சிய 20 சதவீதத்தில், தொழில்நுட்ப செயல்பாடுகள் காரணிகள் கணக்கில் கொள்ளப்படும்.
2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையான இந்த திட்டம், ரொக்கம் சார்ந்த பொருளாதாரத்தை அதிகாரப்பூர்வமாக மாற்றும் நோக்கம் கொண்டது. செலவு மீது அதிக கவனம் கொண்ட வணிகர்களுக்கு இந்த திட்டம் சலுகை அளிக்கிறது.
ருபே கிரெடிட் கார்டுகள் மற்றும் குறைந்த அளவிலான பீம் செயலி பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் ஒதுக்கீடு, 2023- 24ல் ரூ.2,484.97 கோடியில் இருந்து ரூ.437 கோடியாக குறைக்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது.
2024-25ல் அரசு ரூ.1,441 கோடி ஊக்க திட்டத்திற்காக ஒதுக்கியது. பின்னர், இது ரூ.2,000 கோடியாக உயர்த்தப்பட்டது. பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தாமல் சமநிலை உருவாக்க யூபிஐ சலுகை திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வணிகர் தள்ளுபடி விகிதம் இல்லாத நிலையில் இது அவசியமாகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனை செயல்முறைக்காக வங்கி அல்லது பேமெண்ட் நிறுவனத்திற்கு வணிகர்கள் செலுத்தும் கட்டணமாக இந்த விகிதம் அமைகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, 2019ல் அரசு இந்த விகிதத்தை ரத்து செய்தது.
ஆங்கிலத்தில்: சயான் சென், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan