'10 நிமிடத்தில் மனித டெலிவரி' - பெங்களுரு ஸ்டார்ட்-அப் topmate.io புதுமையான ஐடியா!
தொழில் வாழ்க்கை தொடர்பான ஆலோசனை தேவையா? இந்த பெங்களூரு ஸ்டார்ட் அப், 10 நிமிடத்தில் அனுபவ அறிவை வழங்கும் வல்லுனர்களை உங்களுக்கு அனுப்பிவைக்கும் சேவையை தொடங்கியுள்ளது. இது அருமையானதா அல்லது வெறும் பரபரப்பு தானா என பார்க்கலாம்.
தொழில் வாழ்க்கை தொடர்பான ஆலோசனை தேவையா? வழிகாட்டி ஒருவரின் பதிலுக்காக நாட் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, பத்தே நிமிடங்களில் இதை சாத்தியமாக்குகிறது.
ஆம், பிளின்கிட், ஜெப்டோ, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்ற குவிக் காமர்ஸ் சேவைகளை பின்பற்றி, ஆனால், இதை மனித ஆலோசனைக்கு பொருந்தச்செய்யும் வகையில் 'டாப்மேட்' (Topmate) என்ற ஸ்டார்ட்-அப் 10 நிமிடத்தில் மனித ஆலோசனையை பெறும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
தேவைக்கு ஏற்ற நேரத்தில், 10 நிமிடத்தில் அனுபவ அறிவை வழங்கத் தயாராக இருக்கும் வல்லுனர்கள் சேவையாக இது அமைகிறது. ஒரு பொருளை ஆர்டர் செய்து எளிதாக வாங்குவது போல, அனுபவ அறிவை எளிதாக அணுக இந்த சேவை வழி செய்கிறது.

மனித ஆலோசனையை பெறும் எதிர்கால வழி இதுவா? அலசிப்பார்க்கலாம் வாருங்கள்.
10 நிமிட மனித சேவை
டாப்மேட் சேவை, பல்வேறு துறைகளைச்சேர்ந்த வல்லுனர்கள் பயனாளிகள் 10 நிமிடத்தில் தொடர்பு கொள்ள வழி செய்கிறது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் இந்த சேவை, தொழில் வாழ்க்கை ஆலோசனை, தனி நபர் வளர்ச்சி உள்ளிட்ட ஆலோசனைகளை நாடுபவர்களுக்கு உதவுகிறது.
மணிக்கணக்கில் கட்டுரைகளை படிப்பதை விட அல்லது வழிகாட்டி வீடியோக்களை பார்ப்பதைவிட, பயனாளிகள் வேகமான, தனிப்பட்ட ஆலோசனைகள் வல்லுனர்களிடம் இருந்து நேரடியாக பெற இந்த சேவை வழி செய்கிறது.
"எல்லையில்லா இணையத்தேடலுக்கு மாற்றாக இந்த சேவை பயனாளிகளுக்கான ஆலோசனையை எளிதாக்குகிறது," என நிறுவன மார்க்கெட்டிங் தலைவர் நிமிஷா சந்தா உற்சாகமாக கூறுகிறார்.
பயனாளிகள் வல்லுனர்களை தொடர்பு கொள்வதை நிகழ் நேரத்தில் சாத்தியமாக்கும் சேவை, வழக்கமான முறையில் உண்டாகும் தாமதத்தை தவிர்க்கிறது.

இணைய பரபரப்பு
இந்த சேவை ஏற்கனவே குறிப்பிடத்தக்க பயனாளிகள ஈர்த்துள்ளது. பத்து லட்சம் பயனாளிகள் மற்றும் மூன்று லட்சம் வல்லுனர்கள், கிரியேட்டர்கள் இணைந்திருப்பதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.
வல்லுனர் ஆலோசனை அணுகலுக்கான தேவையை இது உணர்த்துகிறது.
உடனடி மற்றும் தனிப்பட்ட ஆலோசனைகளை விரும்பும் பயனாளிகள் இந்த சேவையை நாடுகின்றனர். ஆனால், இந்த புதுமையான எண்ணம் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலர் இந்த ஸ்டார்ட் அப்பின் முயற்சியை பாராட்டியுள்ளபர்.
பல மணி நேரம் அல்லது நாட் கணக்கில் பதிலுக்கு காத்திருப்பதை விட, மனித ஆலோசனையை சில நிமிடங்களில் பெரும் வாய்ப்பு கவர்கிறது. ஆனால், இதன் நடைமுறைத்தன்மையை பலர் சந்தேகிக்கின்றனர்.
"சேவை கட்டண விகிதம், ஆலோசனை நேரம் மற்றும் இந்த முறையின் நீடித்த தன்மை தொடர்பான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண 10 நிமிட உரையாடல் போதாது," என சிலர் கூறிகின்றனர். இந்த சேவை தரமானதாக அமையுமா என்ற கேள்வியும் இருக்கிறது.

சமூக ஊடக ஆதரவு
10 நிமிட மனித ஆலோசனை சேவை பற்றி எக்ஸ், லிங்க்டுஇன் உள்ளிட்ட தளங்களில் பரபரப்பாக விவாதம் நடைபெறுகிறது. இந்த எண்ணம் புதுமையானது என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு சிலர் உடனடி ஆலோசனை பெறத் தயாராகும் நிலையில் மற்றவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
ஆனால், நிறுவன சேவை அனைவரையும் கவர்ந்துள்ளது. மனித சேவை ஆலோசனை என்பது வழக்கமானது அல்ல என்றாலும், உடனடி மற்றும் தனிப்பட்ட ஆலோசனை தேவையை இது நிறைவேற்றுவதாக அமைகிறது.
எதிர்கால ஆலோசனை
நாம் தொழில்முறை ஆலோசனை பெறும் விதத்தை இந்த சேவை மாற்றி அமைக்குமா அல்லது இதன் புதுமை உலர்ந்து போகுமா என்று தெரியவில்லை. ஆனால், இந்த சேவை வல்லுனர் சேவை பெறுவதில் புதுமையாக அமைகிறது. செலவு மற்றும் தரத்தை கவனத்தில் கொண்டால், பெரிய அளவில் வளரலாம்.
ஏஐ ஆதிக்கம் செலுத்தும் உலகில், உடனடியாக, மனித ஆலோசனை பெறுவது ஈர்ப்புடையது. வேகமான முடிவெடுக்க நிறுவன சேவை தேவைப்படுவதாக அமையலாம். இதன் வெற்றியை பொருந்த்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Edited by Induja Raghunathan