1,000 மாணவர்களின் 60 புதுமையான டெக் கண்டுப்பிடிப்புகள் - ஐஐடி மெட்ராஸ் நடத்திய கண்காட்சி!
ஐஐடி மெட்ராஸ் புதுமையாக்கத்திற்கான மையத்தின்(CFI) சார்பில் நடைபெற்ற சி.எப்.ஐ., ஓபன் ஹவுஸ் 2025-ல் 26 குழுக்களைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் உருவாக்கிய 60 நவீன தொழில்நுட்ப புதுமையாக்க தீர்வுகளை மையத்தின் மாணவர்கள் ஐஐடி வளாகத்தில் காட்சிக்கு வைத்திருந்தனர்.
ஐஐடி மெட்ராஸ் புதுமையாக்கத்திற்கான மையத்தின்(CFI) சார்பில் நடைபெற்ற சி.எப்.ஐ., ஓபன் ஹவுஸ் 2025-ல் 26 குழுக்களைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் உருவாக்கிய 60 நவீன தொழில்நுட்ப புதுமையாக்க தீர்வுகளை மையத்தின் மாணவர்கள் ஐஐடி வளாகத்தில் காட்சிக்கு வைத்திருந்தனர்.
இந்தியாவின் மிகப்பெரிய மாணவர்கள் நடத்தும் புதுமையாக்க மையங்களில் ஒன்றான சி.எப்.ஐ., பல்வேறு தொழில்நுட்ப துறைகளில் 14 கிளப்களை கொண்டிருப்பதோடு. தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்கும் 8 போட்டி குழுக்களை கொண்டுள்ளது.

இந்த மாணவர்கள் உருவாக்கும் சேவைகளை காட்சிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சி.எப்.ஐ ஓபன் ஹவுஸ் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி மாணவர் திட்டங்கள் அடையாளம் காணப்படுவதற்கான மேடையாக அமைந்து, முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில்துறை ஆதரவை பெற்றுத்தருகிறது.
ஓபன் ஹவுஸ் 2025 ல் இடம்பெற்றிருந்த முக்கிய அரங்குகள் வருமாறு:
S.A.M.V.I.D- அரியானாவில் உள்ள இந்தியாவின் முதல் அரசியல் சாசன அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஏஐ திறன் கொண்ட மனிதவடிவிலான ரோபோ.
சூப்பர் சிரஞ்சி- துல்லியமான அனஸ்தீசியா மயக்க மருந்தை அளிக்க உதவும் நவீன ஊசி.
டிரோன் ஸ்வார்ம்- எடைகள் தூக்கிச்செல்ல மற்றும் டெலிவரிக்கான ஒருங்கிணைந்த டிரோன்களின் கூட்டமைப்பு
”சி.எப்.ஐ. - ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐ& இ சேர்ந்தவர்களுக்கு மிகவும் முக்கியமானது. மாணவர்கள் சமூகத்தில் பொருட்கள், சேவைகளை உருவாக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இளங்கலை மாணவர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்கள் இந்த மையத்தின் செயல்பாட்டில் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு மையத்தின் மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகளில் சிறந்த முறையில் பங்கேற்றுள்ளனர்,” என்று ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி தெரிவித்தார்.
“சி.எப்.ஐ மாணவர்கள் தொழில்முனைவை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளனர். பல குழுக்கள் பிரி இன்குபேட்டர் நிர்மான் அளவுக்கு சென்றுள்ளன. இந்த ஆண்டு, முதல் முறையாக சிஎப்.ஐ மாணவர் தலைவர் சர்தக் சவுரவ் பட்டம் முடித்தவுடன் சொந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கியுள்ளார்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சி.எப்.ஐ,. புதுமையாக்கத்தின் அடையாளமாக விளங்கிறது. ஓபன் ஹவுஸில் ஆயிரம் மாணவர்கள் 60 குழு திட்டங்களில் பங்கேற்றனர். இந்த ஆண்டு மாணவர்கள் புதுமையாக்கத்தின் அடிப்படையில் 15 காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளோம். மூன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகும் என எதிர்பார்க்கிறோம்,” என ஐஐடி மெட்ராஸ் டீன் சத்யநாராயணா என்.குமாடி தெரிவித்தார்.

கண்காட்சியின் மற்ற முக்கிய அம்சங்கள்:
மென்பொருள் மற்றும் ஏஐ துறையில், ஆடியோ சார்ந்த விஆர் கேம் பிளின்க் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டது. ஏஐ ரஹ்மான் எனும் பல டிராக் பியூஷன் இசை ஜெனரேட்டர் இம்மர்சிவ் நுட்பத்தை காட்சிப்படுத்தியது. ஆக்சிபை மேம்பட்ட இமேஜ் பிராசஸிங் கருவியாக அமைந்தது. குவான் கிரிப்ட் எதிர்கால சைபர் பாதுகாப்பை காட்சிப்படுத்தியது.
டிரேட் கிராப்ட் ஏஐ திறன் கொண்ட கணிப்பு வர்த்தக மேடையாக அமைந்து பங்குச்சந்தை உள்ளிட்ட செயல்பாடுகளை காட்சிப்படுத்தியது.
டீம் ராப்டர், பார்முலா ஸ்டூடண்ட் பந்தைய கார், ஃபார்முலா பாரத் நிகழ்ச்சியில் முதலிடம் பெற்றது.Team iGEM சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது.
Edited by Induja Raghunathan