Gold Rate Chennai: ஒரே நாளில் அதிரடி விலை குறைவு: இப்போது தங்கம் வாங்கலாமா?
ஆபரணத் தங்கத்தின் விலை தடாலடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்திருப்பது, நகை வாங்குவோருக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. இப்போது, தங்கம் வாங்குவது சரியா என்பது குறித்து பார்ப்போம்.
ஆபரணத் தங்கத்தின் விலை தடாலடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்திருப்பது, நகை வாங்குவோருக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. இப்போது, தங்கம் வாங்குவது சரியா என்பது குறித்து பார்ப்போம்.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.7,990 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.63,920 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து ரூ.8,716 ஆகவும், சவரன் விலை ரூ.88 உயர்ந்து ரூ.69,728 ஆகவும் இருந்தது. இப்போது அதிரடியாக விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (15.2.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 குறைந்து ரூ.7,890 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 குறைந்து ரூ.63,120 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 குறைந்து ரூ.8,607 ஆகவும், சவரன் விலை ரூ.872 குறைந்து ரூ.68,856 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (15.2.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.108 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,08,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்கா - சீனா இடையிலான வரிவிதிப்பு யுத்தம் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச பங்குச் சந்தைகளில் தடுமாற்றம் நிலவி வந்தது. இதனால், பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது.

தற்போது, சர்வதேச பங்குச் சந்தைகள் வெகுவாக மீளத் தொடங்கியுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து மீண்டெழுந்த வண்ணம் உள்ளது உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை தற்போது வெகுவாக சரிந்துள்ளது. பெரிய அளவில் சரிவில் இருக்கும்போதே தங்கத்தை வாங்குவது நல்லது. ஏனெனில், இனி வரும் நாட்களிலும் சர்வதேச பொருளாதார நிலையில் தடுமாற்றம் ஏற்படலாம் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,890 (ரூ.100 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,120 (ரூ.800 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,607 (ரூ.109 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.68,856 (ரூ.872 குறைவு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan