பழைய vs புதிய வருமான வரி விதிப்பு முறை - எது அதிக பலன் தருகிறது?
பெரும்பாலான மத்தியதர மக்கள் புதிய வருமான வரி முறையின் கீழ் பலன் பெற்றாலும், முதலீடுகள் மீதான பிடித்தங்கள், கழிவுகள் பலனை இது இல்லாமல் செய்கிறது.
பொது பட்ஜெட்டின் இறுதிப்பகுதி ஊதியம் பெறுபவர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த படி, அமைந்ததிருந்தது. எதிர்வரும் நிதியாண்டு முதல், ஆண்டுக்கு 12.75 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் எனும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இது பலரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தாலும் புதிய வரி முறையின் புதிய விகிதங்கள் எல்லோருக்கும் சாதகமானதல்ல என்று தோன்றுகிறது.
“புதிய வரிமான வரிவிதிப்பு முறையின் கீழ், ரூ.12 லட்சம் வரை எந்த வருமான வரியும் செலுத்த வேண்டாம்,” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். முன்னதாக, இது ஆண்டுக்கு ரூ.7.75 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கே பொருந்துவதாக அமைந்தது.
பழைய வரிவிதிப்பு முறைக்கு பதிலாக அமையும் என கருதப்படும் புதிய வரிவிதிப்பு முறை, முதலீடு மீதான எந்த கழிவுகளையும் அனுமதிப்பதில்லை. எனினும், பலருக்கு இது குறைந்த வருமான வரி விகிதத்தை அளிக்கிறது.
“எதிர்வரும் மதிப்பீடு ஆண்டில் புதிய வரிவிதிப்பு முறையை நாடுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்,” என கிராண்ட் திராண்டன் பாரத் இணை இயக்குனர் சர்தக் பிரஷார் கூறுகிறார்.
பழைய முறையின் கீழ், பிடித்தம் மற்றும் கழிவுகளுக்கு உரியவர்கள் என்ற போதிலும், புதிய வரிவிதிப்பு விகிதம் கீழ், ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் செலுத்த வேண்டிய வரி கணிசமாக குறையும், என்றும் கூறுகிறார்.
புதிய வருமானவரி முறை யாருக்கு பலன்?
இருப்பினும், எல்லோருக்கும் இந்த முறை ஏற்றது என்று கூற முடியாது. 12.75 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் எவரும் தனிநபர் வருமான வரி செலுத்த வேண்டும்.
“இது அவர்களுக்கு பொருந்தக்கூடிய வீட்டுக்கடன் , வாடகை போன்ற கழிவுகள் சார்ந்தது,”என்கிறார்.
உதாரணத்திற்கு, ரூ.13.5 லட்சம் சம்பாதிப்பவர்கள், அவர்களுக்கான கழிவுகள் ரூ.6.5 லட்சம் எனில் பழைய வரிவிதிப்பு முறையின் கீழ், குறைந்த வரி செலுத்துவார்கள். காப்பீடு, வாடகை, கல்விக் கடன் போன்ற கழிவுகள் இதில் அடங்கும். அவர்கள் கழிவுகள் ரூ.5 லட்சம் என்றால், இரண்டு முறைகளிலும் அவர்கள் வரி விகிதம் ஒன்றாக அமையும். கழிவுகள் 5 லட்சத்திற்கு குறைவு என்றால், புதிய வரி விதிப்பில் வரி குறைவாக இருக்கும், என வருமானவரி சேவை தளம் கிளியர்டாக்ஸ் தெரிவிக்கிறது.
24 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு, ஆண்டுக்கான கழிவுகள் ரூ.7.75 லட்சத்திற்கு மேல் இருந்தால், பழைய வரிவிதிப்பு முறை சாதகமாக அமையும். எனினும், பெரும்பாலான வரி செலுத்துபவர்கள் புதிய முறைக்கு மாறும் வாய்ப்புள்ளது. ஏனெனில், 2023ல் இந்தியாவில் ஊதியம் பெறுபவர்களின் சராசரி வருமானம் ரூ.20,039 ஆக இருப்பதாக, தொழிலாளர்கள் தொடர்பான சர்வே தெரிவிக்கிறது.
அதிக வருமானம் பெறுபவர்கள்
அதிக நிகர மதிப்பு கொண்டவர்களுக்கு புதிய முறை ஈர்ப்புடையதாக இருக்காது. ஏனெனில், பழைய முறையில் பிடித்தம், கழிவுகளால் அதிகம் சேமிக்க முடியும். ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பாதிக்கும் ஒருவர், வழக்கமான கழுவுகளோடு, ரூ.40.09 லட்சம் வரி செலுத்த வேண்டியிருக்கும், என கிராண்ட் திராண்டன் தரவுகள் தெரிவிக்கிறது. புதிய முறையின் கீழ் இது ரூ.48.52 லட்சமாக இருக்கும்.
“அதிக வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு, புதிய வரி விதிப்பு முறை ஏற்றது அல்ல, என்கிறார் ஸ்டீல்த் ஸ்டார்ட் அப் நிறுவனர் அசிஷ் சுனேஜா.
”புதிய வருமான வரி முறைக்கு மாறியவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றாலும், பழைய முறையின் கீழ் செலுத்தப்படும் வருமான வரி விகிதம் அதிகமாக இருக்கும். இவர்கள் அதிகம் சம்பாதிப்பது காரணம்,” என்கிறார்.
2024 நிதியாண்டில் 72 சதவீத வரி செலுத்துபவர்கள் புதிய வரிமுறைக்கு மாறியுள்ளதாக பட்ஜெட் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கழிவுகள் மற்றும் பிடித்தங்கள் தொடர்பாக அரசு ரூ.2.2. லட்சம் கோடியை இழக்க வேண்டும், என கருதப்படுகிறது. இதில் வருமான வரி 80 சி பிரிவுன் கீழ் வரும் பிடித்தங்கள் ரூ.1.15 கோடி ஆகும்.
ஆங்கிலத்தில்: பார்வதி பெனு, தமிழில்: சைபர் சிம்மன்
Budget 2025: ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு!
Edited by Induja Raghunathan