Smart Work-ன்னா இதுதானா? ஒரே நேரத்தில் ஸ்விக்கி, டன்சோ, ரேபிடோவில் வேலை பார்க்கும் சென்னை இளைஞர்!
சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்விக்கி, டன்சோ, ரேபிடோ ஆகிய வேலையையும் ஒரே நேரத்தில் பார்த்து புத்திசாலித்தனமாக பணம் சம்பாதித்து வருவது தொடர்பான சோசியல் மீடியா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்விக்கி, டன்சோ, ரேபிடோ ஆகிய வேலையையும் ஒரே நேரத்தில் பார்த்து புத்திசாலித்தனமாக பணம் சம்பாதித்து வருவது தொடர்பான சோசியல் மீடியா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“வேல சொல்லியே கொல்லுறாங்க... ஒரு மனுஷன் எத்தன வேலையைத் தான் பாக்குறது” என வின்னர் படத்தில் வைகைப்புயல் வடிவேலு காமெடியாக சொல்லியிருப்பார். ஆனால், சென்னையச் சேர்ந்த நபர் ஒருவரோ ஒரே நேரத்தில் 3 ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வேலையையும் ஒரே ரெய்டில் செய்து அசத்தியுள்ளார்.
ஒரே கல்லுல மூணு மாங்கா:
கடந்த சில மாதத்திற்கு முன்பு ஐ.டி.துறையில் மூன்லைட்டிங் என்ற வார்த்தை பிரபலமானது. அதாவது, ஒரு நிறுவனத்தில் இருந்து கொண்டே இன்னொரு நிறுவனத்திற்கு கூடுதல் வருமானத்திற்காக ஐ.டி. துறையைச் சார்ந்தவர்கள் பணியாற்றுவது மூன்லைட்டிங் ஆகும்.
இதேபோல் அவர், அவர்கள் எக்ஸ்ட்ரா வருமானத்திற்காக கூடுதல் வேலைகளைச் செய்து வருகின்றனர். ஆனால், இவரைப் போல் எவராலும் செய்ய முடியாது என சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் நிரூபித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ஸ்வேதா சங்கர் என்ற பெண் தனது லிங்கிடு இன் பக்கத்தில் ஒரே நேரத்தில் ஸ்விக்கி, டன்சோ, ரேபிடோ என மூன்று ஆன்லைன் நிறுவனங்களிலும் பணியாற்றும் நபர் பற்றிய தகவல்களை பகிர்ந்திருந்தார்.
அதாவது, ஸ்வேதா சங்கர் ரேபிடோ என்ற பைக் டாக்ஸியில் பயணிப்பதற்காக புக் செய்துள்ளார். அவரை பிக்அப் செய்ய வந்த ரேபிடோ ஓட்டுநர் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் சீருடையையும், மளிகைப் பொருட்கள், காய்கறி, இறைச்சி ஆகியவற்றை டெலிவரி செய்யும் டன்சோ நிறுவனத்தின் டெலிவரி பேக்கையும் வைத்திருப்பதைக் கண்டு ஷாக்கியுள்ளார்.
இதுகுறித்து லிங்கிடு இன் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"நேற்று ரேபிடோ சவாரி செய்தேன். ஓட்டுநர் அண்ணா ஸ்விக்கி யூனிஃபார்ம் அணிந்து டன்சோ பையுடன் அமர்ந்திருந்தார். அவர் ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு இந்திய ஸ்டார்ட்-அப்களில் வேலை செய்கிறார்,” என பதிவிட்டுள்ளார்.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளைக் குவித்துள்ள இந்த பதிவில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
"ஒருமுறை நான் ஒரு டன்சோ ரைடருடன் பயணம் செய்தேன். நான் சேர வர வேண்டிய இடம் வருவதற்கு முன்னதாக வேறு பாதையில் சென்று ஒரு ஜோமேட்டோ டெலிவரியை கொடுத்துவிட்டு வந்தார்,” என பதிவிட்டுள்ளார்.
மற்றொருவரோ “ஹாஹா.. முக்கோண காதல் கேள்விப்பட்டிருப்போம்... ஒரே நேரத்தில் மூன்று வேலைகளைப் பார்த்து ஆச்சர்யமாக இருக்கிறது,” என பதிவிட்டுள்ளார்.
“இதனை ஸ்மார்ட் வொர்க் என்று சொல்வதை விட காலத்தின் தேவை எனக்கூறலாம். இதுபோன்ற ஹீரோக்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது. அதனால் அவர்கள் குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்கிறார்கள்,” என ஒருவர் பாராட்டியுள்ளார்.
ரேபிடோ ஓட்டும் இன்ஜினியர்:
ஒரே நேரத்தில் மூன்று வேலைகளைப் பார்க்கும் சென்னை நபரைப் போல், வார இறுதி நாட்களில் மட்டும் ரேபிடோ ஓட்டும் இன்ஜினியர் ஒருவரும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார். பெங்களூருவில் உள்ள மைக்ரோசாப் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நபர் ஒருவர், புதுப்புது நபர்களை சந்திப்பதற்காகவும், அவர்களுடன் பேசி மகிழவும் வார இறுதி நாட்களில் ரேபிடோ டிரைவராக பணியாற்றி வருகிறார்.
நிகில் சேத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“இன்று எனது ரேபிடோ டிரைவராக வந்தவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் SDET ஆக இருக்கிறார். அவர் வார இறுதி நாட்களில் மக்களுடன் பேசுவதற்கும் பொழுதுபோக்காகவும் தான் ரேபிடோ ஓட்டி வருகிறார்,” என பதிவிட சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அமேசான் பொருட்கள் டெலிவரியில் சென்னையை கலக்கும், ‘கூரியர் கேர்ள்ஸ் சர்வீஸ்’