சொல்லாமல் தாத்தா சேர்த்து வைத்த சொத்து: 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரனுக்கு அடித்த ஜாக்பாட்!
சண்டிகாரைச் சேர்ந்த மருத்துவர் தன்மய் மோதிவாலா பழைய குடும்பச் சொத்துப் பத்திரங்களை வீட்டில் குடைந்து கொண்டிருந்த போது தன் தாத்தா 500 ரூபாய்க்கு எஸ்.பி.ஐ. பங்குகளை வாங்கி வைத்திருந்த பங்குச் சான்றிதழைக் கண்டார்.
சண்டிகரைச் சேர்ந்த மருத்துவர் தன்மய் மோதிவாலா பழைய குடும்பச் சொத்துப் பத்திரங்களை வீட்டில் குடைந்து கொண்டிருந்த போது தன் தாத்தா 500 ரூபாய்க்கு எஸ்.பி.ஐ. பங்குகளை வாங்கி வைத்திருந்த பங்குச் சான்றிதழைக் கண்டார். இது 1994ம் ஆண்டு அவர் தாத்தா வாங்கிய பங்குப் பத்திரம். இதை வாங்கி வைத்த தாத்தா யாரிடமும் இதைப்பற்றி சொல்லவில்லை அவரே மறந்து கூட போயிருக்கலாம் என்று தெரிகிறது.
இப்போது இந்தப் பங்குகளின் மதிப்பு அதிகரித்து சுமார் ரூ.3.75 லட்சம் மதிப்புடையதாக அதிகரித்துள்ளது என்கிறார் தன்மய். அதாவது, 30 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு நீண்டகால முதலீட்டுக்குக் கிடைத்த லக்கி பிரைஸ் அந்தப் பங்குகளின் மதிப்பு 750 மடங்கு அதிகரித்துள்ளதே.
இது தொடர்பாக டாக்டர் மோதிவாலா X தளத்தில் பதிவிட்டதாவது:
“1994ம் ஆண்டு ரூ.500 மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை என் தாத்தா வாங்கி வைத்திருந்தார். அவர்களுக்கு இதை வாங்கும் போது இதன் மதிப்பு என்ன என்பது தெரிந்திருக்கவில்லை. அவர்கள் இதை மறந்தே போய்விட்டனர். எதற்காக இந்தப் பங்குகளை வாங்கினோம் என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. நான் இப்போது குடும்பச் சொத்துக்கள் பற்றி ஆராயும் போது இதைக் கண்டுப்பிடித்தேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
டிவிடண்ட் வருவாயைத் தவிர்த்து பங்குகளின் மதிப்பு இப்போதைய சந்தைச் சூழ்நிலையில் 750 மடங்கு அதிகரித்து ரூ.3.75 லட்சமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. மேலும், டாக்டர் மோதிவாலா கூறும்போது,
“இந்தப் பங்குச் சான்றிதழை டிமேட் கணக்கில் வரவு வைப்பது பற்றி துறை சார்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளேன். ஆனால், இந்தப் பங்குகளை விற்கப்போவதில்லை,” என்றார்.
இந்தப் பதிவை அவர் போட்டவுடன் வைரலாகத் தொடங்கி விட்டது. நிறைய பேர் பாசிட்டிவ் ஆக பதிலளித்து வருகின்றனர். அதாவது, இது உண்மையான முதலீடு, குடும்பப் பெரியோர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தொனியில் பலரும் மோதிவாலாவுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருவதோடு ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
சிலருக்குப் பங்குச்சந்தை என்றாலே என்னவென்று தெரியாது என்றும் தங்கள் வீட்டுப் பெரியோர் இத்தகைய முதலீடுகளைச் செய்துள்ளதை அதிர்ஷ்டவசமாகத் தெரிந்து கொண்ட பிறகு இப்போது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகவும் தன்மய் மோதிவாலா பதிவுக்கு பதிலளித்துள்ளனர் சிலர்.
இளம் கோடீஸ்வரர் ஆன 4 மாதக் குழந்தை - பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்பு பங்குகளை பரிசளித்த நாராயண மூர்த்தி!