Gold Rate Chennai: சவரனுக்கு ரூ.200 குறைவு - தங்கம் விலை வீழ்ச்சி தொடருமா?
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.2,000-க்கு மேல் குறைந்துள்ள நிலையில், இந்தப் போக்கு தொடருமா என்ற கேள்விக்கு ‘சாத்தியம் குறைவு’ என்றே பதிலே கிடைக்கிறது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மேலும் ரூ.200 குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.90 குறைந்து ரூ.8,310 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.720 குறைந்து ரூ.66,480 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.98 குறைந்து ரூ.9,066 ஆகவும், சவரன் விலை ரூ.784 குறைந்து ரூ.72,528 ஆகவும் இருந்தது. தற்போது, இந்த விலை குறைவு தொடர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (7.4.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 குறைந்து ரூ.8,285 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.200 குறைந்து ரூ.66,280 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.28 குறைந்து ரூ.9,038 ஆகவும், சவரன் விலை ரூ.224 குறைந்து ரூ.72,304 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (7.4.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.103 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,03,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தடுமாற்றத்துடன் காணப்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தொடங்கி வைத்த வரிவிதிப்பு யுத்தத்தின் எதிரொலியாக, சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் படுபாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. எனினும், தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்துள்ளது.

உலக அளவில் மத்திய வங்கிகள் பலவும் வெளிநாடுகளில் வைத்திருந்த தங்கத்தை மீண்டும் தங்கள் நாடுகளுக்கு கொண்டு செல்ல தொடங்கியுள்ளன. ‘ரெசஷன்’ என்று சொல்லக் கூடிய பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடுகளும் குறைந்துள்ளதால், ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. ஆனால், இந்தப் போக்கு நீடிக்காது என்றே வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். பங்குச் சந்தை கடுமையாக சரிவதால், பாதுகாப்பான முதலீடாக கருதி மீண்டும் தங்கம் மீது முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தக் கூடும் என்பதால் மீண்டும் தங்கம் விலை உயரலாம் என்கின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,285 (ரூ.25 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.66,280 (ரூ.200 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,038 (ரூ.28 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.72,304 (ரூ.224 குறைவு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan