சென்னையில் வரும் 30ம் தேதி வர்த்தகத் தலைவர்கள் பங்குபெறும் 'க்ளோபல் பிஸினஸ் மாநாடு'
வர்த்தகத் துறையினருக்கான உலக வர்த்தக மாநாடு,Global Business Conclave 2025 எனும் பெயரில் சென்னையில் வரும் ஜனவரி 30ம் தேதி நடைபெறுகிறது.
வர்த்தகத் துறையினருக்கான 'உலக வர்த்தக மாநாடு', 'குளோபல் பிசினஸ் கான்கிலேவ் -2025' (Global Business Conclave 2025) எனும் பெயரில் சென்னையில் வரும் ஜனவரி 30ம் தேதி நடைபெறுகிறது. Global EDuCrew நடத்தும் இந்த மாநாடு வர்த்தக வெற்றி உத்திகள், புதுமையான எண்ணங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளது.
குளோபல் எஜுக்ரு (Global EDuCrew), வர்த்தகத் துறை தலைவர்கள், தொழில் துறையினர், அதிகாரிகள், முன்னோடிகள், புதுமையாளர் ஆகியோர் பங்கேற்கும் குளோபல் பிஸினஸ் மாநாட்டை சென்னையில் ஜனவரி 30ம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது.
சென்னை ஐடிசி சோழா ஓட்டலில் இந்த மாநாடு நடைபெறுகிறது. தொழில் துறை வேகமாக மாறி வரும் சூழலில் மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகளுக்கு மத்தியில் தொழில் துறையின் பல்வேறு பிரிவினர் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்த மாநாடு அமையும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள், வர்த்தக வெற்றிக்கான உத்திகளை அடையாளம் காட்டுவதோடு, வர்த்தக தலைவர்களுக்கான புரிதலையும் வழங்கும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வர்த்தகத்தை தீர்மானிக்கக் கூடிய வகையில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உள்ளனர். செயல்திறன் வாய்ந்த தலைமை, வளர்ச்சி மாதிரிகள், உறுதியான உத்திகள் ஆகியவை தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதன் வாயிலாக தொழில் துறைக்கான வெற்றி மாதிரிகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், வர்த்தகத் துறையினர் வலைப்பின்னல் வாய்ப்புகளை தேடிக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையும். சந்தை விரிவாக்கம், நீடித்த வர்த்தக செயல்முறைகள், திட்டமிடல் தொடர்பான விவாதங்களும் நடைபெற உள்ளன.
ஸ்விக்கி, போட், ஜோஹோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். யுவர்ஸ்டோரி தமிழ் இந்த மாநாட்டின் ஊடக பங்குதாரராக விளங்குகிறது.
Edited by Induja Raghunathan