Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: வார ஆரம்பமே அதிர்ச்சி - தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!

வாரத்தின் ஆரம்பத்திலேயே நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி தரும் விதமாக, ஆபரணத் தங்கத்தின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

Gold Rate Chennai: வார ஆரம்பமே அதிர்ச்சி - தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!

Monday February 17, 2025 , 2 min Read

வாரத்தின் ஆரம்பத்திலேயே நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி தரும் விதமாக, ஆபரணத் தங்கத்தின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தொடரும், என அஞ்சப்படுகிறது.

சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 குறைந்து ரூ.7,890 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 குறைந்து ரூ.63,120 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 குறைந்து ரூ.8,607 ஆகவும், சவரன் விலை ரூ.872 குறைந்து ரூ.68,856 ஆகவும் இருந்த்து.

தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (17.2.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 அதிகரித்து ரூ.7,940 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.63,520 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 அதிகரித்து ரூ.8,662 ஆகவும், சவரன் விலை ரூ.550 உயர்ந்து ரூ.69,296 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (17.2.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.108 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,08,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் தடுமாற்றம் காணத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடரும் அதிரடி நடவடிக்கைகளின் தாக்கத்தால் சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலையற்ற சூழல் நிலவுகிறது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதும் தொடர்வதால் ஆபரணத் தங்கத்தின் விலையும் கூடி வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,940 (ரூ.50 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,520 (ரூ.400 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,662 (ரூ.55 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,292 (ரூ.550 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,940 (ரூ.50 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,520 (ரூ.400 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,662 (ரூ.55 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,292 (ரூ.550 உயர்வு)


Edited by Induja Raghunathan