விபத்துகளை தவிர்த்து சாலைகளை பாதுகாப்பானதாக்க ஏஐ டேஷ்கேமரா உருவாக்கியுள்ள ஸ்டார்ட்-அப்!
2022ம் ஆண்டில் மட்டும், நாட்டில் சாலை விபத்துகளால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தடுக்க, பெங்களூரு ஸ்டார்ட்-அப் Dacio.ai ஏஐ தொழில்நுட்பத்துடன் இயங்கும் டேஷ் கேமராக்களை வடிவமைத்து, இந்தியசாலைகளை பாதுகாப்பானதாக மாற்ற முயல்கிறது.
அதீத வேகம், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிகளை புறக்கணித்தல் ஆகியவை சர்வசாதாரணமாகி வருவதால், இந்தியாவில் சமீபத்திய ஆண்டுகளில் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன.
2022ம் ஆண்டில் மட்டும், நாட்டில் சாலை விபத்துகளால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலை நீடிப்பதைத்தடுக்க, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட Dacio.ai ஸ்டார்ட்அப், ஏஐ தொழில்நுட்பத்துடன் இயங்கும் டேஷ் கேமராக்களை வடிவமைத்து, இந்திய சாலைகளை பாதுகாப்பானதாக மாற்ற முயற்சிக்கிறது.
2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம், டாசியோ ஏஐ-ன் இணை நிறுவனரும், தலைமை தயாரிப்பு அதிகாரியான அபிலாஷ் ரெட்டியும், சுமன் காந்தமும் இணைந்து ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் சிசிடிவி கேமராகளை தயாரிக்கும் டாசியோ நிறுவனத்தை துவங்கினர். இந்த டேஷ்கேம் வணிகத்திலிருந்து வணிகத் துறைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, லாரிகள், லாஜிஸ்டிக்ஸ் ஃப்ளீட்கள் மற்றும் பள்ளி பேருந்துகள் போன்ற வணிக வாகனங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
"லாஜிஸ்டிக்ஸ் துறை மிகவும் துண்டுத் துண்டாகவும், பரவலாக்கப்பட்டதாகவும் இருப்பதால், ஒவ்வொரு கட்டத்திலும் தெரிவுநிலை இல்லாமை மற்றும் தகவல் இடைவெளி உள்ளது. இதனால், சாலை, வாகனம் மற்றும் ஓட்டுநர் பாதுகாப்பை உறுதி செய்வது கடினமாகுகிறது. எனவே, நாங்கள் ஒரு பாதுகாப்பு உள்கட்டமைப்பை உருவாக்க விரும்பினோம்," என்று சுமன் விளக்குகிறார்.

சாலைகளை பாதுகாப்பானதாக்கும் ஸ்டார்ட்அப்!
YourStory இன் டெக்30 2024 பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்த ஸ்டார்ட்அப், அசம்பாவித சம்பவம் நடப்பதற்கு முன்பு ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுக்கிறது. சம்பவத்தின் வீடியோ பிளேபேக்கை ஃப்ளீட் ஆபரேட்டருக்கு அனுப்புவதன் மூலம், ஏராளமான காப்பீடு மற்றும் திருட்டு வழக்குகளைத் தடுப்பதற்கான திறவுகோலாக செயல்படுகிறது. ஒரு B2B ஸ்டார்ட்அப்பாக, இது OEM Olectra, Dipper Schools மற்றும் Professional Couriers உள்ளிட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. டேசியோ ஒரு மல்டி-சேனல் அமைப்பை வழங்குகிறது. ஒரு வாகனத்திற்கு ஐந்து கேமராக்கள் வரை ஆதரிக்கும் திறன் கொண்டது.
ஒவ்வொரு கேமராவும் சாலை நிலைமைகள், ஓட்டுநர் நடத்தை அல்லது பூட் போன்ற வாகனத்தின் பிற முக்கியமான பகுதிகளைக் கண்காணித்து, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உதவுகிறது. அதன் முக்கிய சலுகைகளில் ஒன்றான டிரைவர் கண்காணிப்பு அமைப்பு (DMS), ஓட்டுநர் பாதுகாப்பை மேம்படுத்தவும், மனித தவறுகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கண் அசைவு, முகபாவனைகள் மற்றும் தலை நிலை போன்ற முக்கியமான அளவுருக்களை பகுப்பாய்வு செய்து, மயக்கம், கவனச்சிதறல் (எ.கா. மொபைல் ஃபோனைப் பயன்படுத்துதல்) அல்லது சீட் பெல்ட் பயன்பாடு இல்லாமை போன்ற சிக்கல்களைக் கண்டறிகிறது. இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் அடையாளம் காண்பதில் அதன் அமைப்பு 98% க்கும் அதிகமாக துல்லியமாக இருப்பதாக நிறுவனம் கூறுகிறது.
இதன்மூலம், ஓட்டுநர் மற்றும் ஃப்ளீட் ஆபரேட்டர்கள் இருவரையும், உடனடியாக நடவடிக்கை எடுக்க எச்சரிக்கிறது. எடுத்துக்காட்டாக, தூக்கத்திலிருக்கும் ஒரு ஓட்டுநர் ஓய்வு எடுக்க பரிந்துரைக்கப்படலாம். ஃப்ளீட் ஆபரேட்டருக்கு, பழுதுபார்ப்பு செலவுகள், காப்பீட்டு கோரிக்கைகள் மற்றும் சட்டப் பொறுப்புகளைச் சேமிக்க உதவுகிறது. இதன்மூலம், நாட்டில் உயர் ஓட்டுநர் தரநிலைகள் மற்றும் சிறந்த ஓட்டுநர் நிலைமைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
"நாங்கள் குறிப்பாக ஒரு டேஷ்கேம் தயாரிப்பு நிறுவனம் அல்ல. மொபிலிட்டி துறைக்கான தரவு மற்றும் தொழில்நுட்ப அடுக்காக எங்களை உருவாக்க முயற்சிக்கிறோம். அதாவது, பணம் செலுத்துவதற்கு UPI ஆனது போன்று, மொபிலிட்டி துறைக்கான தரவு மற்றும் தொழில்நுட்ப அடுக்கு அல்லது உள்கட்டமைப்பை உருவாக்க விரும்புகிறோம்," என்று டேசியோவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுமன் காந்தம் யுவர்ஸ்டோரியிடம் கூறினார்.
11க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அதன் குழுவுடன் டாசியோ, கேபெக்ஸ் மற்றும் ஓபெக்ஸ் மாதிரியில் வணிகத்தை தொடர்கிறது. கேபெக்ஸ் மாதிரியில் ஃப்ளீட் ஆபரேட்டர்கள் கேமராவை வாங்கலாம் அல்லது மாதாந்திர சந்தாவிற்கு பணம் செலுத்துவதை தேர்வு செய்யலாம்.
அதன் ஓபெக்ஸ் மாடலில், அதிக நெகிழ்வுத்தன்மையுடன் உள்ள மாதாந்திர கட்டணத்துடன் கேமரா குத்தகைக்கு விடப்படுகிறது. அவர்களது வாடிக்கையாளர்களில் 80% பேர் ஓபெக்ஸ் மாதிரியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் மாதந்திர கட்டணமாக ஒரு வாகனத்திற்கு மாதத்திற்கு, ரூ.2000 வசூலிக்கப்படுகிறது. இதுவரை 1,000 சாதனங்களை நிறுவியுள்ளது. மேலும், அடுத்த ஆறு மாதங்களில் 7,000 வாகனங்களை இணைக்க திட்டமிட்டுள்ளது.ஆகஸ்ட் மாத இறுதிக்குள் குறைந்தது 10,000- முதல் 12,000 வாகனங்களை எட்டத் திட்டமிட்டுள்ளது.
இந்திய ஃப்ளீட் மேலாண்மை அமைப்புகள் சந்தை 2032ம் நிதி்யாண்டில் 15.25% உயர்ந்து, CAGR இல் 4.79 பில்லியன் டாலராக உயரும் என்று சந்தைகள் மற்றும் தரவு அறிக்கையின்படி எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஃப்ளீட் ஆபரேட்டர்கள் இயக்க செலவுகளை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும் லாபத்தை அதிகரிப்பதற்கும் இத்தகைய அமைப்புகளை அதிகளவில் நம்பியிருக்கின்றனர்.

'காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க உதவும் ஏஐ' - புது நம்பிக்கை அளிக்கும் ஸ்டார்ட்-அப்'கள்!