Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'3 ஆண்டுகளில் இந்தியா சொந்த ஏஐ சிப்'களை தயாரிக்கும்' - ஐடி அமைச்சர் உறுதி!

ஏஐ மிஷன் கீழ்; தரவுகள் மேடை, ஏஐ கோஷா, ஏஐ பயிற்சி உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை அமைச்சர் அறிவித்தார்.

'3 ஆண்டுகளில் இந்தியா சொந்த ஏஐ சிப்'களை தயாரிக்கும்' -  ஐடி அமைச்சர் உறுதி!

Friday March 07, 2025 , 2 min Read

இந்தியாவில் இருந்து சொந்தமாக ஏஐ நுட்பங்களை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைக்கம் அறிவித்துள்ளது. இந்தியா விரைவில் சொந்த ஜிபியூ கொண்டிருக்கும், என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.

ரூ.10,372 கோடி செலவிலான ஏஐ மிஷன் திட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இவ்வாறு கூறினார்.

“நம்முடைய சொந்த சிப் அமைப்புகளை (GPU) உருவாக்குவதற்கான முயற்சியில் பெரிய பாய்ச்சலுக்கான பணிகளை முறையாக்கி இருக்கிறோம். இது நம் நாட்டின் பாதையை மாற்றும். முழு திட்டத்தை இறுதி செய்து வரும் நிலையில், இப்போது விரிவான ஆலோசனை கட்டத்தில் இருக்கிறோம். இது முடிவான பிறகு, அடுத்த 3-4 ஆண்டுகளில் நாம் முன்னணி ஐந்து நாடுகளுடன் இருப்போம்,” என்று அமைச்சர் கூறினார்.
IT

எல்.எல்.எம் எனப்படும் மொழி மாதிரிகளுக்கான செயலி உருவாக்கம் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், 67 செயலிகளுக்கான விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், இவற்றில் முதிர்ச்சியாக உள்ள சில விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். எனினும், இது குறித்து மேலும் தகவல் அளிக்கவில்லை.

ஏற்கனவே உள்ள அடிப்படை மாதிரிகளில் இருந்து இந்திய ஏஐ மாதிரிகள் கற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

“நம்முடைய அடிப்படை மாதிரிகள், அண்மை கணித அல்கோரிதமில் இருந்து வலுப்பெறும். கணிதம் தான் வேறுபாட்டை கொண்டு வரும் என்பதால், செயல்திறனில் வரும் இந்த பாய்ச்சல் ஏற்படுவதோடு, மாதிரிகளை உருவாக்கும் பொறியியலின் சிறந்த செயல்முறையை பின்பற்றி வளங்களை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும், என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் செலவிட்ட தொகையில் ஒரு சிறு பகுதியில் இந்தியா நிலவுக்கு விண்கலம் அனுப்பியது போல, மிக குறைந்த செலவில், அடிப்படை ஏஐ மாதிரிகளை இந்தியா உருவாக்கும், என்றார்.

ஏஐ மிஷன் கீழ் பல மாதங்களாக செயல்பாட்டில் இருக்கும் முக்கிய முயற்சிகளையும் அமைச்சர் அறிவித்தார். ஒருங்கிணைந்த தரவு மேடை, ஏஐ கோஷா, ஜிபியூ சேவைக்கான ஏஐ கம்ப்யூட் போர்டல், ஏஐ திறன் வரைவு தளம், ஐகாட் ஏஐ,.- சிவில் அதிகாரிகளுக்கான பயிற்சி ஆகியவை இதில் அடங்கும்.  

“15000 ஜிபியூ திறன் இப்போது அளிக்கப்படுகிறது. தனியார் பங்களிப்பு மற்றும் அரசின் சொந்த சேவைகள் மூலம் மேலும் திறனை அதிகரிப்போம், என துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜிபியூ ஒரு சேவையாக ஆய்வாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு, உலகில் எங்கும் உள்ளதைவிட மிகவும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது என்று அவர் கூறினார். ஏஐ கம்ப்யூட் திறன் பெரிதும் உள்நாட்டு ஏஐ மாதிரிகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

ஏஐ கோஷா, ஆய்வாளர்கள், ஸ்டார்ட் அப்களுக்கு, உள்நாட்டு மாதிரிகள், சேவைகள் உருவாக்க தேவையான தரவுகள், கருவிகள், ஏஐ மாதிரிகளை அளிக்கும். தேசிய ஒருங்கிணைந்த தரவுகள் மேடை, வெளிநாட்டு மாதிரிகளின் சார்பை எதிர்கொள்ள உதவும், என்றார்.

“ஏஐ கோஷா மூலம், மாதிரிகளில் உள்ள சார்பு அல்லது பாகுபாடு பிரச்சனையை எதிர்கொள்ள முடியும். இந்த தரவுகள் பட்டியல் மாதிரிகளை உருவாக்குபவர்களுக்கு அளிக்கப்படும். இந்தியாவுக்கு என்று பொருத்தமான மாதிரிகளை உருவாக்க இது உதவும், என்று கிருஷ்ணன் தெரிவித்தார்.

கூடுதல் செயலர் மற்றும் ஏஐ மிஷன் சி.இ.ஓ. அபிஷேக் சிங், ஏஐ கோஷாவுடன் இணைந்து மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகள் தரவுகளை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஸ்டார்ட் அப்கள் சேவைகளை உருவாக்கி தீர்வு காண்பதற்கான பிரச்சனை அறிக்கைகளை அரசு அமைப்புகள் சமர்பிக்க வேண்டும், என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan