Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

30 வகையான குளிர் பாணங்களை அறிமுகம் செய்து அசத்திய காளிமார்க் நிறுவனம்!

30 வகையான குளிர் பாணங்களை அறிமுகம் செய்து அசத்திய காளிமார்க் நிறுவனம்!

Wednesday May 08, 2019 , 2 min Read

பொவொன்டோ, விப்ரோ உள்ளிட்ட புகழ்பெற்ற குளிர்பாணங்கள் விற்பனை செய்து வரும் நூற்றாண்டு பழைமைமிக்க காளிமார்க் நிறுவனம், 30 வகையான குளிர் பாணங்களை அறிமுகம் செய்துள்ளது. பொவொன்டோ, ஜிப்ஸி, விப்ரோ ஆகிய பிராண்ட் பெயர்களின் கீழ் இந்த பாணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பன்னாட்டு குளிர்பாண நிறுவனங்களின் போட்டியை சமாளித்து பொவொன்டோ உள்ளிட்ட குளிர்பாணங்களை உள்நாட்டில் சிறப்பாக சந்தைப் படுத்தி வருகிறது 100 ஆண்டுகளுக்கும் பழைமையான சென்னையைச் சேர்ந்த காளிமார்க் நிறுவனம்.

காளிமார்க் நிறுவனம், புகழ் பெற்ற பொனொன்டோ கோலா பாணம் தவிர, விப்ரோ எனும் பெயரில் பன்னீர் சோடா உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் நிறுவனம், பொவொன்டோ, ஜிப்ஸி, விப்ரோ ஆகிய பிராண்ட் பெயர்களின் கீழ் இந்த பாணங்கள் அறிமுகம் செய்துள்ளது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், திரைப்பட நடிகை நிக்கி கல்ரானி, அக்‌ஷரா ஹாசன் மற்றும் நட்சத்திர சமையல் கலைஞர் தாமு ஆகியோர் இந்த பாணங்களை அறிமுகம் செய்தனர்.

Zipsy எனும் ப்ராண்ட் பெயரில் அன்னாசி, மாம்பழம் மற்றும் லிச்சி ஆகிய சுவைகளில் பாணத்தை நடிகை நிக்கி கல்ரானி அறிமுகம் செய்தார். சாக்லெட் மற்றும் வென்னிலா சுவைகளில் தேங்காய் பால் பாணமும் அறிமுகம் செய்யப்பட்டது. இவை 180 மிலி டெட்ரா பாக்கெட்களில் கிடைக்கின்றன.

Ilani பாணங்கள் அனைத்தும் செயற்கை சுவை சேர்க்கப்படாமல் அவற்றின் இயற்கையான சுவையில் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை அக்‌ஷரா ஹாசன், ’ஜிபிஸ்’ பிராண்ட் கீழ், மாம்பழம், கொய்யா உள்ளிட்ட ஏழு சுவைகளில் பாணங்கள் அறிமுகம் செய்தார். இவை 200 மற்றும் 500 மிலி பெட் பாட்டில்களில் கிடைக்கின்றன.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காளிமார்க் குழுமத்தில் தொடக்கக் கதையை படிக்க: நூற்றாண்டை கடந்து குளிர்பானத் தொழிலில் சந்தையை நிலைநாட்டிய ‘காலிமார்க்’ இந்திய ப்ராண்டின் கதை!

---------------------------------------------------------------------------------------------------------------------

கான் ரவா மற்றும் கான் மாவு ரகங்களை இரண்டு வித அளவுகளில் சமையல் கலைஞர் தாமு அறிமுகம் செய்தார். பொவின்டோ பிராண்ட் கீழ் மற்ற பாணங்களை அம்பாள் முத்துமணி, காளிமார்க் குழும இணை நிர்வாக இயக்குனர் ஜே.ரமேஷ் அறிமுகம் செய்தார்.

விப்ரோ, எலுமிச்சை பாணமான ஜிம்சோ, இஞ்சி சுவை கொண்ட ஜிஞ்சி மற்றும் ஆரஞ்சு சுவை கொண்ட டிகோ ஆகிய பாணங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், கரும்புச்சுவை கொண்ட பொவொன்டோ, ஜிம்சோ, விப்ரோ மற்றும் கிளப் சோடா ரகங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. பிரிஸ்டில் எனும் பெயரில் மினரல் வாட்டரும் அறிமுகம் ஆனது.

நிறுவனம் உற்சாகமாக விரிவாக்க முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், குளிர்பாணங்கள் பழச்சாறு வகைகள் அறிமுகம் மிகவும் கவனமாக திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு என்று, காளிமார்க் குழுமத் தலைவர் கே.பி.ஆர்.தனுஷ்கோடி தெரிவித்தார்.

தமிழகத்தில் நான்கு தலைமுறையாக ஆதரவு பெற்ற பொவொன்டோவிற்கு மேலும் தெளிவான, சிறந்த, ஆரோக்கியமான குளிர்பாணங்கள் தேவை என்பதை உணர்ந்து, இவை அறிமுகம் செய்யப்படுவதாக அவர் கூறினார். இந்த அறிமுகங்கள் மூலம் கோடையில் அதிக சந்தை பங்கை பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆதாரம்: ஏ.என்.ஐ | தமிழில்: சைபர்சிம்மன்