சுற்றுச்சூழலை மாசாக்கும் தீங்கான ரசாயன வெளிப்பாட்டை குறைப்பதில் MG இந்தியா சாதனை!
நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க, புதுமையாக்கம் மற்றும் நீடித்த வளர்ச்சி முயற்சிக்காக அறியப்படும் பிரிட்டனின் ஆட்டோமொபைல் பிராண்டான மோரிஸ் காரேஜ்ஸ், உலக சுற்றுச்சூழல் தினத்தன்று இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான முக்கிய மைல்கல்லை அறிவித்துள்ளது.
நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க, புதுமையாக்கம் மற்றும் நீடித்த வளர்ச்சி முயற்சிக்காக அறியப்படும் பிரிட்டனின் ஆடோமொபைல் பிராண்டான 'எம்ஜி' (மோரிஸ் காரேஜஸ்), உலக சுற்றுச்சூழல் தினத்தன்று இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான முக்கிய மைல்கல்லை அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள சேவை மையங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.72 லட்சம் எம்ஜி வாகனங்களில் ரிபெயிண்டிங் செயல்முறையில் தண்ணீர் சார்ந்த பெயிண்டை கவனமாக பயன்படுத்தியதன் விளைவாக 30 ஆயிரம் கிலோ ஆர்கானிக் மூலக்கூறு தொகுப்புகள் (VOCs) வாயு மண்டலத்தில் வெளியேற்றப்படுவதை குறைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சால்வெண்ட் சார்ந்த பெயிண்டை (400 கிராம்) விட தண்ணீர் சார்ந்த பெயிண்ட் குறைவான வி.ஓ.சிகளை (10 கிராம்) வெளிப்படுத்துவதால், 390 கிராம் தீங்கான பொருட்கள் வெளியேற்றப்படுவதை குறைக்கிறது. ரீபெயிண்டிங்கின் போது ஒவ்வொரு வாகனத்திற்கும் இது பொருந்தும்.
எம்ஜி இந்தியா 2019ல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை துவங்கியது முதல் தண்ணீர் சார்ந்த பெயிண்டை பயன்படுத்துகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு நட்பான நீடித்த வளர்ச்சி செயல்முறையை கடைப்பிடிக்கிறது.
"எம்ஜி இந்தியாவில் நீடித்த வளர்ச்சி என்பது எங்கள் செயல்முறையின் ஒரு அங்கமாக இருக்கிறது. தண்ணீர் சார்ந்த பெயிண்டை பயன்படுத்தியதன் மூலமாக 30 ஆயிரம் கிலோ விஓசிக்களை வெளியேற்றாமல் தடுத்தது குறித்து பெருமிதம் கொள்கிறோம். இந்த மைல்கல் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எங்களுக்கு உள்ள உறுதியை காட்டுகிறது,” என எம்ஜி இந்தியா முதன்மை வர்த்தக அதிகாரி சதீந்தர் சிங் பஜ்வா கூறியுள்ளார்.
விஓசி-கள் அறை வெப்பத்தில் எளிதாக ஆவியாகும் தன்மை கொண்டவை. பெயிண்ட் போன்றவற்றில் அவை வழக்கமாகக் காணப்பட்டாலும், அவை வாயு மண்டலத்தில் வெளியேற்றப்படுவது பலவித பாதிப்புகளை உண்டாக்கலாம். எனவே, அவற்றின் வெளியேற்றத்தை குறைப்பது முக்கியமாகிறது.
மேலும், எம்ஜி டிரைவாஷ் செயல்முறையும் மாதத்திற்கு 14 லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிக்க வழி செய்கிறது. இந்த முயற்சிகள் மற்றும் தண்ணீர் சார்ந்த பெயிண்டை பயன்படுத்துவது நிறுவனத்தின் சுற்றுச்சூழல் நட்பான அணுகுமுறையை உணர்த்துகிறது.
Edited by Induja Raghunathan