Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ரூ.3 லட்சம் வரை கடன்; ரூ.50 ஆயிரம் மானியம் - 'கலைஞர் கைவினைத் திட்டம்' இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

இத்திட்டம், குடும்ப தொழில் அடிப்படையில் இல்லாமல் 25 கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரூ.3 லட்சம் வரை கடன்; ரூ.50 ஆயிரம் மானியம் - 'கலைஞர் கைவினைத் திட்டம்' இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Wednesday December 11, 2024 , 1 min Read

ரூ.50,000 மானியம் மற்றும் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கும் 'கலைஞர் கைவினைத் திட்டம்' இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலைஞர் கைவினைத்திட்டத்திற்கான அரசாணை சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பாசிமணி வேலைப்பாடு, பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடு, ஓவியம் வரைதல், வர்ணம் பூசுதல், துணி கலைவேலைபாடுகள், நகை செய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை, துணி வெளுத்தல், பொம்மை தயாரிப்பு, மலர் வேலை, தையல் தொழில், மரவேலைகள், படகு தயாரித்தல், உலோக வேலை, மண்பாண்டம், கூரை முடைதல், கட்டிட வேலை, கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், பொம்மை தயாரிப்பு என 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும்.

kalaignar kaivinai thittam

இது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

இத்திட்டம், குடும்ப தொழில் அடிப்படையில் இல்லாமல் 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலை தொடங்கவும், செய்யும் தொழிலை நவீன வடிவில் மேம்படுத்தவும் கடன் உதவிகளும், திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்.

இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடனுதவி பெறலாம். 25 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மேலும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் உண்டு. 35 வயது நிரம்பியவர்கள் இந்த தொழில் வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களை மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் தலைமையிலான குழு சரிபார்த்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். தமிழகத்தில் உள்ள கைவினைக் கலைஞர்கள் இத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்.