'இந்த நூற்றாண்டில் மனித குலத்திற்கான குறியீடுகளை ஏஐ எழுதுகிறது,' - பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி!
செயற்கை நுண்ணறிவு செயல் மாநாட்டை (AI Action Summit) பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரனோடு இணைந்து கூட்டாக தலைமை வகித்து பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு, அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தை மாற்றி அமைத்து வருவதாக குறிப்பிட்டார்.
பகிரப்பட்ட விழுமியங்களை காக்கவும், தொடர்புடைய இடர்களை எதிர்கொள்ளவும் தேவையான செயற்கை நுண்ணறிவுக்கான நிர்வாகம் மற்றும் தர நிர்ணயங்களை உருவாக்க கூட்டு சர்வதேச முயற்சி அவசியம், என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு செயல் மாநாட்டை (AI Action Summit) பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரனோடு இணைந்து கூட்டாக தலைமை வகித்த பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு, அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தை மாற்றி அமைத்து வருவதாக குறிப்பிட்டார்.

"நம்முடைய பகிரப்பட்ட விழுமியங்களை காக்க, இடர்களை எதிர்கொள்ள, நம்பிக்கையை உண்டாக்க தேவையான செயற்கை நுண்ணறிவுக்கான நிர்வாகம் மற்றும் தர நிர்ணயங்களை உருவாக்க கூட்டு சர்வதேச முயற்சி அவசியம்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
"இந்த நூற்றாண்டில் மனித குலத்திற்கான குறியீடுகளை (code) செயற்கை நுண்ணறிவு எழுதுகிறது," என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அச்சம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் மறைவதில்லை ஆனால், அதன் இயல்பு மற்றும் தன்மை மாறுவதையும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதையும் வரலாறு உணர்த்துகிறது என்றார்.
"செயற்கை நுண்ணறிவு சார்ந்த எதிர்காலத்திற்காக நம் மக்களின் திறன்கள் மற்றும் மறு திறனாக்கலில் நாம் முதலீடு செய்வது அவசியம் என்றும் இந்த மாநாட்டில் பேசிய போது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

'எரிசக்தித் துறை அடுத்த 5 ஆண்டுகளில் பன்மடங்கு வளர்ச்சி காணும்' - முதலீடு செய்ய பிரதமர் அழைப்பு!
Edited by Induja Raghunathan