$3.5 மில்லியன் நிதி திரட்டிய சென்னை ஸ்டார்ட்-அப் Gallabox - ஏஐ சார்ந்த வர்த்தக சேவையை வலுவாக்க திட்டம்!
இந்தியாவின் முன்னணி சேவைகள் சந்தை அனுபவசாலிகளால் நிறுவப்பட்ட Gallabox நிறுவனம், வர்த்தகங்கள், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைக்கு வாட்ஸ் அப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வழிகாட்ட 3.5 மில்லியன் டாலர் நிதி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி சேவைகள் சந்தை அனுபவசாலிகளால் நிறுவப்பட்ட 'கல்லாபாக்ஸ்' (Gallabox) நிறுவனம், வர்த்தகங்கள், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைக்கு வாட்ஸ் அப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வழிகாட்ட 3.5 மில்லியன் டாலர் நிதி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
FUSE தலைமையிலான இந்த நிதிச்சுற்றில் தற்போதைய முதலீட்டாளர்கள் பிரைம் வென்சர் பார்ட்னர்ஸ் மற்றும் நியான் பண்ட் பங்கேற்றனர். கல்லாபாக்ஸ், 2021ல் நிறுவப்பட்டது முதல் இதுவரை 5 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
உலக முழுவதும் உள்ள வர்த்தகங்கள், குறிப்பாக வாட்ஸ் அப் சேவை பிரபலமாக உள்ள பகுதிகளின் வர்த்தகங்கள், தங்கள் வளர்ச்சி உத்திகளில் வாட்ஸ் அப்பை ஒருங்கிணைக்க விரும்புகின்றன. வாட்ஸ் அப்'பிற்கு ஏற்ற பிரத்யேக தானியங்கி சேவைகளை உருவாக்கி, உரையாடல்களை ஊக்குவித்து அவற்றை விற்பனையாக மாற்றுவது பெரிய நிறுவனங்களுக்கு சாத்தியம் என்றாலும், நடுத்தர நிறுவனங்கள் இந்த உரையாடல்கலை தாங்களே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில் கல்லாபாக்ஸ், வாட்ஸ் அப் தானியங்கிமயமாக்கல் சேவையை அளிக்கிறது. இந்த மேடையின் கோடிங் தேவையில்லாத அணுகுமுறை வாயிலாக வர்த்தகங்கள் ஏஐ சாட்பாட்களை உருவாக்கி, மார்க்கெட்டிங் திட்டங்களை மேற்கொள்ளலாம். செய்திகளை வெளியிடுவது துவங்கி, தானியங்கி முறையில் பதிவுகளை செய்து, தனிப்பட்ட சேவைகளை அளிப்பது வரை, கல்லாபாக்ஸ் உதவுகிறது.
கார்த்திக் ஜெகன்னாதன், யோகேஷ் நாராயணன், யதிந்தர் பஞ்சநாதன் ஆகியோரால் நிறுவப்பட்ட கல்லாபாக்ஸ், வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளுதல் மற்றும் வளர்ச்சி வாய்ப்பு தொடர்பானவற்றில் நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை நேரில் கண்ட நிறுவனர்கள் அனுபவத்தால் உருவானது.
"எல்லோரும் பி2சி செய்தி சேவைக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், பெரும்பாலான வர்த்தங்களிடம் இதை பயன்படுத்திக் கொள்தற்கான கருவிகள் இல்லை,” என்கிறார் கல்லாபாக்ஸ் நிறுவனர், சி.இ.ஓ.கார்த்திக் ஜெகன்னாதன்.
எஸ்.எம்.பி., நிறுவனங்கள் இதற்குத் தேவையான செயல்முறையை பெரும் முயற்சி செய்து உருவாக்கினாலும், அவை போதாமையாக இருக்கின்றன. எங்கள் மேடை எந்த ஒரு வர்த்தகமும், தொழில்நுட்பத் திறன் அல்லது பட்ஜெட் பற்றிய கேள்வி இல்லாமல், வாட்ஸ் அப்'ல் நுட்பம் நிறைந்த ஏஐ ஏஜெண்ட்களை செயல்படுத்தி, உரையாடல்களை வர்த்தக வாய்ப்புகளாக மாற்ற உதவுகிறது, என்கிறார்.
நிறுவன வளர்ச்சி இந்த உத்தியை உறுதி செய்கிறது. சென்னையில் துவங்கிய நிறுவனம் முதல் 100 நாட்களுக்குள் முதல் 100 வாடிக்கையாளர்களை பெற்றது. இதுவரை, நிறுவனம் 45 நாடுகளில் 10,000 வர்த்தகங்களுக்கு மேல் சேவை அளித்துள்ளது. கல்வி, சுகாதாரம், ரியல் எஸ்டேட், பயணம் உள்ளிட்ட துறைகளில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
“வாட்ஸ் அப்பை நவீன தகவல் தொடர்பு மற்றும் உரையாடல் சாதனமாக உலகம் கருதுகிறது. வாடிக்கையாளர்கள் எங்கிருக்கின்றனரோ அங்கு அவர்களை சந்திக்க கல்லாபாக்ஸ் வழி செய்கிறது. கார்த்திக், யோகேஷ், யதின் உள்ளிட்ட குழுவுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது,“ என FUSE நிறுவன பாட்னர் கெல்லான் கார்ட்டர் கூறியுள்ளார்.
வாட்ஸ் அப் பிரதான தகவல் தொடர்பு சாதனமாக இருக்கும் மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்காவில் நிறுவனம் பிரத்யேக குழுக்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே வலுவான இருப்பு பெற்றுள்ளது.
”கார்த்திக், யோகேஷ், யதின், எங்களோடு இணைந்து செயல்பட்ட இரண்டு ஆண்டுகளில் சிறந்த குழுவாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களின் செயலாக்கம் மற்றும், அருமையான சேவை எங்கள் ஈடுபாட்டை இரு மடங்காக்கி இருக்கிறது,” என்று பிரைம் வென்சர் பாட்னர்ஸ் நிர்வாக பாட்னர் சஞ்சய் சாமி கூறியுள்ளார்.
இந்த மேடை பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர் சேர்க்கை செயல்முறைக்கு பயன்படுத்துகின்றன. சுகாதார நல நிறுவனங்கள் பதிவுக்கு பயன்படுத்துகின்றன. ரியல் எஸ்டேட் துறையினர் சொத்துக்கள் பற்றிய விசாரணைக்கு பயன்படுத்துகின்றன.
கல்லாபாக்ஸ், வாட்ஸ் அப் தானியங்கிமயமாக்கல் சேவையில் இருந்து, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஏஐ விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் மேடையாக உருவாக திட்டமிட்டுள்ளது. நிறுவனங்கள் ஏஐ ஏஜெண்ட்களை உருவாக்கிக் கொள்ள வழிகாட்ட தேவையான திறன்களை உருவாக்கி வருகிறது.
நிறுவனம் தற்போதைய நிதியை, சேவையை மேம்படுத்தி, விரிவாக்கத்தை வலுவாக்க பயன்படுத்திக்கொள்ள உள்ளது.
சிறு நிறுவனங்கள் கல்லா பெட்டியை நிரப்ப உதவிடும் சென்னை ஸ்டார்ட்-அப் ‘Gallabox'
Edited by Induja Raghunathan