வளரும் நுட்பங்களில் இந்திய- அமெரிக்க கூட்டு முயற்சி - மோடி- டிரம்ப் பேச்சு வார்த்தை!
செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர், தரவு மையங்கள், குவாண்டம் நுட்பம் மற்றும் புதுயுக நுப்டங்கள் ஆகியவை வாஷிங்டன்னில் நடைபெற்ற இரு தலைவர்கள் பேச்சு வார்த்தையில் முக்கிய அங்கம் வகித்தன.
செயற்கை நுண்ணறிவு, புதுமையாக்கம், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சு வார்த்தையின் போது முக்கிய அங்கம் வகித்தன.
இதனிடையே, அமெரிக்கா- இந்தியா டிரஸ்ட் (TRUST) முயற்சி, ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் இண்டஸ் புதுமையாக்கத்தை வேகமாக்குவதற்கான வரைவு மற்றும் தொழில்நுட்ப உறவுகளை வலுவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை இருதரப்பும் அறிவித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர், தரவு மையங்கள், குவாண்டம் நுட்பம் மற்றும் புதுயுக நுப்டங்கள் ஆகியவை வாஷிங்டன்னில் நடைபெற்ற இரு தலைவர்கள் பேச்சு வார்த்தையில் முக்கிய அங்கம் வகித்தன.
இந்தியா மற்றும் அமெரிக்கா, முக்கிய மற்றும் வளரும் தொழில்நுட்ப பரப்புகளில் கூட்டு முயற்சியை அதிகரிக்க உறுதி எடுத்துள்ளதோடு, வியூக நோக்கிலான தொழில்நுட்பத்தை கொண்டு இந்திய அமெரிக்க உறவை மாற்றுவது தொடர்பான TRUST திட்டத்தையும் அறிமுகம் செய்தன.
இந்த டிரஸ்ட் முயற்சி, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், குவாண்டம், உயிரி நுட்பம், எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் முக்கிய மற்றும் வளரும் நுப்டங்கள் பயன்பாடு அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இடையிலான கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் அமையும், என இரு நாடுகளின் கூட்டறிக்கை தெரிவிக்கிறது. அதே நேரத்தில், உறுதி செய்யப்பட்ட வெண்டர்களை பயன்படுத்துவது மற்றும் அதி முக்கிய நுட்பங்களை பாதுகாப்பதை உறுதி செய்கிறது.
இந்த திட்டத்தின் மைய தூணாக, இந்த ஆண்டு இறுதிக்குள் ஏஇ உள்கட்டமைப்பை வேகமாக்குவதற்கான இந்தியா- அமெரிக்க வரைவு திட்டத்தை உருவாக்க அமெரிக்க மற்றும் இந்திய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட இரு நாட்டுத்தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். உருவாக்கம், செயலாக்கம் மற்றும் நிதி திரட்டலில் சிக்கல்களை கண்டறிவது, இந்தியாவில் உள்ள பெரிய அளவிலான அமெரிக்கா சார்ந்த ஏஐ உள்கட்டமைப்பை மைல்கற்கள் மற்றும் எதிர்கால செயல்களுடன் இணைப்பதும் இதில் அடங்கும்.
அடுத்த தலைமுறை தரவு மையங்களில் நிறுவன கூட்டு மற்றும் முதலீடு, ஏஐ திறன் மற்றும் பிராசஸர் மேம்பாடு, அணுகல் தொடர்பான கூட்டு முயற்சி, ஏஐ மாதிரிகளில் புதுமையாக்கம், சமூக சவால்களை எதிர்கொள்வதற்கான ஏஐ சேவைகளை உருவாக்குவது தொடர்பாக இரு நாடுகளும் இணைந்து செயல்படும். அதே நேரத்தில் இந்த நுட்பங்களை பாதுகாப்பதற்கான கட்டுப்பாடுகளிலும் கவனம் செலுத்தும் மற்றும் கட்டுப்பாடு தடைகளை தளர்த்தும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டஸ் இன்னவேஷன் திட்டத்தையும், இரு தலைவர்களும் அறிவித்தனர். வெற்றிகரமான இண்டஸ்- எக்ஸ் மேடை சார்ந்த புதிய புதுமையாக்க பாலமாக இது அமைகிறது. இது, இரு தரப்பும் புதுமையாக்கத்தில் முன்னிலை வகிக்க மற்றும் 21ம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ள, இந்தியா- அமெரிக்க தொழில்துறை , கல்வி நிறுவன கூட்டு முயற்சியை மேம்படுத்தி, விண்வெளி, எரிசக்தி மற்றும் இதர வளரும் நுட்பங்களில் முன்னணி நிலையை தக்க வைத்துக்கொள்ள தேவையான முதலீட்டை ஊக்குவிக்கும்.
நம்முடைய ராணுவங்களுக்காக, முக்கிய கொள்திறனை உருவாக்க, அமெரிக்க- இந்தியா பாதுகாப்பு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், பல்கலைக்கழகங்கள் இடையே பங்குதாரர் முயற்சியை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்ட இண்ட்ஸ்-எக்ஸ் திட்டத்தை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இதன் அடுத்த மாநாட்டை 2025ல் வரவேற்பதாக தெரிவித்தனர்.
டிரஸ்ட் திட்டத்தின்படி, செமிகண்டக்டர், அரிய தாத்துக்கள், மேம்பட்ட தாதுக்கள், மருந்தக பொருட்கள் ஆகிய துறைகளில் நம்பகமான, உறுதியான சப்ளை சைனை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்திய அமெரிக்க சிவில் விண்வெளி கூட்டுறவுக்கான முன்னோடி ஆண்டாக 2025 ஐ தலைவர் வர்ணித்தனர். சர்வதேச விண்வெளி மையத்தில் முதல் இந்தியரை அனுப்புவதற்கான நாசா- இஸ்ரோ கூட்டு திட்டம், பூமியின் பரப்பில் நிகழும் மாற்றங்களை இரட்டை ராடார் கொண்டு வரைபடமாக்கும் முன்னோடி முயற்சியான 'NISAR' திட்டத்தை முன்னதாக துவக்குவது ஆகியவை இதில் அடங்கும்.
விண்வெளி ஆய்விலும் மேம்பட்ட கூட்டு முயற்சிக்கு தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். நீண்ட கால அளவிலான மனித விண்வெளி பயணம், விண்கலன் பாதுகாப்பு, வளரும் நுட்பங்கள் தொழில்நுட்ப பகிர்வு ஆகியவை இதில் அடங்கும்.
மேம்பட்ட விண்வெளி பயணம், செயற்கைகோள், விண்வெளி செலுத்தும் அமைப்புகள், விண்வெளி நீடித்த தன்மை விண்வெளி சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் வழக்கமான மற்றும் வளரும் பிரிவுகளில், வர்த்தக விண்வெளி கூட்டை மேம்படுத்தவும் இரு தலைவர்களும் உறுதி தெரிவித்துள்ளனர்.
இந்திய அமெரிக்க அறிவியல் ஆய்வு சமூகங்கள் இடையிலான உறவை வலுவாக்குவதன் அவசியத்தை குறிப்பிட்ட இரு தரப்பினரும், அமெரிக்க தேசிய அறிவியல் மையம் மற்றும் இந்தியாவின் அனுசந்தன் தேசிய ஆய்வு மையம் இடையிலான புதிய கூட்டை அறிவித்தன.
செமிகண்டக்டர், இணைக்கப்பட்ட வாகனங்கள், இயந்திர கற்றல், அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், அறிவுசார் போக்குவரத்து அமைப்புகள், உயிரி உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்க தேசிய அறிவியல் மையம் மற்றும் பல்வேறு இந்திய அறிவியல் கழகங்கள் இடையிலான தற்போதைய கூட்டு முயற்சியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய கூட்டு அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தொடர்பான பிரச்சனைகள், அதி நுட்ப வர்த்தக ஊக்கம், தொழில்நுட்ப பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிப்பது தொடர்பாக முயற்சியை இரட்டிப்பாக தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஏற்றுமதி கட்டுப்பாட்டில் உள்ள மூன்றாம் தரப்பின் முறையற்ற செயல்பாடுகளை எதிர்கொள்வது தொடர்பாகவும் உறுதி கொண்டுள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் மற்றும் அமெரிக்க அதிபருடனான சந்திப்பு, பேச்சு வார்த்தை, சர்வதேச நிலைத்தன்மை மற்றும் வளத்திற்கு உறவு தொடர்பான பகிரப்பட்ட தொலைநோக்கின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இந்திய மின்னணு மற்றும் செமிகண்டக்டர் சங்க தலைவர் அசோக் சந்தோக் கூறியுள்ளார்.
"வியூக, பொருளாதார, தொழில்நுட்ப முன்னுரிமைகளை மனதில் கொண்ட, 21ம் நூற்றாண்டின் முக்கிய உறவாக இது வளர்ந்துள்ளது," என கூறினார்.
வடிவமைப்பு சார்ந்த உற்பத்தியில், குறிப்பாக செமிகண்டகர், மின்னணு துறைகளில் உலக அளவில் முன்னிலை பெற விரும்பும் இந்தியாவின் நோக்கத்திற்கு இந்த கூட்டுறவு முக்கியம் என்றும் தெரிவித்தார்.
செய்தி- பிடிஐ
Edited by Induja Raghunathan