'ஸ்டார்ட் அப்'களுக்கான வளர்ச்சி மேடை'- ஐஐடி மெட்ராஸ் நடத்தும் e-summit மற்றும் ஸ்டார்ட் அப் கண்காட்சி!
இளம் தொழில்முனைவோர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், தகவல்களையும் கண்டறியும் மேடையாக ஐஐடி மெட்ராஸ் e-summit மாநாடு பிப்ரவரி 28ம் தேதி முதல் நடைபெறுகிறது. இதில், முக்கிய அங்கமாக ஐஐடி தொழில்முனைவு மையத்தின் Starup Expo மார்ச் 2ம் தேதி நடைபெறும்.
வேகமாக மாறிவரும் ஸ்டார்ட் அப் துறையின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில், இளம் தொழில்முனைவோர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், தகவல்களையும் கண்டறிவதற்கான மேடையாக ஐஐடி மெட்ராஸ் இ- சம்மிட் (e-summit'25) மாநாட்டை நடத்துகிறது. பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
யுவர்ஸ்டோரி ஊடக பங்குதாரராக விளங்கும் இந்த ஸ்டார்ட் அப் மாநாட்டின் முக்கிய அங்கமாக, ஐஐடி தொழில்முனைவு மையத்தின் 'ஸ்டார்ட் அப் எக்ஸ்போ' (Starup Expo) கண்காட்சி மார்ச் 2ம் தேதி நடைபெறுகிறது. இளம் நிறுவனர்கள் தங்கள் புதுமையாக்கத்தை வெளிப்படுத்துவதற்கான மேடையாக இந்த ஸ்டார்ட் அப் கண்காட்சி நடைபெறுகிறது.

ஸ்டார்ட் அப் மாநாடு
ஐஐடி மெட்ராசின் ஸ்டார்ட் அப் என்கிலேவ் மாநாடு, இன்னொரு வலைப்பின்னல் தொடர்பு நிகழ்ச்சியாக அல்லாமல், தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் மாற்றத்திற்கான மனிதர்களை ஒன்றிணைக்கும் மேடையாக விளங்குகிறது.
ஐடியா கட்டத்தில் இருந்தாலும் சரி அல்லது நிறுவனத்தை வளர்த்தெடுக்க விரும்பும் கட்டத்தில் இருந்தாலும் சரி, இந்த மாநாடு அவர்களுக்கான வழிகாட்டுதல், புரிதலை அளிக்கும் மற்றும் கூட்டு முயற்சிக்கான வாய்ப்புகளை கண்டறியும் இடமாக அமைகிறது.
வல்லுனர்கள் உரையாடல்
மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்த ஸ்டார்ட் அப் மாநாட்டில், புதுமையாக்க, கூட்டு முயற்சி மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் பல அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்னணி தொழில்முனைவோர்களிடம் இருந்து அவர்கள் ஸ்டார்ட் அப் பயண அனுபவத்தை கேட்டறியும் வகையில் வல்லுனர் உரையாடல்கள் மற்றும் தனி உரையாடல்கள் நிகழ உள்ளன. அண்மை போக்குகளை தெரிந்து கொள்ள மற்றும் போட்டிமிக்க சந்தையில் சவால்களை வெல்வதற்கான வழிகளையும் இதன் மூலம் அறியலாம்.
நிறுவன ஐடியாவை முன் வைப்பது, நிதி திரட்டுவது மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளுக்கான வழிகளை கண்டறிவதற்கான பங்கேற்பு தன்மை கொண்ட பயிலறங்குகளும் நடைபெறுகின்றன. தொழில்முனைவோர், வழிகாட்டிகளின் தொடர்புகளையும் பெறலாம்.
முக்கிய நிகழ்வுகள்
இந்த ஆண்டு மாநாட்டில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன:
ஐஐடி மெட்ராஸ் ஷார்க் டாங்க்: இந்திய அளவிலான இந்த போட்டியில் மூன்று லட்சம் பரிசுத்தொகை வெல்ல 800க்கும் மேலான ஸ்டார்ட் அப்கள் பங்கேற்கின்றன. முன்னணி முதலீட்டாளர்களை கவரும் வாய்ப்பையும் பெறலாம்.
தனி சந்திப்பு: பிரகாசமான ஸ்டார்ட் அப்கள் மற்றும் முன்னணி முதலீட்டாளர்கள் இடையிலான நேரடி சந்திப்பு நிகழ்ச்சி. முதலீட்டாளர்கள் கருத்துக்களை அறிய வாய்ப்பு. நிதி வாய்ப்புகளையும் பெறலாம்.
மேலும், பிட்ச் பெஃஸ்ட் மற்றும் இண்டர்ன் பேர் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களை சந்தித்து தங்கள் ஐடியாக்களை சமர்பிக்க பிட்ச் பெஃஸ்ட் வாய்ப்பளிக்கிறது.
ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப் ஆர்வலர்கள், ஸ்டார்ட் அப்பை வளர்க்க விரும்புகிறவர்கள், முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள், தொழில்முனைவோர்கள் ஒரே இடத்தில் சங்கமிக்க இந்த மாநாடு வழி செய்கிறது. வளமான வாய்ப்புகளையும் அளிக்கிறது.
ஸ்டார்ட் அப் கண்காட்சி (Startup Expo)
இந்த மாநாட்டின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, ஐஐடி தொழில்முனைவு மையத்தின் 'ஸ்டார்ட் அப் எக்ஸ்போ' மார்ச் 2ம் தேதி நடைபெறுகிறது. யுவர்ஸ்டோரி தமிழ் இதன் ஊடக பங்குதாரராக விளங்குகிறது.
தென்னகத்தின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் கண்காட்சியாக கருதப்படும் இந்த நிகழ்ச்சி, இளம் தொழில்முனைவோர் தங்கள் ஐடியாக்களை காட்சிப்படுத்துவதற்கான அருமையான மேடையாக அமைகிறது.
இந்த கண்காட்சி, புதுமையாக்கம், தொழில்முனைவு மற்றும் வாய்ப்புகளின் ஒருங்கிணைப்பாக அமைகிறது. மூன்று நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ஸ்டார்ட் அப்கள் தங்கள் சேவைகளையும் பொருட்களையும் மாணவர்கள், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர்கள் முன் காட்சிப்படுத்த உள்ளன.

பங்கேற்பு பலன்
கூட்டு முயற்சி, கற்றல் மற்றும் வளர்ச்சிக்கான மேடையாக இது அமைகிறது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தை பெறலாம். முதலீட்டாளர்களை கவரும் வாய்ப்புகளையும் பெறலாம். பல வகையான பொருட்கள், சேவைகளை அறிந்து கொள்ளலாம். வல்லுனர்களின் பயிலறங்கு, உரையாடல்களில் பங்கேற்று புதிய புரிதல் பெறலாம். ஐடியாக்களை முன் வைக்கும் வாய்ப்புகளை பெறுவதோடு முக்கிய தொடர்புகளையும் உருவாக்கி கொள்ளலாம்.
பல்வேறு தேவை மற்றும் பட்ஜெட்களுக்கு ஏற்ற மூன்று வகையான ஸ்டால்கள் அமைக்க வாய்ப்பு உள்ளது. ஸ்டார்ட் அப்கள் தங்கள் தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்வது எப்படி?
மாநாட்டில் பதிவு செய்து கொள்ள, ஸ்டார்ட் அப் எக்ஸ்போ'வில் பங்கேற்க மற்றும் மேலும் தகவல்களை பெற அணுகவும்! - https://esummitiitm.org/conclaves/startup-conclave
Register
Edited by Induja Raghunathan