'2024-25 நிதியாண்டில் 13 லட்சம் மின்வாகனங்கள் விற்பனை' - மத்திய அரசு தகவல்!
ஆதரவான கொள்கை அளிக்கும் ஊக்கத்தால், இந்திய மின் வாகன போக்குவரத்து துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சி காண இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் வரை முடிந்த 2024-25 ம் ஆண்டில் 13 லட்சத்திற்கும் மேல் மின்சார இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளதாக கணரக தொழில்கள் அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆதரவான கொள்கை அளிக்கும் ஊக்கத்தால், இந்திய மின் வாகன போக்குவரத்து துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சி காண இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2024-25 நிதியாண்டில், 11,49,334 மின்சார இருசக்கர வாகனங்கள் (e-2W) விற்பனை ஆகியுள்ளது. 2023-24 ம் ஆண்டில் விற்பனை ஆன 9,48,561 வாகனங்களுடன் ஒப்பிட்டால் இது 21 சதவீத வளர்ச்சி. அதே போல, 2024- 25 ; விற்பனை ஆன, 1,59,235 மூன்று சக்கர மின் வாகனங்கள், முந்தைய ஆண்டின் 1,01,581 வாகனங்களை விட 57 சதவீத வளர்ச்சி என்று அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் மின்வாகன போக்குவரத்து துறை அரசின் சலுகைகள், தொழில்நுட்ப மேம்பாடு, சுற்றுச்சூழல் காரணங்கள் போன்றவற்ரால் வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில், பசுமை போக்குவரத்து மற்றும் மின்வாகன தயாரிப்பு சூழலுக்கு ஊக்கம் அளிப்பதற்காக , 2024 செப்டம்பர் 29ம் தேதி, புதுமையாக்க வாகன மேம்பாட்டில் பிஎம் மின்வாகன ஊக்க புரட்சி (PM E-DRIVE) திட்டத்தை அமைச்சகம் அறிவிக்கையாக வெளியிட்டது.
இந்த திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 10,900 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், 2024-25ல், 10 லட்சத்திற்கும் மேலான மின் இருசக்கர வாகனங்கள் மற்றும், 1,22,982 மின் மூன்று சக்கர வாகனங்கள் அரசின் வாகன் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்த நிதியாண்டில் ஒரு மில்லியனுக்கும் மேல் மின் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.
"ஒரு மில்லியனுக்கும் மேல் மின் வாகனங்கள் விற்பனை ஆகியிருப்பது, FAME, EMPS, PM E-DRIVE உள்ளிட்ட அரசு திட்டங்களின் வெற்றிக்கு அடையாளமாக விளங்குகிறது. பசுமையான, தூய்மையான, தற்சார்புமிக்க இந்தியாவை உருவாக்கும் நம் உறுதியையும் இந்த மைல்கல் உணர்த்துகிறது,” என்று கனரக தொழில்கள அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.
முன்னதாக, 2024ல் 14.08 வாகனங்கள் விற்பனை ஆகி, 5.59 சதவீத சந்தை ஊடுருவலை கொண்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
மின் வாகனங்கள் ஏற்பு அதிகரிப்பது, மின் வாகனங்களில் மக்களின் நம்பிக்கையை உணர்த்துவதோடு, அரசின சலுகைகள் மற்றும் துறை புதுமையாக்க பலனையும் உணர்த்துகின்றன என்றார்.
"2024ம் ஆண்டில் மற்ற மின் வாகனங்கள் விற்பனை, 14,08,245-- 5.59% சந்தை பங்காக அமைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின், 10,22,994 வாகனங்கள் மற்றும் 4.44% பங்கை விட அதிகம் என தில்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தெரிவித்தார்.
செய்தி- பிடிஐ
Edited by Induja Raghunathan